Wednesday, February 10, 2010

தியாகராஜ கிருதி - ஸதா3 மதி3னி - ராகம் க3ம்பீ4ர வாணி - Sadaa Madini - Raga Gambhira Vani

பல்லவி
ஸதா3 1மதி3னி தலது கத3ரா
முதா3ஸ்பத3 நக3ஜாதி4பதே

அனுபல்லவி
ஸதா3 ஸி1வானந்த3 ஸ்வரூப
ஸத3ய மோத3 ஹ்ரு23ய பத3 ஸரோஜமுல நே (ஸ)

சரணம்
2தி33ம்ப3ராந்தக தை3த்ய ஹர
தி3கீ31 ஸன்னுத க3ங்கா34
3ம்ரு2கா3ங்க ஸே12ர நடன சதுர
மனுப ஸமயமிதி3ரா த்யாக3ராஜ வினுத (ஸ)


பொருள் - சுருக்கம்
  • களிப்பினுறைவிடமே! மலைமகள் மணாளா!
  • சதாசிவனே! ஆனந்த உருவத்தோனே! கருணையுடையோனே! களிக்கும் இதயத்தோனே!
  • திகம்பரனே! அந்தகாசுரனை வதைத்தோனே! திசை மன்னரால் போற்றப் பெற்றோனே! கங்கையணிவோனே! (முயல் சின்ன) சந்திர சேகரனே! நடனத்தினில் வல்லவனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
    • எவ்வமயமும் உள்ளத்தினில் (உன்னை) நினைக்கின்றேனன்றோ?
    • உனது திருவடித் தாமரைகளை நான் எவ்வமயமும் உள்ளத்தினில் நினைக்கின்றேனன்றோ?
    • காப்பதற்குத் தருணமீதய்யா.



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    ஸதா3/ மதி3னி/ தலது/ கத3ரா/
    எவ்வமயமும்/ உள்ளத்தினில்/ (உன்னை) நினைக்கின்றேன்/ அன்றோ ஐயா/

    முதா3/-ஆஸ்பத3/ நக3ஜா/-அதி4பதே/
    களிப்பின்/ உறைவிடமே/ மலைமகள்/ மணாளா/


    அனுபல்லவி
    ஸதா3/ ஸி1வ/-ஆனந்த3/ ஸ்வரூப/
    சதா/ சிவனே/ ஆனந்த/ உருவத்தோனே/

    ஸத3ய/ மோத3/ ஹ்ரு23ய/ பத3/ ஸரோஜமுல/ நே/ (ஸ)
    கருணையுடையோனே/ களிக்கும்/ இதயத்தோனே/ (உனது) திருவடி/ தாமரைகளை/ நான்/ எவ்வமயமும்...


    சரணம்
    தி3க்/-அம்ப3ர/-அந்தக/ தை3த்ய/ ஹர/
    திசைகள்/ ஆடையாக (திகம்பரனே)/ அந்தக/ அசுரனை/ வதைத்தோனே/

    தி3க்/-ஈஸ1/ ஸன்னுத/ க3ங்கா3/ த4ர/
    திசை/ மன்னரால்/ போற்றப் பெற்றோனே/ கங்கை/ அணிவோனே/

    ம்ரு23/-அங்க/ ஸே12ர/ நடன/ சதுர/
    முயல்/ சின்ன (சந்திர)/ சேகரனே/ நடனத்தினில்/ வல்லவனே/

    மனுப/ ஸமயமு/-இதி3ரா/ த்யாக3ராஜ/ வினுத/ (ஸ)
    காப்பதற்கு/ தருணம்/ இஃதய்யா/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    1 - மதி3னி தலது - மதி3ந்த3லது : 'மதி3ந்த3லது' என்பது தவறாகும்.

    3 - ம்ரு2கா3ங்க - ம்ரு2கா3ங்க3 : இவ்விடத்தில், 'ம்ரு2கா3ங்க' என்பதே சரியாகும்.

    Top

    மேற்கோள்கள்
    2 - அந்தக தை3த்ய ஹர - 'அந்தகன்' என்னும் அசுரனை வதைத்தோன் - திருமூலரின், 'திருமந்திர'த்தினில் (339) அந்தகாசுரனை, சிவன் சூலத்தினால் வதைத்தது பற்றி கூறப்பட்டுள்ளது. ‘அந்தகன்’.

    நமனுக்கும், 'அந்தகன்' என்று பெயராகும். எனவே, மார்க்கண்டேயனைக் காப்பதற்காக, நமனை சிவன் உதைத்ததனால், அப்படியும் பொருள் கொள்ளலாம். அதாவது, 'நமனையும் மற்ற அசுரர்களையும் அடக்கியவனே' என்றும் பொருள் கொள்ளலாம்.

    சிவன், அழிக்கும் தொழில் புரிவதனால், சிவனுக்கும், 'அந்தகன்' என்று பெயருண்டு. எனவே 'அந்தகனே' என்றும், 'அசுரர்களை அழித்தோனே' என்று பிரித்தும் பொருள் கொள்ளலாம்.

    Top

    விளக்கம்
    இந்த கீர்த்தனை தியாகராஜரால் இயற்றப்பட்டதா என ஐயமிருப்பதாக ஒரு புத்தகத்தினில் கூறப்பட்டுள்ளது.

    திகம்பரன் - ஆடைகளற்றவன் - திசைகளையே ஆடையாக அணிபவன்

    Top


    Updated on 10 Feb 2010
  • No comments: