நோரேமி ஸ்ரீ ராம நின்னாட3
அனுபல்லவி
ஸாரெ ஸாரெகுனு பாப கர்மமுலு
ஸல்புசுனுண்டு3 நாவண்டி வானிகி (நோ)
சரணம்
1பாபுலாருகு3ரு வஸ்1யுலு கா3க
பண்ட்3லிகி3லிஞ்சுசு தருணுலகை
ஸீதா பதி நிஜ ப4க்தியு தெலியனி
2த்யாக3ராஜுனிகி3யொருலகைன (நோ)
பொருள் - சுருக்கம்
இராமா! சீதாபதி!
- வாயென்ன, உன்னைக் குறை சொல்ல?
- எவ்வமயமும் பாவச் செயல்களை இயற்றிக்கொண்டிருக்கும் என்போன்றவனுக்கு
- வாயென்ன, உன்னைக் குறை சொல்ல?
- பாவிகள் அறுவர் (தன்) வயப்படாது,
- பல்லிளித்துக் கொண்டு, வனிதையருக்காக,
- உண்மையான பக்தியினை அறியாத,
- தியாகராசனுக்கு, மற்றவருக்காகிலும்
- பாவிகள் அறுவர் (தன்) வயப்படாது,
- வாயென்ன, உன்னைக் குறை சொல்ல?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நோரு/-ஏமி/ ஸ்ரீ ராம/ நின்னு/-ஆட3/
வாய்/ என்ன/ ஸ்ரீ ராமா/ உன்னை/ குறை சொல்ல/
அனுபல்லவி
ஸாரெ ஸாரெகுனு/ பாப/ கர்மமுலு/
எவ்வமயமும்/ பாவ/ செயல்களை/
ஸல்புசுனு/-உண்டு3/ நாவண்டி/ வானிகி/ (நோ)
இயற்றிக்கொண்டு/ இருக்கும்/ என்போன்ற/ அவனுக்கு/ வாயென்ன...
சரணம்
பாபுலு/-ஆருகு3ரு/ வஸ்1யுலு கா3க/
பாவிகள்/ அறுவர்/ (தன்) வயப்படாது/
பண்ட்3லு/-இகி3லிஞ்சுசு/ தருணுலகை/
பல்/ இளித்துக் கொண்டு/ வனிதையருக்காக/
ஸீதா/ பதி/ நிஜ/ ப4க்தியு/ தெலியனி/
சீதா/ பதி/ உண்மையான/ பக்தியினை/ அறியாத/
த்யாக3ராஜுனிகி/-ஒருலகு/-ஐன/ (நோ)
தியாகராசனுக்கு/ மற்றவருக்கு/ ஆகிலும்/ வாயென்ன...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பாபுலாருகு3ரு - பாபுலார்கு3ரு.
2 - த்யாக3ராஜுனிகி - த்யாக3ராஜுனி : 'த்யாக3ராஜுனிகி' என்பதே சரியாகும்.
3 - ஒருலகைன - ஒருலகை : 'ஒருலகைன' என்பதே சரியாகும்.
Top
மேற்கோள்கள்
1 - பாபுலாருகு3ரு - பாவிகள் அறுவர் - உட்பகை ஆறு - இச்சை, சினம், பேராசை, மோகம், செருக்கு, காழ்ப்பு.
Top
விளக்கம்
Updated on 08 Mar 2010
No comments:
Post a Comment