Monday, February 8, 2010

தியாகராஜ கிருதி - ஸத்த லேனி - ராகம் நாகா3 நந்தி3னி - Satta Leni - Raga Naganandini

பல்லவி
1ஸத்த லேனி தி3னமுலு வச்செனா

அனுபல்லவி
2ஸத்த மாத்ரமா ஸச்-சித்த ஸா1யி
ஸாகேத நிலய தை3வ (ஸத்த)

சரணம்
கலி-லோன 3ப்ரத2ம பாத3முலோ
4தலி-த3ண்ட்3ரி கு3ரு ப4க்தியு லேக
பலுமாரு து3ஷ்-க்ரு2த்யம்பொ3னர்ப
வலெனா த்யாக3ராஜ நுத தை3வ (ஸத்த)


பொருள் - சுருக்கம்
  • சத்து மாத்திரமே! தூய உள்ளத்துறைவோனே! சாகேத நகருறைவோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
    • சட்டமற்ற நாட்கள் வந்தனவோ?
      • கலியில், முதற் பாதத்திலேயே, பெற்றோர், ஆசானிடம் வணக்கமின்றி, (மக்கள்) பலமுறை தீயச் செயல்கள் புரிய வேணுமோ?

    • தெய்வ சட்டமற்ற நாட்கள் வந்தனவோ?



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    ஸத்த/ லேனி/ தி3னமுலு/ வச்செனா/
    சட்டம்/ அற்ற/ நாட்கள்/ வந்தனவோ/


    அனுபல்லவி
    ஸத்த/ மாத்ரமா/ ஸத்/-சித்த/ ஸா1யி/
    சத்து/ மாத்திரமே/ தூய/ உள்ளத்து/ உறைவோனே/

    ஸாகேத/ நிலய/ தை3வ/ (ஸத்த)
    சாகேத நகர்/ உறைவோனே/ தெய்வ/ சட்டம்...


    சரணம்
    கலி-லோன/ ப்ரத2ம/ பாத3முலோ/
    கலியில்/ முதற்/ பாதத்திலேயே/

    தலி-த3ண்ட்3ரி/ கு3ரு/ ப4க்தியு/ லேக/
    பெற்றோர்/ ஆசானிடம்/ வணக்கம்/ இன்றி/ (மக்கள்)

    பலுமாரு/ து3ஷ்/-க்ரு2த்யம்பு3/-ஒனர்ப/
    பலமுறை/ தீய/ செயல்கள்/ புரிய/

    வலெனா/ த்யாக3ராஜ/ நுத/ தை3வ/ (ஸத்த)
    வேணுமோ/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ தெய்வ/ சட்டம்...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    4 - தலி-த3ண்ட்3ரி - தல்லி-தண்ட்3ரி : தெலுங்கு அகராதியின்படி, 'தலி-த3ண்ட்3ரி' என்ற சொல் சரியாகும். எனவே, அங்ஙனமே ஏற்கப்பட்டது.

    Top

    மேற்கோள்கள்
    3 - ப்ரத2ம பாத3 - முதற் பாதம் - தற்சமயம் நடப்பது கலி யுகத்தின் (நான்கில்) முதலாவது பாதம்.

    Top

    விளக்கம்
    1 - ஸத்த லேனி - 'ஸத்த' என்ற சொல்லுக்கு, பொதுவாக, 'நன்மை' என்று பொருள். ஆனால், அனுபல்லவியினையும், சரணத்தினையும், பல்லவியுடன் இணைக்கும் 'தை3வ' (தை3வ ஸத்த) என்ற சொல்லைக் கருத்தில் கொண்டு, 'சட்டம்' என்று மொழிபெயர்க்கப்பட்டது. இந்தி மொழியில், 'சத்தா' என்ற சொல், 'அரசாங்கம்' என்று பொருள்பட தற்போது பயன்படுத்தப்படுகின்றது.

    2 - ஸத்த மாத்ரமா - சத்து மாத்திரம் - சத்-சித்-ஆனந்தம் எனப்படும் பரம்பொருளின் இலக்கணத்தின் 'சத்'தென.

    சாகேத நகர் - அயோத்தியா.

    Top


    Updated on 08 Feb 2010
  • No comments: