Wednesday, January 27, 2010

தியாகராஜ கிருதி - நா ஜீவாதா4ர - ராகம் பி3லஹரி - Naa Jivaadhaara - Raga Bilahari

பல்லவி
நா ஜீவாதா4ர நா நோமு ப2லமா

அனுபல்லவி
ராஜீவ லோசன ராஜ ராஜ ஸி1ரோ-மணி (நா)

சரணம்
நா சூபு ப்ரகாஸ1மா நா நாஸிகா பரிமளமா
நா 1ஜப வர்ண ரூபமா நாது3 பூஜா ஸுமமா
த்யாக3ராஜ நுத (நா)


பொருள் - சுருக்கம்
  • எனது வாழ்வின் ஆதாரமே!
  • எனது நோன்பின் பயனே!

  • கமலக்கண்ணா!
  • பேரரசர்களின் முடிமணியே!

  • எனது பார்வையின் ஒளியே!
  • எனது நாசியின் பரிமளமே!
  • எனது செப எழுத்து வடிவே!
  • எனது பூசை மலரே!
  • தியாகராசனால் போற்றப்பெற்றோனே!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நா/ ஜீவ/-ஆதா4ர/ நா/ நோமு/ ப2லமா/
எனது/ வாழ்வின்/ ஆதாரமே/ எனது/ நோன்பின்/ பயனே/


அனுபல்லவி
ராஜீவ/ லோசன/ ராஜ ராஜ/ ஸி1ரோ/-மணி/ (நா)
கமல/ கண்ணா/ பேரரசர்களின்/ முடி/ மணியே/


சரணம்
நா/ சூபு/ ப்ரகாஸ1மா/ நா/ நாஸிகா/ பரிமளமா/
எனது/ பார்வையின்/ ஒளியே/ எனது/ நாசியின்/ பரிமளமே/

நா/ ஜப/ வர்ண/ ரூபமா/ நாது3/ பூஜா/ ஸுமமா/
எனது/ செப/ எழுத்து/ வடிவே/ எனது/ பூசை/ மலரே/

த்யாக3ராஜ/ நுத/ (நா)
தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - ஜப வர்ண ரூபமா - செப எழுத்து வடிவே - லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அம்மையின் பெயர் - 'வர்ண ரூபிணி' (850) - எழுத்து வடிவினள்.
Top

விளக்கம்
'ஜீவாதார' மற்றும் 'லோசன' ஆகிய சொற்கள் கடைசியில் நெடிலாக இருக்கவேண்டும். ஆனால் எல்லா புத்தகங்களிலும் குறிலாகவே கொடுக்கப்பட்டுள்ளது.

இறைவனை உணர்ந்து, இறைவனின் முன்னிலை (சன்னிதி) எவ்வயமும் பெற்றவனுக்கு வேண்டுதல்கள் ஏதும் இருக்காது. அந்த பேரானந்த நிலையினை தியாகராஜர் இப்பாடலில் காட்டுகின்றார்.

ப்ராஸ்னோபநிடதித்தினில் கூறப்படுவது -

"அவனே காண்போன், தொடுவோன், கேட்போன், முகர்வோன், சுவைப்போன், நினைப்போன்,
அறிவோன், செய்வோன், மெய்யறிவு ஆன்மா, புருஷனாம்.
அவன் (அனைத்தினையும்) கடந்த, அழிவற்ற ஆன்மாவின் நிலைபெற்றோனாம்." (4.9)
(ஸ்வாமி ஸர்வானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

Top

கடோபநிடதித்தினில் கூறப்பட்டது -

"இவ்வுருவம், சுவை, மணம், ஒலி, ஊறு, மற்றும் புணர்ச்சி
இவற்றினை அறிவது அவனே; அவன் அறியாதது இங்கேதுளது? இஃது அஃதேயாம்." (2.1.3)
(ஸ்வாமி கம்பீரானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

கீதையில் கண்ணன் கூறவது -

"காதுகள், கண்கள், உணர்வு, நாக்கு மற்றும் மூக்கு ஆகியவற்றினையும்
உள்ளத்தினையும் ஆண்டுகொண்டு விடயங்களை நுகர்கின்றான்." (15.9)
(ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

விடயங்கள் - புலன்களால் அறிப்படுவன.
நாசி - மூக்கு

Top

No comments: