Sunday, January 17, 2010

தியாகராஜ கிருதி - ப4க்துனி சாரித்ரமு - ராகம் பே333 - Bhaktuni Charitramu - Raga Begada

பல்லவி
4க்துனி சாரித்ரமு வினவே
மனஸா ஸீதா ராம (ப4)

அனுபல்லவி
1(ஆ)ஸக்தி லேக தா கோருசு
2ஜீவன்முக்துடை33யானந்த3முனொந்து3 (ப4)

சரணம்
சரணம் 1
ஜப தபமுல தா ஜேஸிதினன ராது3 அதி3கா3க மரி
கபடாத்முடு3 மனமை பல்க ராது3
உபம தனகு லேகயுண்ட3வலெனனி-
யூரயூர திருக33 ராது3
சபல சித்துடை3யாலு ஸுதுலபை
ஸாரெகு ப்4ரம காராத3னே ஹரி (ப4)


சரணம் 2
4வ விப4வமு நிஜமனியெஞ்சக3 ராது3 அதி3கா3க மரி
ஸி1வ மாத4வ பே43மு ஜேயக3 ராது3
பு4வனமந்து3 தானே யோக்3யுட3னனி பொ3ங்கி
பொட்ட ஸாகக3 ராது3
பவனாத்மஜ த்4ரு2தமௌ ஸீதா பதி
பாத3முலனுயேமர ராத3னு ஹரி (ப4)


சரணம் 3
ராஜஸ தாமஸ கு3ணமுலு காராது3 அதி3கா3கனு
4அவ்யாஜமுனனு ராலேத3 காராது3
5ராஜ யோக3 மார்க3மு நீ சித்தமு
ரா ஜூசுட விட3வக3 ராது3
ராஜ ஸி1கா2 மணியைன
த்யாக3ராஜ ஸகு2னி மரவ ராத3னே ஹரி (ப4)


பொருள் - சுருக்கம்
மனமே!
  • சீதாராமனின் தொண்டனின் நடத்தையினைக் கேளாய்;

  • (உலக) பற்றின்றி, தானே வேண்டி, சீவன்-முத்தனாகிக் களிப்பெய்தும் தொண்டனின் நடத்தையினைக் கேளாய்;

    1. செபம், தவங்களைத் தான் இயற்றினேனென்று கூறலாகாது;
    2. வஞ்சக உள்ளத்தோன் நாமாகி, பேசலாகாது;
    3. உவமை தனக்கு இல்லாமல் இருக்கவேண்டுமென, (திறமைகளைக் காட்டிக்கொண்டு) ஊரூராகத் திரியலாகாது;
    4. அலையும் உள்ளத்தினனாகி, மனைவி மக்கள் மீது, எவ்வமயமும், மயக்கம் கூடாது;
    5. உலக வைபவத்தினை நிசமென்று எண்ணலாகாது;
    6. சிவ, மாதவ வேறுபாடு செய்யலாகாது;
    7. புவியினில் தானே திறமையுடையவனெனப் பொய் சொல்லி, வயிறு வளர்க்கலாகாது;
    8. வாயு மைந்தன் பற்றியுள்ள சீதா பதியின் திருவடிகளை மறக்கலாகாது;
    9. இராசத, தாமத குணங்கள் கூடாது;
    10. காரணமின்றி, (இறைவனின் கருணை) வரவில்லை யெனலாகாது;
    11. இராச யோக நெறியினை, உனதுள்ளம் அடையப் பெறுதலை விடலாகாது;
    12. அரசர்களின் முடிமணியாகிய, தியாகராசனின் நண்பனை மறக்கலாகாது -

  • எனும், அரியின் தொண்டனின் நடத்தையினைக் கேளாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
4க்துனி/ சாரித்ரமு/ வினவே/
தொண்டனின்/ நடத்தையினை/ கேளாய்/

மனஸா/ ஸீதா/ ராம/ (ப4)
மனமே/ சீதா/ ராமனின்/ தொண்டனின்...


அனுபல்லவி
(ஆ)ஸக்தி/ லேக/ தா/ கோருசு/
(உலக) பற்று/ இன்றி/ தானே/ வேண்டி/

ஜீவன்/முக்துடை3/-ஆனந்த3முனு/-ஒந்து3/ (ப4)
சீவன்/-முத்தனாகி/ களிப்பு/ எய்தும்/ தொண்டனின்...


சரணம்
சரணம் 1
ஜப/ தபமுல/ தா/ ஜேஸிதினி/-அன ராது3/ அதி3கா3க/ மரி/
செபம்/ தவங்களை/ தான்/ இயற்றினேன்/ என்று கூறலாகாது/ அஃதன்றி/ மேலும்/

கபட/-ஆத்முடு3/ மனமை/ பல்க ராது3/
வஞ்சக/ உள்ளத்தோன்/ நாமாகி/ பேசலாகாது/

உபம/ தனகு/ லேக/-உண்ட3வலெனு/-அனி/-
உவமை/ தனக்கு/ இல்லாமல்/ இருக்கவேண்டும்/ என/

ஊர/-ஊர/ திருக33 ராது3/
(திறமைகளைக் காட்டிக்கொண்டு) ஊர்/ ஊராக/ திரியலாகாது/

சபல/ சித்துடை3/-ஆலு/ ஸுதுலபை/
அலையும்/ உள்ளத்தினனாகி/ மனைவி/ மக்கள் மீது/

ஸாரெகு/ ப்4ரம/ காராது3/-அனே/ ஹரி (ப4)
எவ்வமயமும்/ மயக்கம்/ கூடாது/ எனும்/ அரியின்/ தொண்டனின்...


சரணம் 2
4வ/ விப4வமு/ நிஜமு/-அனி/-எஞ்சக3 ராது3/ அதி3கா3க/ மரி/
உலக/ வைபவத்தினை/ நிசம்/ என்று/ எண்ணலாகாது/ அஃதன்றி/ மேலும்/

ஸி1வ/ மாத4வ/ பே43மு/ ஜேயக3 ராது3/
சிவ/ மாதவ/ வேறுபாடு/ செய்யலாகாது/

பு4வனமு-அந்து3/ தானே/ யோக்3யுட3னு/-அனி/ பொ3ங்கி/
புவியினில்/ தானே/ திறமையுடையவன்/ என/ பொய் சொல்லி/

பொட்ட/ ஸாகக3 ராது3/
வயிறு/ வளர்க்கலாகாது/

பவன/-ஆத்மஜ/ த்4ரு2தமௌ/ ஸீதா/ பதி/
வாயு/ மைந்தன்/ பற்றியுள்ள/ சீதா/ பதியின்/

பாத3முலனு/-ஏமர ராது3/-அனு/ ஹரி/ (ப4)
திருவடிகளை/ மறக்கலாகாது/ எனும்/ அரியின்/ தொண்டனின்...


சரணம் 3
ராஜஸ/ தாமஸ/ கு3ணமுலு/ காராது3/ அதி3கா3கனு/
இராசத/ தாமத/ குணங்கள்/ கூடாது/ அஃதன்றி/

அவ்யாஜமுனனு/ ராலேது3/-அன காராது3/
காரணமின்றி/ (இறைவனின் கருணை) வரவில்லை/ எனலாகாது/

ராஜ/ யோக3/ மார்க3மு/ நீ/ சித்தமு/
இராச/ யோக/ நெறியினை/ உனது/ உள்ளம்/

ரா/ ஜூசுட/ விட3வக3 ராது3/
அடைய/ பெறுதலை/ விடலாகாது/

ராஜ/ ஸி1கா2/ மணி/-ஐன/
அரசர்களின்/ முடி/ மணி/ ஆகிய/

த்யாக3ராஜ/ ஸகு2னி/ மரவ ராது3/-அனே/ ஹரி/ (ப4)
தியாகராசனின்/ நண்பனை/ மறக்கலாகாது/ எனும்/ அரியின்/ தொண்டனின்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - ஆனந்த3முனொந்து3 - ஆனந்த3முனொந்தே3.

Top

மேற்கோள்கள்
2 - ஜீவன்முக்துடு3 - சீவன்-முத்தன் - உயிருடனிருக்கும்போதே முத்தி பெற்றவன் - அத்தகைய சீவன் முத்தனின் உள்ளப்பாங்கினை அறிய ஆதி சங்கரரின் 'ஜீவன்-முக்தானந்த லஹரி' நோக்கவும்.

5 - ராஜ யோக3 - கீதை 9-வது அத்தியாயம் நோக்கவும்.

Top

விளக்கம்
1 - (ஆ)ஸக்தி லேக - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே 'ஆ' bracket-களில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், இந்த சொல், இதற்கு முந்தைய தாள ஆவர்த்தியினைச் சேர்ந்தது என சங்கீதம் அறிந்தவர் கூறுகின்றனர். 'ஆஸக்தி லேக' என்பதற்கு 'உலகப்பற்றின்றி' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது; கீதையின்படி (3-வது அத்தியாயம், 25-வது செய்யுள்) 'ஸக்த' என்ற சொல் 'உலகப்பற்று' என்ற பொருளிலும், 'ஆஸக்த' என்ற சொல் 'பற்றற்ற தன்மை' என்ற பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'நாரத பக்தி சூத்திர'த்தினில் (செய்யுள் 81), 'ஆஸக்தி' என்ற சொல் 'இறைப் பற்று' என்ற பொருள்பட பயன்படுத்தப்பட்டுள்ளது. லலிதா ஸஹஸ்ரநாமத்தில் (109), 'ஆஸக்தி' என்பதற்கு 'இறைவனுடன் கூடுதலின் இன்பம்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. தியாகராஜர், தமது 'நீவே கன்னட3 ஜேஸிதே' என்ற கீர்த்தனையில், 'ஆஸக்தி' என்ற சொல்லினை 'இறைப்பற்று' என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளார். சம்ஸ்கிருத அகராதியின்படி, 'ஸக்தி' என்ற சொல்லுக்கு 'உலகப்பற்று' என்றும், 'அஸக்தி' அல்லது 'ஆஸக்தி' என்ற சொல்லுக்கு 'பற்றற்ற தன்மை' அல்லது 'இறைப்பற்று' என்றும் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

Top

4 - அவ்யாஜமுனனு ராலேது3 - காரணமின்றி - உழைக்காமலே கருணை கிடைக்குமென எண்ணுதல். சில புத்தகங்களில் இதற்கு 'தானாகவே லாபம் கிடைக்கவில்லை' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. தியாகராஜர், இங்கு, காரணமின்றி 'என்ன' வரவில்லை என்று விளக்காவிடினும், பொதுவாக, 'அவ்யாஜ' என்ற சொல், இறைவனின் கருணையையே குறிக்கும்.

லலிதா ஸஹஸ்ரநாமத்தில் (992), அம்மைக்கு 'அவ்யாஜ கருணா மூர்தி' என்று பெயராகும். அதாவது 'நோக்கம் ஏதும் இன்றி கருணை புரிபவள்' என்று பொருளாகும்.

வைபவம் - கொண்டாட்டம்
வாயு மைந்தன் - அனுமன்
இராசத, தாமத - முக்குணங்கள்

Top


Updated on 17 Jan 2010

2 comments:

Govindaswamy said...

அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
சரணம் ஒன்றில் ’ கபட/-ஆத்முடு3/ மனமை/’ என்பதற்கு “வஞ்சக/ உள்ளத்தோன்/ நாமாகி/” என்று பொருள் கூரப்பட்டுள்ளது. மனமு என்பது பன்மை. இதற்கு நாம்/தாம் எனும் பொருள் சரி தான். ஆனால் இந்தசரணத்தில் மற்ற இடங்களில் ஒருமை கையாளப்பட்டிருப்பதால் ‘தானாகி’ என்பது சரி என்பது என் கருத்து.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

அன்புள்ள கோவிந்தசாமி,
இவ்விடத்தில் அறிவுரை கூறுவதும், அதனைக் கேட்பதும் தியாகராஜரே. எனவே 'நீயாகி' என்று மனதை நோக்கிக் கூறலாம். அல்லது 'நாமாகி' என்று, தனது மனதை, தன்னிலைப் பன்மையாக்கிக் கூறலாம்.
இதனில் தன்னிலைப் பன்மையே மிக்கு பொருந்தும்.
வணக்கம்
வே கோவிந்தன்