1வத்3த3யுண்டே3தே3 ப3ஹு மேலு வாரிஜாக்ஷ
அனுபல்லவி
அத்3த3ம்பு மோமு கல ரங்க3 அனுபம மோஹனாங்க3 (வ)
சரணம்
சரணம் 1
ப3ங்கா3ரு பூல பூஜிந்து பா3கு3க3 நின்னு ஸேவிந்து
2ஸ்1ரு2ங்கா3ரிஞ்சி கௌகி3லிந்து 3சேரி நே நின்னாராதி4ந்து (வ)
சரணம் 2
முங்க3ல நே நடியிந்து முத்3து3 மாடல தேலிந்து
ஸங்கீ3தமு வினிபிந்து ஸாரெகு நே ஸந்தோஷிந்து (வ)
சரணம் 3
ஸத்த மாத்ரமா நீயந்து3 சித்தமு கானி போதெ3ந்து3
தத்தரமு தீர்சுகொந்து3 த்யாக3ராஜ ஸுலபு4ட3ந்து3 (வ)
பொருள் - சுருக்கம்
- கமலக்கண்னா!
- கண்ணாடி போலும் முகமுடைய அரங்கா! உவமையற்ற எழிலங்கத்தோனே!
- கேவலம் சத்தே!
- அருகிலிருத்தலே சாலச் சிறந்தது;
- பொன் மலர்களினால் வழிபடுவேன்;
- நன்குன்னை சேவிப்பேன்;
- சிங்காரித்துன்னை அணைப்பேன்;
- கலந்து நானுன்னை ஆராதிப்பேன்;
- (உனது) முன்னம் நடமிடுவேன்;
- இனிய சொற்களில் மிதக்கவைப்பேன்;
- இசை கேட்பிப்பேன்;
- எவ்வமயமும் நான் (உன்னை) மகிழ்விப்பேன்;
- பொன் மலர்களினால் வழிபடுவேன்;
- உன்னிடம் சித்தமேயன்றி, செல்லாதெங்கும்;
- பதற்றத்தினைத் தீர்த்துக்கொள்வேன், தியாகராசனுக்கு எளியோனிடம்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வத்3த3/-உண்டே3தே3/ ப3ஹு/ மேலு/ வாரிஜ/-அக்ஷ/
அருகில்/ இருத்தலே/ சால/ சிறந்தது/ கமல/ கண்னா/
அனுபல்லவி
அத்3த3ம்பு/ மோமு/ கல/ ரங்க3/ அனுபம/ மோஹன/-அங்க3/ (வ)
கண்ணாடி போலும்/ முகம்/ உடைய/ அரங்கா/ உவமையற்ற/ எழி்ல்/ அங்கத்தோனே/
சரணம் 1
ப3ங்கா3ரு/ பூல/ பூஜிந்து/ பா3கு3க3/ நின்னு/ ஸேவிந்து/
பொன்/ மலர்களினால்/ வழிபடுவேன்/ நன்கு/ உன்னை/ சேவிப்பேன்/
ஸ்1ரு2ங்கா3ரிஞ்சி/ கௌகி3லிந்து/ சேரி/ நே/ நின்னு/-ஆராதி4ந்து/ (வ)
சிங்காரித்து/ (உன்னை) அணைப்பேன்/ கலந்து/ நான்/ உன்னை/ ஆராதிப்பேன்/
சரணம் 2
முங்க3ல/ நே/ நடியிந்து/ முத்3து3/ மாடல/ தேலிந்து/
(உனது) முன்னம்/ நான்/ நடமிடுவேன்/ இனிய/ சொற்களில்/ மிதக்கவைப்பேன்/
ஸங்கீ3தமு/ வினிபிந்து/ ஸாரெகு/ நே/ ஸந்தோஷிந்து/ (வ)
இசை/ கேட்பிப்பேன்/ எவ்வமயமும்/ நான்/ (உன்னை) மகிழ்விப்பேன்/
சரணம் 3
ஸத்த/ மாத்ரமா/ நீ-அந்து3/ சித்தமு/ கானி/ போது3/-எந்து3/
சத்தே/ கேவலம்/ உன்னிடம்/ சித்தமே/ அன்றி/ செல்லாது/ எங்கும்/
தத்தரமு/ தீர்சுகொந்து3/ த்யாக3ராஜ/ ஸுலபு4டு3-அந்து3/ (வ)
பதற்றத்தினை/ தீர்த்துக்கொள்வேன்/ தியாகராசனுக்கு/ எளியோனிடம்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வத்3த3யுண்டே3தே3 - வத்3த3யுண்டு3னதே3.
3 - சேரி நே நின்னாராதி4ந்து - சேரி நின்னாராதி4ந்து.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும். இப்பாடலில், தியாகராஜர், பிரகலாதனின் உள்ள விழைவினை வருணிக்கின்றார்.
2 - ஸ்1ரு2ங்கா3ரிஞ்சி - சிங்காரித்து - இது இறைவனைச் சிங்காரிப்பதனைக் குறிக்கும். தன்னை சிங்காரம் செய்துகொள்வதென்றால், 'ஸ்1ரு2ங்கா3ரிஞ்சுகொனி' என்றிருக்கவேண்டும். மேலும், இந்தப் பாடலுக்கு முற்பட்ட வசனத்தினில், பிரகலாதன், இறைவனை சிங்காரித்து மகிழ விரும்புவதாகக் கூறப்பட்டுள்ளது.
3 - ஆராதி4ந்து - ஆராதிப்பேன் - பொதுவாக, 'ஆராதித்தல்' என்பது இறைவனுக்குப் பணிவிடை செய்வதனைக் குறிக்கும். இவ்விடத்தில், இதற்கு முன் வரும், 'கலந்து' என்ற சொல்லினால், இஃது, 'காந்தாஸக்தி' எனப்படும், இறைவனைத் தலைவனாகவும், தொண்டன், தான் அவனுக்கு மனைவியாகவும் உணர்ந்து, இயற்றும் வழிபாட்டினைக் குறிக்கும்.
Top
ஆராதித்தல் - உள்ளம் குளிர்வித்தல்
சத்து - பரம்பொருளின் இலக்கணம் - (சச்சிதானந்தம்) 'சத்-சித்-ஆனந்தம்' - இதனில் 'சத்'தென
கேவலம் - தனித்தன்மை
எளியோன் - எளிதில் அணுகப்பெறுவோன்
Top
Updated on 14 Mar 2010
No comments:
Post a Comment