பாஹி ரமா ரமண மாம்
பாஹி ஸத்3கு3ண க3ண ஹரே ராம
சரணம்
சரணம் 1
சிந்த மான 1நீது3 கருண
இஸுமந்த ராது3 ஹரே ராம (பா)
சரணம் 2
எந்தனி ஸைரிந்து
2நேனேமனி வேகி3ந்து ஹரே ராம (பா)
சரணம் 3
அஹஹ 3சிலுக கூன
ப்3ரஹ்மாஸ்த்ரமுனகு தகு3னா ஹரே ராம (பா)
சரணம் 4
சேதி மல்லெ பூவு
கு3ண்ட்3ராதிகோர்வ போது3 ஹரே ராம (பா)
சரணம் 5
4தோ3ஸ பண்டு3கெட்டு ராம
தோசுனினுப கட்டு ஹரே ராம (பா)
சரணம் 6
தே3வ தே3வ வென்ன கத்தி
தெ3ப்3ப3கோர்சுகொனுனா ஹரே ராம (பா)
சரணம் 7
தல்லி தண்ட்3ரி ப்3ரோவகுண்டே
தனயுனிகே த்3ரோவ ஹரே ராம (பா)
சரணம் 8
ராஜ வர்ய ஸ1ரண
த்யாக3ராஜ வினுத சரண ஹரே ராம (பா)
பொருள் - சுருக்கம்
- இரமை மணாளா! நற்பண்புகளோனே! ஓ இராமா!
- தேவ தேவா!
- சிறந்த மன்னர்களின் புகலே! தியாகராசன் போற்றும் திருவடிகளோனே!
- காப்பாய், என்னைக் காப்பாய்;
- உனது சிந்தனை அகல, கருணை சிறிதளவும் வாராது;
- எவ்வளவென்று பொறுப்பேன்? நான் என்னவென்று புழுங்குவேன்?
- ஐயகோ! கிளிக்குஞ்சு பிரமாத்திரத்திற்குத் தகுமா?
- கை மல்லிகைப் பூ உரலினைத் தாங்காது;
- வெள்ளரிப்பழத்திற்கு, எங்ஙனம் தோன்றும், இரும்புக் காப்பு?
- வெண்ணெய், கத்தி வெட்டினைத் தாளுமா?
- தாய் தந்தையர் காவாதிருந்தால், தனயனுக்கென்ன வழி?
- ஐயகோ! கிளிக்குஞ்சு பிரமாத்திரத்திற்குத் தகுமா?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாஹி/ ரமா/ ரமண/ மாம்/
காப்பாய்/ இரமை/ மணாளா/ என்னை/
பாஹி/ ஸத்3-கு3ண க3ண/ ஹரே/ ராம/
காப்பாய்/ நற்பண்புகளோனே/ ஓ/ இராமா/
சரணம்
சரணம் 1
சிந்த/ மான/ நீது3/ கருண/
சிந்தனை/ அகல/ உனது/ கருணை/
இஸுமு/-அந்த/ ராது3/ ஹரே/ ராம/ (பா)
சிறிது/ அளவும்/ வாராது/ ஓ/ இராமா/
சரணம் 2
எந்த/-அனி/ ஸைரிந்து/
எவ்வளவு/ என்று/ பொறுப்பேன்/
நேனு/-ஏமி/-அனி/ வேகி3ந்து/ ஹரே/ ராம/ (பா)
நான்/ என்ன/ என்று/ புழுங்குவேன்/ ஓ/ இராமா/
சரணம் 3
அஹஹ/ சிலுக/ கூன/
ஐயகோ/ கிளி/ குஞ்சு/
ப்3ரஹ்ம/-அஸ்த்ரமுனகு/ தகு3னா/ ஹரே/ ராம/ (பா)
பிரம/ அத்திரத்திற்கு/ தகுமா/ ஓ/ இராமா/
சரணம் 4
சேதி/ மல்லெ/ பூவு/
கை/ மல்லிகை/ பூ/
கு3ண்ட்3ராதிகி/-ஓர்வ போது3/ ஹரே/ ராம/ (பா)
உரலினை/ தாங்காது/ ஓ/ இராமா/
சரணம் 5
தோ3ஸ/ பண்டு3கு/-எட்டு/ ராம/
வெள்ளரி/ பழத்திற்கு/ எங்ஙனம்/ இராமா/
தோசுனு/-இனுப/ கட்டு/ ஹரே/ ராம/ (பா)
தோன்றும்/ இரும்பு/ காப்பு/ ஓ/ இராமா/
சரணம் 6
தே3வ/ தே3வ/ வென்ன/ கத்தி/
தேவ/ தேவா/ வெண்ணெய்/ கத்தி/
தெ3ப்3ப3கு/-ஓர்சுகொனுனா/ ஹரே/ ராம/ (பா)
வெட்டினை/ தாளுமா/ ஓ/ இராமா/
சரணம் 7
தல்லி/ தண்ட்3ரி/ ப்3ரோவக/-உண்டே/
தாய்/ தந்தையர்/ காவாது/ இருந்தால்/
தனயுனிகி/-ஏ/ த்3ரோவ/ ஹரே/ ராம/ (பா)
தனயனுக்கு/ என்ன/ வழி/ ஓ/ இராமா/
சரணம் 8
ராஜ/ வர்ய/ ஸ1ரண/
மன்னர்களின்/ சிறந்த/ புகலே/
த்யாக3ராஜ/ வினுத/ சரண/ ஹரே/ ராம/ (பா)
தியாகராசன்/ போற்றும்/ திருவடிகளோனே/ ஓ/ இராமா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சரணங்களின் வரிசை சில புத்தகங்களில் மாற்றிக் கொடுக்குப்பட்டுள்ளது.
1 - நீது3 கருண இஸுமந்த - நீது3 இஸுமந்த கருண.
2 - நேனேமனி - நேனெந்தனி.
Top
மேற்கோள்கள்
3 - சிலுக கூன ப்3ரஹ்மாஸ்த்ரமுனகு தகு3னா - கிளிக் குஞ்சுக்கு பிரமாத்திரம் தகுமா - வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம், 38-வது அத்தியாயத்தில் சீதை, அனுமனுக்கு, தனக்கும் இராமனுக்கும் மட்டுமே தெரிந்த, ஒரு நிகழ்ச்சியினை விவரிக்கின்றாள். அதாவது, ஒரு நாள் இராமன், பகலுணவிற்குப்பின், சீதையின் மடியில் தலைவைத்து உறங்கிக்கொண்டிருந்த வேளை, ஒரு காகம், சீதையின் தனங்களை, உணவுக்கென, கொத்தியது. கணவனின் உறக்கத்திற்கு இடைஞ்சல் கூடாதென, சீதை, அதனைப் பொறுத்துக் கொண்டிருந்தாள். உறங்கி எழுந்த இராமன், சீதையின் தனங்களில் குருதி வழிவதனையும், அந்த காகத்தினையும் கண்டான். உடனே, மிக்கு கோபமடைந்து, அந்த காக்கையினைக் கொல்ல, புல்லில் பிரமாத்திரத்தினை செபித்து, அதன்மீது ஏவினான். அந்த காகம், மூன்றுவுலகங்களையும் சுற்றி, தனக்குப் புகல் தருவோர் யாருமின்றி, இராமனிடமே சரணடைந்தது. இராமன், அந்தக் காகத்தின் ஓர் கண்ணை, அந்த பிரமாத்திரத்திற்கு இலக்காக்கி, அதனின் உயிரைக் காத்தான். இதனைத் தான், தியாகராஜர், மறைமுகமாக, 'ஒரு கிளிக்குஞ்சுக்கு பிரமாத்திரம் தகுமா?' என்று கேட்கின்றார் என்று கருதுகின்றேன்.
Top
விளக்கம்
4 - தோ3ஸ பண்டு3 - வெள்ளரிப்பழத்திற்கு இரும்புக் காப்பு - வெள்ளரிப்பழம் பழுக்கையில், அதனை பறவைகள் கொத்தாமல் இருக்க, அதன்மேல் துணியினைச் சுற்றிவைப்பார்கள், பயிரிடுவோர். இதனை, தியாகராஜர், துணிக்குப் பதிலாக, 'இரும்புக் காப்பு போட்டால், எப்படியிருக்கும், அந்தப் பழத்திற்கு' என்று கேட்கின்றார்.
Top
Updated on 11 Mar 2010
No comments:
Post a Comment