Thursday, January 28, 2010

தியாகராஜ கிருதி - நீவே கானி - ராகம் பி3லஹரி - Nive Kaani - Raga Bilahari

பல்லவி
நீவே கானி நன்னெவரு காதுருரா
நீரஜ த3ள நயன

அனுபல்லவி
காவலஸின கோரிகலிச்சி நன்னு சால
கருணிஞ்சி 1ப்3ரோசே தல்லி தண்ட்3ரிவி (நீவே)

சரணம்
சரணம் 1
முனு மா வம்ஸ1முன கலுகு3 பெத்33லு
தபமுலனு ஜேஸியார்ஜிஞ்சின த4னமு
வினவய்ய ப3ஹு ஜன்மமுலனு நேனனேக
விருல வேல பூஜிஞ்சின ப2லமு (நீவே)


சரணம் 2
1ரணாக3த ஜன பாப ஜ்வலனமுனு
1மன ஜேயு ஜல பூரித க4னமு
ஸுர முனி ஜன யோகி33ணமுல ஹ்ரு23யமு
ஸு-க்3ரு2ஹமௌ 2ஸச்சிதா3னந்த34னமு (நீவே)


சரணம் 3
ஸாக3ர ஸ1யன நது3லலோ மேலைன
3ஸ்வர்-நதீ3 ஸ்நானம்பு3ன கல்கு32லமு
4த்யாக3ராஜு வரமனி ப்3ரஹ்மாது3லகு
ஸத்யமு ஜேஸி பல்கின தாரகமு (நீவே)


பொருள் - சுருக்கம்
தாமரையிதழ்க் கண்ணா! (பாற்)கடற்றுயில்வோனே!

  • கேளய்யா;
  • உன்னையன்றி என்னையெவர் காப்பரய்யா;

    • தேவையான கோரிக்கைகளை யளித்தென்னை மிக்கு கருணித்துக் காக்கும் தாய் தந்தையர் நீயே;

    • முன்பு எமது குலத்தினில் தோன்றிய பெரியோர்கள், தவங்களியற்றி ஈட்டிய செல்வமும்,
    • பல பிறவிகளில், நான் பல்லாயிரம் மலர்களினால் வழிபட்ட பயனும் நீயே;

    • சரணடைந்த மக்களின் பாவமெனும் தீக்கொழுந்தினை தணியச் செய்யும் நீர்கொண்ட முகிலும்,
    • வானோர், முனிவர்கள், யோகியர்களின் இதயங்களே புனித இல்லமாகும், சச்சிதானந்தப் பெருந்தகையும் நீயே;

    • நதிகளில் மேலான வானோர் நதியில், புனித நீராடலினால் கிடைக்கும் பயனும்,
    • தியாகராசன், வரமென, பிரமன் முதலானோருக்கு ஆணையிட்டுப் பகன்ற தாரகமும் நீயே.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீவே கானி நன்னு-எவரு காதுருரா
உன்னை அன்றி என்னை எவர் காப்பரய்யா,

நீரஜ த3ள நயன
தாமரை இதழ் கண்ணா?


அனுபல்லவி
காவலஸின கோரிகலு-இச்சி நன்னு சால
தேவையான கோரிக்கைகளை அளித்து என்னை மிக்கு

கருணிஞ்சி ப்3ரோசே தல்லி தண்ட்3ரிவி (நீவே)
கருணித்துக் காக்கும் தாய் தந்தையர் நீயே...


சரணம்
சரணம் 1
முனு மா வம்ஸ1முன கலுகு3 பெத்33லு
முன்பு எமது குலத்தினில் தோன்றிய பெரியோர்கள்,

தபமுலனு ஜேஸி-ஆர்ஜிஞ்சின த4னமு
தவங்கள் இயற்றி ஈட்டிய செல்வமும்,

வினு-அய்ய ப3ஹு ஜன்மமுலனு நேனு-அனேக
கேள் அய்யா பல பிறவிகளில், நான் பல

விருல வேல பூஜிஞ்சின ப2லமு (நீவே)
மலர்கள் ஆயிரம் வழிபட்ட பயனும் நீயே...


சரணம் 2
1ரணு-ஆக3த ஜன பாப ஜ்வலனமுனு
சரண் அடைந்த மக்களின் பாவமெனும் தீக்கொழுந்தினை

1மன ஜேயு ஜல பூரித க4னமு
தணியச் செய்யும் நீர் கொண்ட முகிலும்,

ஸுர முனி ஜன யோகி33ணமுல ஹ்ரு23யமு
வானோர், முனிவர்கள், யோகியர்களின் இதயங்களே

ஸு-க்3ரு2ஹமௌ ஸத்-சித்-ஆனந்த34னமு (நீவே)
புனித இல்லமாகும் சச்சிதானந்தப் பெருந்தகையும் நீயே...


சரணம் 3
ஸாக3ர ஸ1யன நது3லலோ மேலைன
(பாற்)கடல் துயில்வோனே! நதிகளில் மேலான

ஸ்வர்-நதீ3 ஸ்நானம்பு3ன கல்கு32லமு
வானோர் நதியில் புனித நீராடலினால் கிடைக்கும் பயனும்,

த்யாக3ராஜு வரமு-அனி ப்3ரஹ்மா-ஆது3லகு
தியாகராசன், வரம் என, பிரமன் முதலானோருக்கு

ஸத்யமு ஜேஸி பல்கின தாரகமு (நீவே)
ஆணை இட்டு பகன்ற தாரகமும் நீயே...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ப்3ரோசே - ப்3ரோசு.

3 - ஸ்வர்-நதீ3 - ஸுவர்-நதீ3 - ஸ்வர்ண-நதீ3 : இவ்விடத்தில் இச்சொல் கங்கை நதியினைக் குறிக்கும். சமஸ்கிருத அகராதியின்படி 'ஸ்வர்-க3ங்கா3' மற்றும் 'ஸுர நதீ3' என்ற சொற்கள் கங்கை நதியினைக் குறிக்கும். எனவே 'ஸ்வர்-நதீ3' என்ற சொல் ஏற்கப்பட்டது.

Top

மேற்கோள்கள்
2 - ஸச்சிதா3னந்த3 - சச்சிதானந்தம் சத்-சித்-ஆனந்தம் - பரம்பொருளின் இலக்கணம்

Top

விளக்கம்
4 - த்யாக3ராஜு - தியாகராசன் - சிவனைக் குறிக்கும்.

வானோர் நதி - கங்கை
தாரகம் - பிறவிக்கடலினைக் கடத்துவிக்கும் 'இராமா' யெனும் நாமம்.

Top


Updated on 28 Jan 2010

No comments: