Friday, January 15, 2010

தியாகராஜ கிருதி - நீவேரா குல த4னமு - ராகம் பே333 - Neeveraa Kula Dhanamu - Raga Begada

பல்லவி
நீவேரா குல த4னமு ஸந்ததமு
நீவேரா ஜீவனமு

அனுபல்லவி
1ஈ வரகுனு தெலியகுன்ன 2நா நேரமு
தே3வர க்ஷம சேஸி த3யதோனேலுகோரா (நீ)

சரணம்
சரணம் 1
மாத43ஸீதானுஜ வர ஸஹித
மங்க3ள-கர பரமாத்3பு4த சரித
4கா3தி4 யாக3 ஸம்ரக்ஷக ஸதத
3திஜாப்த நத ஜனாவ்ரு2த விதி4 வினுத (நீ)


சரணம் 2
ஸுஜன நிசய பாப ஹிம சண்ட3 ஸூர்ய
ஸு-ஸ்வர ஜித க4ன ரவ மாது4ர்ய
5அஜ முகா2ரி ஸமர நிருபம ஸௌ1ர்ய
ஆனந்த3 கந்த3 ஸுந்த36ஸு-வர்ய (நீ)


சரணம் 3
ராக4வ ஸர்வோன்னத 7ஸு-ப்ரகாஸ1
ரமணீய கர பாடித லங்கேஸ1
த்யாக3ராஜ வர ஹ்ரு23ய நிவேஸ1
தரணி ஸ1ஸா1ங்க லோசன ஜானகீஸ1 (நீ)


பொருள் - சுருக்கம்
  • மாதவா! சீதை மற்றும் பின்னோன் உடன் கூடிய மேலோனே! மங்களமருள்வோனே! மிக்கு வியத்தகு சரிதத்தோனே! விசுவாமித்திரர் வேள்வி காத்தோனே! வாயு மைந்தனுக்கு இனியோனே! பணிவோர் சூழ், பிரமனால் போற்றப் பெற்றோனே!

  • நன்மக்களின் பாவமெனும் பனியுருக்கும் சுடர்ப் பரிதியே! கார்முகில் உறுமலின் இனிமையை வெல்லும் குரலோனே! பிரமன் முதலானோர் பகைவனுடன் போரில், ஒப்பற்ற சூரனே! ஆனந்தக் கிழங்கே! அழகனே! வேண்டத் தக்கோனே!

  • இராகவா! யாவரிலும் உயர்ந்தோனே! நல்லொளியோனே! எழிலான கரங்களோனே! இலங்கேசனை வீழ்த்தியோனே! தியாகராசனின் நல்லிதயத்துட் புகுந்தோனே! பரிதி மதி கண்களோனே! சானகி மணாளா!

    • நீயே (எமது) குலச்செல்வமய்யா; எவ்வமயமும் நீயே (எமது) வாழ்வய்யா;
    • இதுவரையிலும் உணராதிருந்த எனது தவற்றினை, மன்னித்து தயையுடன் ஆளுமய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீவேரா/ குல/ த4னமு/ ஸந்ததமு/
நீயே ஐயா/ (எமது) குல/ செல்வம்/ எவ்வமயமும்/

நீவேரா/ ஜீவனமு/
நீயே ஐயா/ (எமது) வாழ்வு/


அனுபல்லவி
ஈ வரகுனு/ தெலியக/-உன்ன/ நா/ நேரமு/
இதுவரையிலும்/ உணராது/ இருந்த/ எனது/ தவற்றினை/

தே3வர/ க்ஷம சேஸி/ த3யதோனு/-ஏலுகோரா/ (நீ)
ஐயா/ மன்னித்து/ தயையுடன்/ ஆளுமய்யா/


சரணம்
சரணம் 1
மாத4வ/ ஸீதா/-அனுஜ/ வர/ ஸஹித/
மாதவா/ சீதை/ (மற்றும்) பின்னோன்/ மேலோனே/ உடன் கூடிய/

மங்க3ள/-கர/ பரம/-அத்3பு4த/ சரித/
மங்களம்/ அருள்வோனே/ மிக்கு/ வியத்தகு/ சரிதத்தோனே/

கா3தி4/ யாக3/ ஸம்ரக்ஷக/ ஸதத/ க3திஜ/-
விசுவாமித்திரர்/ வேள்வி/ காத்தோனே/ நில்லாது/ செல்லும் (வாயு மைந்தனுக்கு)/

ஆப்த/ நத ஜன/-ஆவ்ரு2த/ விதி4/ வினுத/ (நீ)
இனியோனே/ பணிவோர்/ சூழ்/ பிரமனால்/ போற்றப் பெற்றோனே/


சரணம் 2
ஸுஜன நிசய/ பாப/ ஹிம/ சண்ட3/ ஸூர்ய/
நன்மக்களின்/ பாவமெனும்/ பனி (உருக்கும்)/ சுடர்/ பரிதியே/

ஸு-ஸ்வர/ ஜித/ க4ன/ ரவ/ மாது4ர்ய/
குரல்/ வெல்லும்/ கார்முகில்/ உறுமலின்/ இனிமையை/

அஜ/ முக2-/அரி/ ஸமர/ நிருபம/ ஸௌ1ர்ய/
பிரமன்/ முதலானோர்/ பகைவனுடன்/ போரில்/ ஒப்பற்ற/ சூரனே/

ஆனந்த3/ கந்த3/ ஸுந்த3ர/ ஸு-வர்ய/ (நீ)
ஆனந்த/ கிழங்கே/ அழகனே/ வேண்டத் தக்கோனே/


சரணம் 3
ராக4வ/ ஸர்வ/-உன்னத/ ஸு-ப்ரகாஸ1/
இராகவா/ யாவரிலும்/ உயர்ந்தோனே/ நல்லொளியோனே/

ரமணீய/ கர/ பாடித/ லங்கா-ஈஸ1/
எழிலான/ கரங்களோனே/ வீழ்த்தியோனே/ இலங்கேசனை/

த்யாக3ராஜ/ வர/ ஹ்ரு23ய/ நிவேஸ1/
தியாகராசனின்/ நல்/ இதயத்து/ உட் புகுந்தோனே/

தரணி/ ஸ11/-அங்க/ லோசன/ ஜானகீ/-ஈஸ1/ (நீ)
பரிதி/ முயல்/ சின்னம் (மதி)/ கண்களோனே/ சானகி/ மணாளா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - நா நேரமு - நேரமு.

3 - ஸீதானுஜ வர ஸஹித - ஸீதாவரானுஜ ஸஹித : பிற்குறிப்பட்டது சரியென்றால் 'ஸீதா வர' (சீதைக் கேள்வா) என்றும் 'அனுஜ ஸஹித' (பின்னோனுடன் கூடிய) என்றும் பிரிக்கப்படும். ஆனால் முற்குறிப்பிட்டதே அதிக பொருத்தமாகக் காணப்படுகின்றது.

4 - கா3தி4 யாக3 ஸம்ரக்ஷக - கா3தி4 யாக3 ஸம்ரக்ஷண.

6 - ஸு-வர்ய - ஸுர-வர்ய.

7 - ஸு-ப்ரகாஸ1 - ஸ்வ-ப்ரகாஸ1

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ஈ வரகுனு தெலியகுன்ன - இதுவரையில் உணராதிருந்த - நீயே எமது குலச்செல்வமென்றும், நீயே எமது வாழ்வென்றும்.

5 - அஜ முகா2ரி - ஆட்டுத் தலையன் (தக்கன் - பார்வதியின் தந்தை) எதிரி - அதாவது 'சிவன்' என்று பொருளாகும். ஆனால் அத்தகைய பொருள் இவ்விடம் பொருந்தாது. எனவே, 'முக2' என்று சொல்லுக்கு 'முதலானோர்' என்று பொருள் கொள்ளப்பட்டது.

பின்னோன் - இலக்குவன்
பிரமன் முதலானோர் பகைவன் - இராவணன்
இலங்கேசன் - இராவணன்

Top


Updated on 16 Jan 2010

No comments: