ஒருலனாடு3கோவலஸினதே3மி
பரம பாவன ஸ்ரீ ராம
அனுபல்லவி
பரிதாபமு தாளக மொரலிட3கா3
கருண லேக நீவே நனு ஜூட3க3 (ஒ)
சரணம்
சரணம் 1
மஞ்சிவாரி ஸஹவாஸமு பா3ஸி
கொஞ்செபு நருல கொரகு நுதி ஜேஸி
எஞ்சின கார்யமு கூட3னி கா3ஸி
ஸஹிஞ்சகுண்டே3டி3தி3 1நா பேரு வாஸி (ஒ)
சரணம் 2
2ராஸி1யனுசு நருலனு சே பூனி
வாஸியுண்டே3டி3தி3 3ப4வானி
ஆஸ1 ப்ரிய நே 4முந்து3 ரானி
ஜேஸின கர்மமனுகோவலெ கானி (ஒ)
சரணம் 3
தே3வ த்யாக3ராஜ வினுத ஸனக
பா4வனீய ரகு4 குல திலக
ஈ வரகுனு நாது3 தனுவலயக3
நீவே தெலுஸுகோவலெ கா3க (ஒ)
பொருள் - சுருக்கம்
முற்றிலும் தூயோனே, இராமா! பவானியின் கேள்வனுக்கினியோனே! தேவா! தியாகராசன் போற்றும், சனகரால் மதிக்கப் பெற்ற, இரகு குலத் திலகமே!
- மற்றவரைக் குறை கூறுவதேன்?
- பரிதாபம் தாளாது முறையிட, கருணையின்றி, நீயே என்னை நோக்க,
- மற்றவரைக் குறை கூறுவதேன்?
- நல்லோரின் தொடர்பினை விடுத்து,
- சிறிய மனிதரை, தேவைகளுக்கு முகமன் கூறி,
- எண்ணிய காரியம் கூடாத துயரினைத் தாளாதிருப்பவன் -
- இஃதெனது பெயரின் வாசி;
- நல்லோரின் தொடர்பினை விடுத்து,
- மற்றவரைக் குறை கூறுவதேன்?
- (எனது) விதியென, மனிதரைக் கைப்பற்றி, வாசியாக உள்ளவன் -
- இஃது, நான், (இன்னமும்) எதிர்ப் படாத, (முன்)செய் வினையெனக் கொளல் வேண்டுமேயன்றி,
- (எனது) விதியென, மனிதரைக் கைப்பற்றி, வாசியாக உள்ளவன் -
- மற்றவரைக் குறை கூறுவதேன்?
- இது வரையில் எனது உடல் அலைய, நீயே தெரிந்துகொள்ள வேண்டுமேயன்றி
- மற்றவரைக் குறை கூறுவதேன்?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஒருலனு/-ஆடு3கோவலஸினதி3/-ஏமி/
மற்றவரை/ குறை கூறுவது/ ஏன்/
பரம/ பாவன/ ஸ்ரீ ராம/
முற்றிலும்/ தூயோனே/ ஸ்ரீ ராமா/
அனுபல்லவி
பரிதாபமு/ தாளக/ மொரலு/-இட3கா3/
பரிதாபம்/ தாளாது/ முறை/ இட/
கருண/ லேக/ நீவே/ நனு/ ஜூட3க3/ (ஒ)
கருணை/ இன்றி/ நீயே/ என்னை/ நோக்க/ மற்றவரை...
சரணம்
சரணம் 1
மஞ்சிவாரி/ ஸஹவாஸமு/ பா3ஸி/
நல்லோரின்/ தொடர்பினை/ விடுத்து/
கொஞ்செபு/ நருல/ கொரகு/ நுதி ஜேஸி/
சிறிய/ மனிதரை/ தேவைகளுக்கு/ முகமன் கூறி/
எஞ்சின/ கார்யமு/ கூட3னி/ கா3ஸி/
எண்ணிய/ காரியம்/ கூடாத/ துயரினை/
ஸஹிஞ்சக/-உண்டே3டு3/-இதி3/ நா/ பேரு/ வாஸி/ (ஒ)
தாளாது/ இருப்பவன்/ - இஃது/ எனது/ பெயரின்/ வாசி/ மற்றவரை...
சரணம் 2
ராஸி1/-அனுசு/ நருலனு/ சே பூனி/
(எனது) விதி/ என/ மனிதரை/ கைப்பற்றி/
வாஸி/-உண்டே3டு3/-இதி3/ ப4வானி/
வாசியாக/ உள்ளவன்/ - இஃது/ பவானியின்/
ஆஸ1/ ப்ரிய/ நே/ முந்து3 ரானி/
கேள்வனுக்கு/ இனியோனே/ நான்/ (இன்னமும்) எதிர்ப் படாத/
ஜேஸின/ கர்மமு/-அனுகோவலெ/ கானி/ (ஒ)
(முன்)செய்/ வினை/ எனக் கொளல் வேண்டுமே/ அன்றி/ மற்றவரை...
சரணம் 3
தே3வ/ த்யாக3ராஜ/ வினுத/ ஸனக/
தேவா/ தியாகராசன்/ போற்றும்/ சனகரால்/
பா4வனீய/ ரகு4/ குல/ திலக/
மதிக்கப் பெற்ற/ இரகு/ குல/ திலகமே/
ஈ/ வரகுனு/ நாது3/ தனுவு/-அலயக3/
இது/ வரையில்/ எனது/ உடல்/ அலைய/
நீவே/ தெலுஸுகோவலெ/ கா3க/ (ஒ)
நீயே/ தெரிந்துகொள்ள வேண்டுமே/ அன்றி/ மற்றவரை...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், இரண்டாவது சரணம் கொடுக்கப்படவில்லை.
Top
மேற்கோள்கள்
4 - முந்து3 ரானி கர்மமு - எதிர்ப் படாத வினை - முற்பிறவிகளில் இயற்றிய அனைத்து வினைகளும் 'ஸஞ்சித கர்ம' (கர்ம மூட்டை) என்றும், அவற்றுள், குறிப்பிட்ட பிறவியில், அந்த பிறவிக்கேற்ப, அனுபவிப்பதற்காக பகிர்ந்தளிக்கப்பட்டவை, 'ப்ராரப்3த4 கர்ம' என்றும், இன்னும் மிகுதியள்ள அனுபவிக்கப்படவேண்டிய வினைகள் 'ஆக3மி கர்ம' என்றும் வழங்கும். அந்தந்தப் பிறவிகளில், 'ப்ராரப்3த4 கர்ம'ங்களை அனுபவிக்கும்போது, இயற்றும் புதிய வினைகளும், 'ஸஞ்சித கர்ம' மூட்டையினை வந்தடையும். ஸஞ்சித - ப்ராரப்3த4 - ஆக3மி கர்மங்கள்
Top
விளக்கம்
முதலிரண்டு சரணங்களும், மிக்கு சுருக்கமாகவும், கடினமான சொற்கள் பயன்படுத்தியுள்ளமையாலும், அவற்றின் பொருள் சரிவர மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா என ஐயமுள்ளது. தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். திருத்தங்களைத் தெரிவித்தால் அவற்றினை இங்கு தகுந்தமுறையில் சேர்க்கப்படும்.
1 - நா பேரு வாஸி - எனது பெயரின் வாசி - பெயரின் தன்மை - தன்னையே நொந்துகொள்ளுதல்
2 - ராஸி1யனுசு நருலனு சே பூனி - இச்சொற்களின் பொருள் சரிவர விளங்கவில்லை.
3 - ப4வானி ஆஸ1 ப்ரிய - 'ப4வானி ஆஸ1' என்பதற்கு 'பவானியின் கேள்வன்' அதாவது 'சிவன்' என்று பொருள் கொள்ளப்பட்டாலும், 'ஆஸ1' என்ற சொல், 'கேள்வன்' என்று பொருள் தருமா என்று விளங்கவில்லை.
வாசியாக உள்ளவன் - நிம்மதியாக உள்ளவன்
பவானியின் கேள்வன் - சிவன்
சனகர் - பிரமனின் மைந்தர்
Top
Updated on 02 Feb 2010
No comments:
Post a Comment