Friday, February 12, 2010

தியாகராஜ கிருதி - பரமாத்முடு3 - ராகம் வாக3தீ4ஸ்1வரி - Paramatmudu - Raga Vagadhisvari

பல்லவி
1பரமாத்முடு3 2வெலிகே3 முச்சட
பா33 3தெலுஸுகோரே

அனுபல்லவி
4ஹரியட ஹருட3 ஸுருலட நருலட
அகி2லாண்ட3 கோடுலட 5அந்த3ரிலோ (ப)

சரணம்
33னானில தேஜோ-ஜல பூ4-மயமகு3
ம்ரு2323 நக3 தரு கோடுலலோ
6ஸ-கு3ணமுலோ வி-கு3ணமுலோ ஸததமு
ஸாது4 த்யாக3ராஜாதி3 ஆஸ்1ரிதுலலோ (ப)


பொருள் - சுருக்கம்
  • பரமான்மா ஒளிரும் சிறப்பினை நன்கு தெரிந்துகொள்வாய்;

    • அரியாம், அரனாம், வானோராம், மனிதராம், அனைத்தண்ட கோடிகளாம் -

  • யாவற்றிலும் பரமான்மா ஒளிரும் சிறப்பினை நன்கு தெரிந்துகொள்வாய்;

    • விண், காற்று, நெருப்பு, நீர், புவி - (ஐம்பூதங்கள்) மயமான மிருகம், பறவை, மலை, மரம் கோடிகளிலும்,
    • குணங்களிலும், குணங்களற்றும்,
    • சாது தியாகராசன் ஆகிய (அவனை) புகலடைந்தோரிலும்,

  • எவ்வமயமும், பரமான்மா ஒளிரும் சிறப்பினை நன்கு தெரிந்துகொள்வாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பரமாத்முடு3/ வெலிகே3/ முச்சட/
பரமான்மா/ ஒளிரும்/ சிறப்பினை/

பா33/ தெலுஸுகோரே/
நன்கு/ தெரிந்துகொள்வாய்/


அனுபல்லவி
ஹரி-அட/ ஹருடு3-அட/ ஸுருலு-அட/ நருலு-அட/
அரியாம்/ அரனாம்/ வானோராம்/ மனிதராம்/

அகி2ல/-அண்ட3/ கோடுலு-அட/ அந்த3ரிலோ/ (ப)
அனைத்து/ அண்ட/ கோடிகளாம்/ - யாவற்றிலும்/ பரமான்மா...


சரணம்
33ன/-அனில/ தேஜோ/-ஜல/ பூ4-/மயமகு3/
விண்/ காற்று/ நெருப்பு/ நீர்/ புவி/ (ஐம்பூதங்கள்) மயமான/

ம்ரு23/ க23/ நக3/ தரு/ கோடுலலோ/
மிருகம்/ பறவை/ மலை/ மரம்/ கோடிகளிலும்/

ஸ-கு3ணமுலோ/ வி-கு3ணமுலோ/ ஸததமு/
குணங்களிலும்/ குணங்களற்றும்/ எவ்வமயமும்/

ஸாது4/ த்யாக3ராஜ/-ஆதி3/ ஆஸ்1ரிதுலலோ/ (ப)
சாது/ தியாகராசன்/ ஆகிய/ (அவனை) புகலடைந்தோரிலும்/ பரமான்மா...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - வெலிகே3 - வெலுகு3.

6 - ஸ-கு3ணமுலோ வி-கு3ணமுலோ - ஸ-கு3ணமுலலோ வி-கு3ணமுலலோ.

Top

மேற்கோள்கள்
5 - அந்த3ரிலோ - யாவற்றிலும் - வெளித்தோற்றமாகவும், உள்ளியக்கமாகவும். சரணத்தினில் தியாகராஜர் இதனை விளக்குகின்றார்.

Top

விளக்கம்
1 - பரமாத்முடு3 - பொதுவாக, பரம்பொருளினை, அஃறிணையில் குறிப்பிடுவது வழக்கம். ஆனால், இங்கு, தியாகராஜர் ஆண்பாலில் குறிப்பிட்டுள்ளார்.

3 - தெலுஸுகோரே - தெரிந்துகொள்வாய் - தியாகராஜர், தனது மனத்தினுக்குக் கூறுகின்றார்.

4 - ஹரியட ஹருட3 - அரியாம், அரனாம் - இவை மும்மூர்த்திகளைக் குறிக்கும் - தியாகராஜர் குறிப்பிடும், பரமான்மாவாகிய, இறைவனுள், மும்மூர்த்திகளும் அடக்கம். அந்த இறைவனை, பதஞ்சலி யோக சூத்திரங்கள் (1.24) 'ஈசுவரன்' என்று கூறும். தியாகராஜருக்கு, இராமனே பரம்பொருள் (பரமான்மா) ஆகும் - அவருடைய, 'எவரனி நிர்ணயிஞ்சிரிரா' என்ற கீர்த்தனையினை நோக்கவும்.

Top

6 - ஸ-கு3ணமுலோ வி-கு3ணமுலோ - குணங்களிலும், குணங்களற்றும்.

உருவ வழிபாடு, 'ஸகுண உபாசனை' என்றும், அருவ வழிபாடு, 'நிர்க்குண உபாசனை' என்றும் வழங்கும். 'விகுண' என்ற சொல், பொதுவாக, 'தீய குணம்' என்று பொருள்படும். ஆனால், 'விகுண' என்பது 'நிர்க்குண' அதாவது 'குணமற்ற' அல்லது 'குணங்களுக்கப்பாற்பட்ட' என்ற பொருளிலும் வழங்கும்.

அதன்படி, 'குணங்களிலும்', 'குணங்களற்றும்' என்பது, 'உருவமாகவும்', 'அருவமாகவும்' என்றோ அல்லது 'நற்குணங்களிலும்', 'தீய குணங்களிலும்' என்றோ கொள்ளலாம்

தீயோரிலும், பரமான்மாவின் இயக்கமே என்பதனை, கீதையில் கண்ணன் விளக்குகின்றான் -

எங்கும் நிறை பரம்பொருள், எவருடைய நல்வினையினையோ, தீவினையினையோ கண்டுகொள்வதில்லை.
மெய்யறிவு, அறிவின்மையினால் (அஞ்ஞானம்) மூடப்பட்டுள்ளதனால், உயிரினங்கள் மருள்கின்றன (5.15)

பித்தலாட்டக்காரரின் சூதும் நானே; வல்லோரின் வல்லமையும் நானே;
வெற்றயும் நானே; முயற்சியும் நானே; நல்லோரின் நன்மையும் நானே. (10.36)

Top

இந்த கீர்த்தனையினை, மிக்கு இனிமையான ராகத்தினில் தியாகராஜர் அமைத்துள்ளார். பாடகர்கள் இந்த கீர்த்தனையின் பொருளினை சிறிதேனும் அறிந்துகொண்டு, அந்த உணர்ச்சியுடன் பாடுவரேயாகில், கேட்போரல்லாது, தாங்களும் ஆனந்தப் பரவசம் அடையலாம்.

தியாகராஜரின் கிருதிகளை உபநிடதங்களுக்கு ஈடாகக் கூறுவர். அதற்கு, இந்தப் பாடல் ஒன்றினையே அத்தாட்சியாகக் கூறலாம்.

குணங்கள் - சத்துவம் முதலான முக்குணங்கள்
குணங்களற்று - நிர்க்குணமாக

Top


Updated on 12 Feb 2010

3 comments:

Unknown said...

பிரமாதமான விளக்கம், நன்றி

b.n.kapali said...

Thank u for the explanation.

Vedhavyasa. Sampathkumarabhattar said...

Recently i had a chance to listen Abishek Raguram's performance of this song. Simply superb. His Bhava and devotion all are very enchanting.