Friday, March 12, 2010

தியாகராஜ கிருதி - ப4வ ஸன்னுத - ராகம் வராளி - Bhava Sannuta - Raga Varali

பல்லவி
4வ ஸன்னுத நாத34மெந்த க4னீ-ப4வமோ

அனுபல்லவி
4வ நீரதி4 தாரக ஸுகு3
நாகப4யமிய்யனு 1தோசனந்து3ப்3ஜ (ப4வ)

சரணம்
சரணம் 1
பாப ஹரண ஸ்ரீ ரகு4வர
மது4ராலாப தீ3ன ஜன த4ன பாவன நீ
2ப்ராபு கலுக3 கோரி தொ3ரகனி
பரிதாபமு கனி மனஸு கரக3னந்து3கு (ப4வ)


சரணம் 2
கருணாகர நீ சரணமு ஸி1லனு
வர நாரிக3 ஜேஸினதி3 கா3கனு
31ரமஸுருனி காசெனே நீகு நா
து3ரிதமுலனு போகொ3ட்டி ப்3ரோசுடகு (ப4வ)


சரணம் 3
இவ்வித4முனனுண்டு3 நனு ஜூசி
யௌவன க3ர்வமு மிஞ்சின நருலு
நவ்வகா3னு ரோஸமேல ராதோ3-
யெவ்வரி தோட3னு 4வின்னவிந்துனு 5ராத3னி (ப4வ)


சரணம் 4
ஈ ஜன்மமுனனு மோஸ போகனு
நீ ஜபமுலகு விகா4தமைன ப4
வ்யாஜமுலெல்லனு ரோஸின
த்யாக3ராஜுனி பைனி த3ய ரானந்து3கு (ப4வ)


பொருள் - சுருக்கம்
  • பவனால் போற்றப் பெற்றோனே!
  • பிறவிக் கடலைக் கடத்துவிப்போனே! நற்குணத்தோனே! மலரோனால் போற்றப் பெற்றோனே!
  • பாவங்களைக் களைவோனே! இரகுவரா! இனிய மொழியோனே! எளியோர் செல்வமே! புனிதனே!
  • கருணாகரனே!

  • எனது பாவம் எத்தனை இறுகியதோ!

  • உனது திருவடி, கல்லினை உயர் மடந்தை யாக்கியது; அஃதன்றி, அம்பு (ஒர்) அரக்கனைக் காத்ததே!
  • உனக்கு, எனது பாவங்களைப் போக்கடித்து, காப்பதற்கு, எனது பாவம் எத்தனை இறுகியதோ!

  • இவ்விதமுள்ள என்னைக் கண்டு, இளமைச் செருக்கு மிகுந்த மக்கள் நகைக்க, (உனக்கு) நாணமேன் வாராதோ? எவரிடம் முறையிடுவேன் (உனக்கு நாணம்) வாராதென்று?

    • எனக்கு அடைக்கலமளிக்கத் தோன்றாததற்கு,
    • உனது ஆதரவு உண்டாகக் கோரி, கிடைக்காத பரிதாபத்தினைக் கண்டும், (உனது) உள்ளம் உருகாததற்கு,
    • இப்பிறவியில், மோசம் போகாது, உனது செபங்களுக்கு இடையூறான, உலக சாக்குப் போக்குகளையெல்லாம் தவிர்த்த, தியாகராசனின் மீது தயை வாராததற்கு,

  • எனது பாவம் எத்தனை இறுகியதோ!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
4வ/ ஸன்னுத/ நாது3/-அக4மு/-எந்த/ க4னீ-ப4வமோ/
பவனால்/ போற்றப் பெற்றோனே/ எனது/ பாவம்/ எத்தனை/ இறுகியதோ/


அனுபல்லவி
4வ/ நீரதி4/ தாரக/ ஸுகு3ண/ நாகு/-
பிறவி/ கடலை/ கடத்துவிப்போனே/ நற்குணத்தோனே/ எனக்கு/

அப4யமு/-இய்யனு/ தோசனி-அந்து3கு/-அப்3ஜ-(ப4வ)/
அடைக்கலம்/ அளிக்க/ தோன்றாததற்கு/ மலரோனால்/ போற்ற...


சரணம்
சரணம் 1
பாப/ ஹரண/ ஸ்ரீ ரகு4வர/
பாவங்களை/ களைவோனே/ ஸ்ரீ ரகுவரா/

மது4ர/-ஆலாப/ தீ3ன ஜன/ த4ன/ பாவன/ நீ/
இனிய/ மொழியோனே/ எளியோர்/ செல்வமே/ புனிதனே/ உனது/

ப்ராபு/ கலுக3/ கோரி/ தொ3ரகனி/
ஆதரவு/ உண்டாக/ கோரி/ கிடைக்காத/

பரிதாபமு/ கனி/ மனஸு/ கரக3னி-அந்து3கு/ (ப4வ)
பரிதாபத்தினை/ கண்டும்/ (உனது) உள்ளம்/ உருகாததற்கு/ பவனால்...


சரணம் 2
கருணாகர/ நீ/ சரணமு/ ஸி1லனு/
கருணாகரனே/ உனது/ திருவடி/ கல்லினை/

வர/ நாரிக3/ ஜேஸினதி3/ கா3கனு/
உயர்/ மடந்தை/ யாக்கியது/ அஃதன்றி/

1ரமு/-அஸுருனி/ காசெனே/ நீகு/ நா/
அம்பு/ (ஒர்) அரக்கனை/ காத்ததே/ உனக்கு/ எனது/

து3ரிதமுலனு/ போகொ3ட்டி/ ப்3ரோசுடகு/ (ப4வ)
பாவங்களை/ போக்கடித்து/ காப்பதற்கு/ பவனால்...


சரணம் 3
இவ்வித4முனனு/-உண்டு3/ நனு/ ஜூசி/
இவ்விதம்/ உள்ள/ என்னை/ கண்டு/

யௌவன/ க3ர்வமு/ மிஞ்சின/ நருலு/
இளமை/ செருக்கு/ மிகுந்த/ மக்கள்/

நவ்வகா3னு/ ரோஸமு/-ஏல/ ராதோ3/-
நகைக்க/ (உனக்கு) நாணம்/ ஏன்/ வாராதோ/

எவ்வரி தோட3னு/ வின்னவிந்துனு/ ராது3/-அனி/ (ப4வ)
எவரிடம்/ முறையிடுவேன்/ (உனக்கு நாணம்) வாராது/ என்று/


சரணம் 4
ஈ/ ஜன்மமுனனு/ மோஸ/ போகனு/
இந்த/ பிறவியில்/ மோசம்/ போகாது/

நீ/ ஜபமுலகு/ விகா4தமைன/ ப4வ/
உனது/ செபங்களுக்கு/ இடையூறான/ உலக/

வ்யாஜமுலு/-எல்லனு/ ரோஸின/
சாக்குப் போக்குகளை/ யெல்லாம்/ தவிர்த்த/

த்யாக3ராஜுனி/ பைனி/ த3ய/ ரானி-அந்து3கு/ (ப4வ)
தியாகராசனின்/ மீது/ தயை/ வாராததற்கு/ பவனால்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தோசனந்து3கு - தோசெனந்து3கு : 'தோசெனந்து3கு' என்பது எதிரிடையான பொருள் கொடுப்பதனால், அது தவறாகும்.

2 - ப்ராபு - தா3பு.

4 - வின்னவிந்துனு - வின்னவிந்து.

Top

மேற்கோள்கள்
3 - 1ரமஸுருனி காசெனே - அம்பு அரக்கனைக் காத்ததே - அரக்கன் - காகாசுரன் அல்லது மாரீசனைக் குறிக்கும்

Top

விளக்கம்
5 - ராத3னி - (நாணம்) வாராதென - ரோஸமு ராதோ3? (நாணம் வாராதோ?) என்பதனைக் குறிக்கும்.

பவன் - சிவன்
மடந்தை - அகலியை

Top


Updated on 12 Mar 2010

No comments: