Tuesday, January 26, 2010

தியாகராஜ கிருதி - நரஸிம்ஹ - ராகம் பி3லஹரி - Narasimha - Raga Bilahari

பல்லவி
நர ஸிம்ஹ நன்னு ப்3ரோவவே ஸ்ரீ லக்ஷ்மீ (நர)

அனுபல்லவி
கொர-மாலின நருல கொனியாட3னு நேனு
பரம பாவன நாபாலி ஸ்ரீ லக்ஷ்மீ (நர)

சரணம்
சரணம் 1
நீது34க்தாக்3ரேஸருடு3
ப்ரஹ்லாது33புடொ3க கனக கஸி1பு
வாது3கோர்வக நின்னு ஸ1ரணனி-
யாது3கோமன காசினாவு (நர)


சரணம் 2
1எந்து3கனி ஸைரிந்து நீ
மனஸந்து3 தெலியனிதி3யேதி3 லோகுல
நிந்த3கோர்வக நின்னு
கோரினந்து3கெந்தனி கருண ஜூதுவோ (நர)


சரணம் 3
நீ ஜபமு நீ ஸ்மரண நீ பத3
பூஜ நீ வாரி செலிமியொஸகி3
ராஜிகா33ய சேயு
த்யாக3ராஜ ஸன்னுத தரமு காது3 (நர)


பொருள் - சுருக்கம்
இலக்குமி நரசிங்கமே! முற்றிலும் தூயோனே! எனது காவல் தெய்வமே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

  • என்னைக் காப்பாய்;
  • பயனற்ற மனிதர்களுக்கு முகமன் கூறேன் நான்;

    • உனது தொண்டர்களில் தலைசிறந்தவனாகிய பிரகலாதன், அன்று, இரணிய கசிபுவின் ஒரு வாதுக்குச் சகியாது, உன்னைச் சரணடைந்து, ஆதரிக்க வேண்ட, காத்தனை;

    • எதற்கென்று பொறுப்பேன்? உனது உள்ளத்தினுக்குத் தெரியாதது யாதுளது?
    • உலகோரின் நிந்தை பொறுக்காது உன்னை வேண்டியதற்கு, எவ்வளவு கருணை காட்டுவாயோ?


  • உனது செபம், உனது நினைவு, உனது திருவடிகளின் வழிபாடு, உன்னவர்களின் நட்பு அருளி, சம்மதத்துடன் தயை செய்வாய்;
  • இனியும் தரமன்று.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நர/ ஸிம்ஹ/ நன்னு/ ப்3ரோவவே/ ஸ்ரீ லக்ஷ்மீ/ (நர)
நர/ சிங்கமே/ என்னை/ காப்பாய்/ ஸ்ரீலக்ஷ்மி/ நரசிங்கமே...


அனுபல்லவி
கொர-மாலின/ நருல/ கொனியாட3னு/ நேனு/
பயனற்ற/ மனிதர்களுக்கு/ முகமன் கூறேன்/ நான்/

பரம/ பாவன/ நாபாலி/ ஸ்ரீ லக்ஷ்மீ/ (நர)
முற்றிலும்/ தூயோனே/ எனது காவல் தெய்வம்/ ஸ்ரீ லக்ஷ்மி/ நரசிங்கமே...


சரணம்
சரணம் 1
நீது3/ ப4க்த/-அக்3ரேஸருடு3/
உனது/ தொண்டர்களில்/ தலைசிறந்தவனாகிய/

ப்ரஹ்லாது3டு3/-அபுடு3/-ஒக/ கனக/ கஸி1பு/
பிரகலாதன்/ அன்று/ ஒரு/ இரணிய/ கசிபுவின்/

வாது3கு/-ஓர்வக/ நின்னு/ ஸ1ரணு/-அனி/
வாதுக்கு/ சகியாது/ உன்னை/ சரண்/ அடைந்து/

ஆது3கோ/அன/ காசினாவு/ (நர)
ஆதரிக்க/ வேண்ட/ காத்தனை/


சரணம் 2
எந்து3கு/-அனி/ ஸைரிந்து/ நீ/
எதற்கு/ என்று/ பொறுப்பேன்/ உனது/

மனஸு-அந்து3/ தெலியனிதி3/-ஏதி3/ லோகுல/
உள்ளத்தினுக்கு/ தெரியாதது/ யாதுளது/ உலகோரின்/

நிந்த3கு/-ஓர்வக/ நின்னு/
நிந்தை/ பொறுக்காது/ உன்னை/

கோரின/-அந்து3கு/-எந்தனி/ கருண/ ஜூதுவோ/ (நர)
வேண்டியதற்கு/ எவ்வளவு/ கருணை/ காட்டுவாயோ/


சரணம் 3
நீ/ ஜபமு/ நீ/ ஸ்மரண/ நீ/ பத3/
உனது/ செபம்/ உனது/ நினைவு/ உனது/ திருவடிகளின்/

பூஜ/ நீ வாரி/ செலிமி/-ஒஸகி3/
வழிபாடு/ உன்னவர்களின்/ நட்பு/ அருளி/

ராஜிகா3/ த3ய/ சேயு/
சம்மதத்துடன்/ தயை/ செய்வாய்/

த்யாக3ராஜ/ ஸன்னுத/ தரமு/ காது3/ (நர)
தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ (இனியும்) தரம்/ அன்று/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - எந்து3கனி - எந்தகனி : எதுகை-மோனையின்படி 'எந்து3கனி' என்பதே பொருந்துமெனத் தோன்றுகின்றது.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
இரணிய கசிபு - பிரகலாதனின் தந்தை

Top


Updated on 26 Jan 2010

No comments: