Thursday, February 11, 2010

தியாகராஜ கிருதி - எவ்வரே ராமய்ய - ராகம் கா3ங்கே3ய பூ4ஷணி - Evvare Ramayya - Raga Gangeya Bhushani

பல்லவி
எவ்வரே ராமய்ய நீ ஸரி

அனுபல்லவி
ரவ்வகு தாவு லேக ஸு-ஜனுலனு
ராஜிக3 1ரக்ஷிஞ்சுவா(ரெவ்வரே)

சரணம்
பக3வானிகி ஸோத3ருட3னியெஞ்சக
4க்தினெரிகி3 லங்கா 2பட்டமொஸக3கா3
நக34ர ஸுர பூ4-ஸுர பூஜித வர
நாக31யன த்யாக3ராஜ வினுத ஸரி(யெவ்வரே)


பொருள் - சுருக்கம்
  • இராமய்யா! மலையைச் சுமந்தோனே! வானோர், அந்தணர் தொழும் உயர் அரவணையோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

    • எவரே உனக்கு நிகர்?
    • சச்சரவுக்கிடமின்றி, நன்மக்களை சம்மதத்துடன் காப்பவர் எவரே, உனக்கு நிகர்?
      • பகைவனின் சோதரனென எண்ணாது, பக்தியினையறிந்து, இலங்கையின் பட்டத்தினை யளிக்க,

    • நிகர் எவரே, உனக்கு?



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    எவ்வரே/ ராமய்ய/ நீ/ ஸரி/
    எவரே/ இராமய்யா/ உனக்கு/ நிகர்/


    அனுபல்லவி
    ரவ்வகு/ தாவு/ லேக/ ஸு-ஜனுலனு/
    சச்சரவுக்கு/ இடம்/ இன்றி/ நன்மக்களை/

    ராஜிக3/ ரக்ஷிஞ்சுவாரு/-(எவ்வரே)
    சம்மதத்துடன்/ காப்பவர்/ எவரே...


    சரணம்
    பக3வானிகி/ ஸோத3ருடு3/-அனி/-எஞ்சக/
    பகைவனின்/ சோதரன்/ என/ எண்ணாது/

    4க்தினி/-எரிகி3/ லங்கா/ பட்டமு/-ஒஸக3கா3/
    பக்தியினை/ அறிந்து/ இலங்கையின்/ பட்டத்தினை/ அளிக்க/

    நக3/ த4ர/ ஸுர/ பூ4-ஸுர/ பூஜித/ வர/
    மலையை/ சுமந்தோனே/ வானோர்/ அந்தணர்/ தொழும்/ உயர்/

    நாக3/ ஸ1யன/ த்யாக3ராஜ/ வினுத/ ஸரி/-(எவ்வரே)
    அரவு/ அணையோனே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ நிகர்/ எவரே...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    1 - ரக்ஷிஞ்சு - ரக்ஷிஞ்சே.

    2 - பட்டமு - பட்ணமு - பட்டணமு : வால்மீகி ராமாயணத்தில் (யுத்த காண்டம், 19-வது அத்தியாயம், 19-வது செய்யுள்) ராமன், 'உன்னை இலங்கைக்கு மன்னனாக்குகின்றேன்' என்று விபீடணனனிடம் கூறுகின்றான். எனவே 'பட்டமு' என்ற சொல்லே மிக்கு பொருந்தும்.

    Top

    மேற்கோள்கள்

    விளக்கம்
    பகைவன் - இராவணன்
    பகைவனின் சோதரன் - விபீடணன்
    மலையைச் சுமந்தோனே - மந்தர மலை அல்லது கோவர்த்தன மலை

    Top


    Updated on 11 Feb 2010
  • No comments: