ஸரஸீ-ருஹ நயன நீ கடாக்ஷமே
சாலு ஸஜ்ஜன ஜீவன
சரணம்
சரணம் 1
1மீனமர்ப4குல காமிஞ்சி கன்னட்ல
தா3னமீ லங்கனு த3ய ஜூசினட்ல (ஸ)
சரணம் 2
ஸாது4 ஸங்க3தி நேனு ஸலிபினயட்ல
மாது4ர்ய போ4ஜனமடு ஜேஸினட்ல (ஸ)
சரணம் 3
த4ன கனகமுலெல்ல தகி3லினயட்ல
தி3னமு து3ராஸலு தீரினயட்ல (ஸ)
சரணம் 4
ஸிம்ஹாஸனமுன செலகி3னயட்ல
ப்3ரஹ்மேந்த்3ர 2பட்டானுப4வமந்தி3னட்ல (ஸ)
சரணம் 5
நாலுகொ3க்க பதி3 3பு4வனமேலினட்ல
கலுகு3 குலமுலெல்ல கட3-தேரினட்ல (ஸ)
சரணம் 6
ராஜீவ ப4வ நுத ரமணீய சரித
ராஜில்லு ஸ்ரீ த்யாக3ராஜாதி3 வினுத (ஸ)
பொருள் - சுருக்கம்
கமலக்கண்ணா! நல்லோரின் வாழ்வே! மலரோனால் போற்றப் பெற்ற, இனிய சரிதத்தோனே! திகழும், தியாகாராசன் ஆகியோரால் போற்றப் பெற்றோனே!
- உனது கடைக்கண் பார்வையே போதுமே.
- மீனம் குஞ்சுகளை விரும்பி ஈன்றது போலும்,
- தானமளித்து இலங்கையினை அருள் புரிந்தது போலும்,
- சாதுக்களின் இணக்கம் நான் கொண்டது போலும்,
- சுவைமிக்க உணவு அப்படி யுண்டது போலும்,
- செல்வம், பொன் ஆகியவையெல்லாம் கிடைத்தது போலும்,
- தினமும், தீய ஆசைகள் தீர்ந்தது போலும்,
- சிங்காதனத்தில் விளங்கியது போலும்,
- பிரமன், இந்திர பட்ட அனுபவம் அடைந்தது போலும்,
- நாலொடோர் பத்து உலகங்களினை யாண்டது போலும்,
- உண்டாகும் குலங்களெல்லாம் கடை தேறியது போலும்,
- மீனம் குஞ்சுகளை விரும்பி ஈன்றது போலும்,
- உனது கடைக்கண் பார்வையே போதுமே.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸரஸீ-ருஹ/ நயன/ நீ/ கடாக்ஷமே/
கமல/ கண்ணா/ உனது/ கடைக்கண் பார்வையே/
சாலு/ ஸஜ்ஜன/ ஜீவன/
போதுமே/ நல்லோரின்/ வாழ்வே/
சரணம்
சரணம் 1
மீனமு/-அர்ப4குல/ காமிஞ்சி/ கன்ன/-அட்ல/
மீனம்/ குஞ்சுகளை/ விரும்பி/ ஈன்றது/ போலும்/
தா3னமு/-ஈ/ லங்கனு/ த3ய/ ஜூசின/-அட்ல/ (ஸ)
தானம்/ அளித்து/ இலங்கையினை/ அருள்/ புரிந்தது/ போலும்/ கமல...
சரணம் 2
ஸாது4/ ஸங்க3தி/ நேனு/ ஸலிபின/-அட்ல/
சாதுக்களின்/ இணக்கம்/ நான்/ கொண்டது/ போலும்/
மாது4ர்ய/ போ4ஜனமு/-அடு/ ஜேஸின/-அட்ல/ (ஸ)
சுவைமிக்க/ உணவு/ அப்படி/ உண்டது/ போலும்/ கமல...
சரணம் 3
த4ன/ கனகமுலு/-எல்ல/ தகி3லின/-அட்ல/
செல்வம்/ பொன் ஆகியவை/ எல்லாம்/ கிடைத்தது/ போலும்/
தி3னமு/ து3ராஸலு/ தீரின/-அட்ல/ (ஸ)
தினமும்/ தீய/ ஆசைகள்/ தீர்ந்தது/ போலும்/ கமல...
சரணம் 4
ஸிம்ஹ/-ஆஸனமுன/ செலகி3ன/-அட்ல/
சிங்க/ ஆதனத்தில்/ விளங்கியது/ போலும்/
ப்3ரஹ்மா/-இந்த்3ர/ பட்ட/-அனுப4வமு/-அந்தி3ன/-அட்ல/ (ஸ)
பிரமன்/ இந்திர/ பட்ட/ அனுபவம்/ அடைந்தது/ போலும்/ கமல...
சரணம் 5
நாலுகு3/-ஒக்க/ பதி3/ பு4வனமு/-ஏலின/-அட்ல/
நாலொடு/ ஒர்/ பத்து/ உலகங்களினை/ யாண்டது/ போலும்/
கலுகு3/ குலமுலு/-எல்ல/ கட3/-தேரின/-அட்ல/ (ஸ)
உண்டாகும்/ குலங்கள்/ எல்லாம்/ கடை/ தேறியது/ போலும்/ கமல...
சரணம் 6
ராஜீவ ப4வ/ நுத/ ரமணீய/ சரித/
மலரோனால்/ போற்றப் பெற்ற/ இனிய/ சரிதத்தோனே/
ராஜில்லு/ ஸ்ரீ த்யாக3ராஜ/-ஆதி3/ வினுத (ஸ)
திகழும்/ ஸ்ரீ தியாகாராசன்/ ஆகியோரால்/ போற்றப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், முதல் சரணம், அனுபல்லவியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
சரணங்களின் இருவரிகளில் வரும், கடைசிச் சொல்லாகிய 'அட்ல' ஒரே சீராக எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்படவில்லை.
2 - பட்டானுப4வம் - பட்டமனுப4வம்.
3 - பு4வனமேலினட்ல - பு4வனமுலேலினட்ல.
Top
மேற்கோள்கள்
1 - மீனம் - சூரியன் - உஷாவின் பெண்ணும், கசியபரின் மனைவியுமாகும் - இவர்களுக்குப் பிறந்தவை கடல்வாழ் உயிரனங்கள் எனப்படும்.
Top
விளக்கம்
இந்தப் பாடல் தியாகராஜரின் 'பிரகலாத பக்தி விஜயம்' எனப்படும் நாட்டிய நாடகத்தின் அங்கமாகும்.
நாலொடோர் பத்து - பதினான்கு
திகழும் - இறைவனைக் குறிக்கும்
Top
Updated on 01 Feb 2010
No comments:
Post a Comment