கால ஹரணமேலரா ஹரே ஸீதா ராம
அனுபல்லவி
கால ஹரணமேல ஸுகு3ண ஜால கருணாலவால (கா)
சரணம்
சரணம் 1
சுட்டி சுட்டி பக்ஷுலெல்ல செட்டு வெத3கு ரீதி பு4வினி
1புட்டக3னே நீ பத3முல பட்டுகொன்ன நன்னு ப்3ரோவ (கா)
சரணம் 2
பொட3வுனயெந்தாடு3கொன்ன 2பூ4மினி த்யாக3ம்பு3 ரீதி
கடு3 வெலஸியுன்ன நீவு கா3கயெவரு நன்னு ப்3ரோவ (கா)
சரணம் 3
தி3ன தி3னமுனு திரிகி3 திரிகி3 தி3க்கு லேக ஸ1ரணு ஜொச்சி
தனுவு த4னமு நீதே3யண்டி த்யாக3ராஜ வினுத ராம (கா)
பொருள் - சுருக்கம்
ஓ சீதாராமா! நற்பண்புகள் நிறைந்தோனே! கருணைக் கடலே! தியாகராசன் சிறக்கப் போற்றும் இராமா!
- காலந்தாழ்த்துவதேனய்யா?
- சுற்றிச் சுற்றி, பறவைகளெல்லாம் (தமது) மரத்தினைத் தேடும் வகையினில், புவியில் பிறந்தவுடனேயே, உனதுத் திருவடிகளைப் பற்றிக் கொண்ட
- என்னைக் காப்பதற்கு காலந்தாழ்த்துவதேனய்யா?
- உயர்வாக எவ்வளவு கூறினாலும், புவியினில் துறவு நிகராக, மிக்கு திகழ்ந்துள்ள உன்னை யன்றி எவருளர்?
- என்னைக் காப்பதற்கு காலந்தாழ்த்துவதேனய்யா?
- தினந்தினமும், திரிந்து திரிந்து, போக்கின்றி, (உன்னைச்) சரணடைந்து, உடலும், செல்வமும் உனதேயென்றேன்;
- காலந்தாழ்த்துவதேனய்யா?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கால/ ஹரணமு/-ஏலரா/ ஹரே/ ஸீதா/ ராம/
காலம்/ தாழ்த்துவது/ ஏனய்யா/ ஓ/ சீதா/ ராமா/
அனுபல்லவி
கால/ ஹரணமு/-ஏல/ ஸுகு3ண/ ஜால/ கருணா/-ஆலவால/ (கா)
காலம்/ தாழ்த்துவது/ ஏன்/ நற்பண்புகள்/ நிறைந்தோனே/ கருணை/ கடலே/
சரணம்
சரணம் 1
சுட்டி/ சுட்டி/ பக்ஷுலு/-எல்ல/ செட்டு/ வெத3கு/ ரீதி/ பு4வினி/
சுற்றி/ சுற்றி/ பறவைகள்/ எல்லாம்/ (தமது) மரத்தினை/ தேடும்/ வகையினில்/ புவியில்/
புட்டக3னே/ நீ/ பத3முல/ பட்டுகொன்ன/ நன்னு/ ப்3ரோவ/ (கா)
பிறந்தவுடனேயே/ உனது/ திருவடிகளை/ பற்றிக் கொண்ட/ என்னை/ காப்பதற்கு/ காலம்...
சரணம் 2
பொட3வுன/-எந்த/-ஆடு3கொன்ன/ பூ4மினி/ த்யாக3ம்பு3/ ரீதி/
உயர்வாக/ எவ்வளவு/ கூறினாலும்/ புவியினில்/ துறவு/ நிகராக/
கடு3/ வெலஸி-உன்ன/ நீவு/ கா3க/-எவரு/ நன்னு/ ப்3ரோவ/ (கா)
மிக்கு/ திகழ்ந்துள்ள/ உன்னை/ யன்றி/ எவருளர்/ என்னை/ காப்பதற்கு/ காலம்...
சரணம் 3
தி3ன தி3னமுனு/ திரிகி3/ திரிகி3/ தி3க்கு/ லேக/ ஸ1ரணு/ ஜொச்சி/
தினந்தினமும்/ திரிந்து/ திரிந்து/ போக்கு/ இன்றி/ (உன்னைச்) சரண்/ அடைந்து/
தனுவு/ த4னமு/ நீதே3/-அண்டி/ த்யாக3ராஜ/ வினுத/ ராம/ (கா)
உடலும்/ செல்வமும்/ உனதே/ என்றேன்/ தியாகராசன்/ சிறக்கப் போற்றும்/ இராமா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - புட்டக3னே - புட்டு லேகனே : இவ்விடத்தில் 'புட்டக3னே' என்பதே பொருந்தும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
2 - பூ4மினி த்யாக3ம்பு3 ரீதி - புவுயில் துறவு நிகராக - இதற்கு, (அனைத்து பண்புகளிலும்) 'துறவுக்கு நிகரில்லாதது போன்று' (நீ திகழ்கின்றாய்) என்றோ, அல்லது, 'துறவின் சின்னமாக நிகரற்று' (நீ திகழ்கின்றாய்) என்றோ பொருள் கொள்ளலாம்
ஒரு புத்தகத்தில் இன்னோர் சரணமும் கொடுக்கப்பட்டுள்ளது - மற்றெந்த புத்தகத்திலும் இந்த சரணம் கொடுக்கப்படவில்லை.
இஷ்ட தை3வமா மனோபீ4ஷ்டமீய லேகயிங்க
கஷ்டமா த்யாக3ராஜு காமிதார்த2 ப2லமொஸங்க3 (கால)
விருப்பமான தெய்வமே!
எனது உள்ளம் விழைவதனை வழங்காது, இன்னும் தொல்லையா?
தியாகராசனுக்கு விரும்பியவற்றின் பயனை அளிக்க, காலம் தாழ்த்துவதேன்?
Top
இஷ்ட/ தை3வமா/ மனோ/-அபீ4ஷ்டமு/-ஈய லேக/-இங்க/
விருப்பமான/ தெய்வமே/ எனது/ உள்ளம்/ விழைவதனை/ வழங்காது/ இன்னும்/
கஷ்டமா/ த்யாக3ராஜு/ காமித-அர்த2/ ப2லமு/ ஒஸங்க3/ (கால)
தொல்லையா/ தியாகராசனுக்கு/ விரும்பியவற்றின்/ பயனை/ அளிக்க/ காலம்... தாழ்த்துவதேன்
இந்த சரணத்தினில், 'தியாகராஜ' என்ற அவரது முத்திரை திரும்பவும் வருகின்றது. மேலும், மூன்றாவது சரணத்தினில், தியாகராஜர், 'உடலும் செல்வமும் உனதே' - அதாவது 'உனது பொறுப்பு' என்று பொருள்பட கூறுகின்றார். இந்த அதிகப்படியான சரணத்தில், 'தியாகராஜனுக்கு விரும்பிய பொருட்களை (காமித-அர்த2 ப2லமு) அளிப்பதில் காலம் தாழ்த்துவதேன்?' என்றுள்ளது. இது ஒன்றுக்கொன்று முரணானது. எனவே இந்த அதிகப்படி சரணம் உண்மையிலேயே தியாகராஜரால் இயற்றப்பட்டதா என்ற ஐயம் எழுகின்றது.
Top
Updated on 03 Feb 2010
No comments:
Post a Comment