மரகத மணி 1வர்ண ராம நன்னு
மரவக நாயன்ன
அனுபல்லவி
பரம 2புருஷ 3பி3ன்ன ப்3ரோவுமு
தே3வர ஸ1ரணனுகொன்ன (ம)
சரணம்
வர ப4க்த ஸுபர்ண வாஹன
கருணா 4ரஸ பூர்ண
த4ரணி தனயகுன்ன ப்ரேம ரஸமு
5த்யாக3ராஜுகீயன்ன (ம)
பொருள் - சுருக்கம்
- மரகத மணி வண்ணா! இராமா! எனது தந்தையே!
- பரம்பொருளே! இறைவா!
- சிறந்த தொண்டன், அழகிய சிறகுடையோன் வாகனனே! கருணை ரசம் நிறைந்தோனே! தந்தையே!
- விரைவில் காப்பாயய்யா;
- சரணடைந்த என்னை மறக்காதே;
- புவிமகளுக்கு (உன்னிடம்) உள்ள காதல் ரசத்தினை, தியாகராசனுக்கு அளிப்பாய்.
- விரைவில் காப்பாயய்யா;
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மரகத/ மணி/ வர்ண/ ராம/ நன்னு/
மரகத/ மணி/ வண்ணா/ இராமா/ என்னை/
மரவக/ நா/-அன்ன/
மறக்காதே/ எனது/ தந்தையே/
அனுபல்லவி
பரம புருஷ/ பி3ன்ன/ ப்3ரோவுமு/
பரம்பொருளே/ விரைவில்/ காப்பாயய்யா/
தே3வர/ ஸ1ரணு/-அனுகொன்ன/ (ம)
இறைவா/ சரண்/ அடைந்த/ மரகத...
சரணம்
வர/ ப4க்த/ ஸுபர்ண/ வாஹன/
சிறந்த/ தொண்டன்/ அழகிய சிறகுடையோன்/ வாகனனே/
கருணா/ ரஸ/ பூர்ண/
கருணை/ ரசம்/ நிறைந்தோனே/
த4ரணி/ தனயகு/-உன்ன/ ப்ரேம/ ரஸமு/
புவி/ மகளுக்கு/ (உன்னிடம்) உள்ள/ காதல்/ ரசத்தினை/
த்யாக3ராஜுகு/-ஈ/-அன்ன/ (ம)
தியாகராசனுக்கு/ அளிப்பாய்/ தந்தையே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வர்ண - வர்ணா.
2 - புருஷ - புருஷா.
5 - த்யாக3ராஜுகீயன்ன - த்யாக3ராஜுகீவன்ன.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
3 - பி3ன்ன - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில், இச்சொல்லுக்கு, 'விரைவில்' என்று பொருளாகும். தெலுங்கு அகராதியின்படி, 'பி3ரன', 'பி3ரின', 'பி3ன்னெ' ஆகிய சொற்களே 'விரைவில்' என்ற பொருளுடைத்தன.
4 - ரஸ - கருணை ரசம், காதல் ரசம் - நவரசங்கள் எனப்படும் உணர்ச்சிகள்
சிறந்த தொண்டன் - அழகிய சிறகுடையோன் - கருடன்
புவிமகள் - சீதை
Top
Updated on 13 Mar 2010
No comments:
Post a Comment