லோகாவன சதுர பாஹி மாம்
அனுபல்லவி
ஸாகேதாதி4ப ஸரஸ கு3ணாப்ரமேய
ஸரஸிஜாஸன ஸனந்த3ன வந்தி3தாங்க்4ரி
யுக3 பத3 நிர்ஜித முனி ஸா1ப (லோ)
சரணம்
சரணம் 1
1ராகாப்3ஜ முக2 பராகா செந்தகு
ராக தனகோர்வ தரமா 2பாகாரி வினுத
3நீகாஸிஞ்சிதி கா3க நேனன்யமெஞ்சனு
நீது3 வாட3னய்ய 4ராமய்ய (லோ)
சரணம் 2
நீலாக்ரு2தி கல நீ லாவண்யமு-
நீலாக3னி கனிபிம்பவே பா3லார்காப4 ஸு-
சேலாவ்ரு2த நன்னேலுகொன மனஸு ராதி3க
தாள ஜால ந்யாயமா ராம (லோ)
சரணம் 3
சேபாதி3க3 பதி3 ரூபாலனு கொனு
சாபாலங்க்ரு2த ஸுந்த3ர அவனீ-பாத்3பு4தமகு3
5நீ பாத3மு க3தி ஸ்ரீ பதே வரத3
பாலித த்யாக3ராஜ ஸார்வபௌ4மாகி2ல (லோ)
பொருள் - சுருக்கம்
- உலகினைக் காத்தலில் வல்லவனே!
- சாகேத நகர் தலைவா! இனிய குணத்தோனே! அளவிடற்கரியனே! மலரோன் மற்றும் சனந்தனர் வந்திக்கும் திருவடி இணையோனே! திருவடிகளால் (கௌதம) முனிவனின் சாபத்தினைப் போக்கியோனே!
- முழுமதி வதனத்தோனே! இந்திரனால் போற்றப்பெற்றோனே! இராமய்யா!
- இளஞ் சூரியனின் ஒளியோனே! நல்லாடைகளணிவோனே! இராமா!
- மீன் முதலாக பத்து உருவங்களைக் கொண்ட, வில் அலங்கரிக்கும் அழகா! புவியாள்வோனே! மா மணாளா! வரதா! தியாகராசனைப் பேணுவோனே! சார்வபூமனே! பல்லுலகினைக் காத்தலில் வல்லவனே!
- என்னைக் காப்பாய்.
- அசட்டையோ, அருகில் வாராது?
- எனக்குத் தாளவியலுமோ?
- உனக்காசைப்பட்டேனேயன்றி நான் வேறெதையும் எண்ணேன்;
- உன்னவனய்யா.
- நீலவண்ண உருவுடைய உனதெழில் இத்தகையதெனக் காட்டுவாய்;
- என்னையாள மனது வாராது;
- இனி தாளவியலாது;
- நியாயமா?
- வியத்தகு உனது திருவடிகளே புகல்;
- என்னைக் காப்பாய்.
- என்னைக் காப்பாய்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
லோக-/அவன/ சதுர/ பாஹி/ மாம்/
உலகினை/ காத்தலில்/ வல்லவனே/ காப்பாய்/ என்னை/
அனுபல்லவி
ஸாகேத/-அதி4ப/ ஸரஸ/ கு3ண/-அப்ரமேய/
சாகேத நகர்/ தலைவா/ இனிய/ குணத்தோனே/ அளவிடற்கரியனே/
ஸரஸிஜ-ஆஸன/ ஸனந்த3ன/ வந்தி3த/-அங்க்4ரி/
மலரோன்/ (மற்றும்) சனந்தனர்/ வந்திக்கும்/ திருவடி/
யுக3/ பத3/ நிர்ஜித/ முனி/ ஸா1ப/ (லோ)
இணையோனே/ திருவடிகளால்/ போக்கியோனே/ (கௌதம) முனிவனின்/ சாபத்தினை/
சரணம்
சரணம் 1
ராகா/-அப்3ஜ/ முக2/ பராகா/ செந்தகு/
முழு/ மதி/ வதனத்தோனே/ அசட்டையோ/ அருகில்/
ராக/ தனகு/-ஓர்வ/ தரமா/ பாக/-அரி/ வினுத/
வாராது/ எனக்கு/ தாள/ இயலுமோ/ பாகாசுரன்/ பகைவன் (இந்திரனால்)/ போற்றப்பெற்றோனே/
நீகு/-ஆஸிஞ்சிதி/ கா3க/ நேனு/-அன்யமு/-எஞ்சனு/
உனக்கு/ ஆசைப்பட்டேனே/ அன்றி/ நான்/ வேறெதையும்/ எண்ணேன்/
நீது3 வாட3னு/-அய்ய/ ராமய்ய/ (லோ)
உன்னவன்/ அய்யா/ இராமய்யா/
சரணம் 2
நீல/-ஆக்ரு2தி/ கல/ நீ/ லாவண்யமுனு/-
நீலவண்ண/ உரு/ உடைய/ உனது/ எழில்/
ஈலாகு3/-அனி/ கனிபிம்பவே/ பா3ல/-அர்க/-ஆப4/
இத்தகையது/ என/ காட்டுவாய்/ இளஞ்/ சூரியனின்/ ஒளியோனே/
ஸு-சேல/-ஆவ்ரு2த/ நன்னு/-ஏலுகொன/ மனஸு/ ராது3/-இக/
நல்லாடைகள்/ அணிவோனே/ என்னை/ ஆள/ மனது/ வாராது/ இனி/
தாள/ ஜால/ ந்யாயமா/ ராம/ (லோ)
தாள/ இயலாது/ நியாயமா/ இராமா/
சரணம் 3
சேப/-ஆதி3க3/ பதி3/ ரூபாலனு/ கொனு/
மீன்/ முதலாக/ பத்து/ உருவங்களை/ கொண்ட/
சாப/-அலங்க்ரு2த/ ஸுந்த3ர/ அவனீ/-ப/-அத்3பு4தமகு3/
வில்/ அலங்கரிக்கும்/ அழகா/ புவி/ ஆள்வோனே/ வியத்தகு/
நீ/ பாத3மு/ க3தி/ ஸ்ரீ/ பதே/ வரத3/
உனது/ திருவடிகளே/ புகல்/ மா/ மணாளா/ வரதா/
பாலித/ த்யாக3ராஜ/ ஸார்வபௌ4ம/-அகி2ல/ (லோ)
பேணுவோனே/ தியாகராசனை/ சார்வபூமனே/ பல்லுலகினை/...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - நீகாஸிஞ்சிதி - நீகாஸி1ஞ்சிதி.
4 - ராமய்ய - ராம.
5 - நீ பாத3மு - நீ பாத3மே.
Top
மேற்கோள்கள்
2 - பாகாரி - பாகாசுரனின் பகைவன் - இந்திரன். அமுதம் கடைந்து, அதனை, தேவர்களுக்கு மட்டும் பகிர்ந்தளித்தபின், தேவர்களுக்கும் தானவர்களுக்கும் மீளாத பகை மூண்டது. அந்த போரில், இந்திரன் பாகாசுரனைக் கொன்றான். பாகவத புராணம், 8-வது புத்தகம், 10-வது அத்தியாயம் நோக்கவும்.
2 - பாகாரி வினுத - இந்திரனால் போற்றப்பெற்றோன். கோவர்த்தன மலையினை கண்ணன் தூக்கிய நிகழ்ச்சிக்குப்பின்னர், இந்திரன் கண்ணனைப் புகழ்ந்து பாடினான். மேற்படி 10-வது புத்தகம், 27-வது அத்தியாயம் நோக்கவும்.
Top
விளக்கம்
1 - ராகாப்3ஜ - ராகா அப்3ஜ - 'அப்3ஜ' - நீரினின்று தோன்றியது - இது பொதுவாக தாமரையினைக் குறிக்கும். ஆனால், இவ்விடத்தில், மதியினைக் குறிக்கும்; ஏனெனில் மதியும் நீரினின்று தோன்றியதே.
சாகேத நகர் - அயோத்தி
முனிவனின் சாபம் - அகலிகைக்கு இட்ட சாபம்
வரதன் - வரமருள்வோன்
சார்வபூமன் - ஒருவரைப் பணியாது உலகாள்வோன்
Top
Updated on 18 Jan 2010
No comments:
Post a Comment