Monday, January 4, 2010

தியாகராஜ கிருதி - முனுபே தெலியக - ராகம் ப3ங்கா3ள - Munupe Teliyaka - Raga Bangala

பல்லவி
முனுபே தெலியக போயெனா
முனி நுத த3ய லேதா3யெனா

அனுபல்லவி
1அனுவிஸுமந்த லேத3னுசுனு
நன்னலயிஞ்சி வேடு3க ஜூசுடகு (மு)

சரணம்
ஆ நாடி மஞ்சி நட3தனு ஜூசி
நீவத்யந்த க்ரு2ப ஸேய லேதா3
ஈ நாடு3 நா மதி3யிட்டௌனனி
நீகின குல திலக ஸ்ரீ த்யாக3ராஜ நுத (மு)


பொருள் - சுருக்கம்
முனிவரால் போற்றப் பெற்றோனே! பரிதி குலத்திலகமே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

  • முன்னமே தெரியாமற்போனதோ?
  • வசதி சிறிதளவும் இல்லையென, என்னை அலைய வைத்து, வேடிக்கை பார்ப்பதற்கு, முன்னமே தெரியாமற்போனதோ?

  • அன்றைய நன்னடத்தையினைக் கண்டு, நீ மிக்கு கருணை புரியவில்லையா?
  • இன்று எனதுள்ளம் இவ்விதமாகுமென, உனக்கு, முன்னமே தெரியாமற்போனதோ?

  • அன்றி, தயை இல்லாமற்போனதோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
முனுபே/ தெலியக/ போயெனா/
முன்னமே/ தெரியாமல்/ போனதோ/

முனி/ நுத/ த3ய/ லேது3-ஆயெனா/
முனிவரால்/ போற்றப் பெற்றோனே/ தயை/ இல்லாமற்போனதோ


அனுபல்லவி
அனுவு/-இஸுமு/-அந்த/ லேது3/-அனுசுனு/
வசதி/ சிறிது/ அளவும்/ இல்லை/ என/

நன்னு/-அலயிஞ்சி/ வேடு3க/ ஜூசுடகு/ (மு)
என்னை/ அலைய/ வைத்து/ வேடிக்கை/ பார்ப்பதற்கு/ முன்னமே...


சரணம்
ஆ நாடி/ மஞ்சி/ நட3தனு/ ஜூசி/
அன்றைய/ நல்ல/ நடத்தையினை/ கண்டு/

நீவு/-அத்யந்த/ க்ரு2ப/ ஸேய லேதா3/
நீ/ மிக்கு/ கருணை/ புரியவில்லையா/

ஈ நாடு3/ நா/ மதி3/-இட்டு/-ஔனு/-அனி/
இன்று/ எனது/ உள்ளம்/ இவ்விதம்/ ஆகும்/ என/

நீகு/-இன/ குல/ திலக/ ஸ்ரீ த்யாக3ராஜ/ நுத/ (மு)
உனக்கு/ பரிதி/ குல/ திலகமே/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ முன்னமே...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - அனுவிஸுமந்த - வசதி சிறிதளவும் - 'அனுவு' என்ற சொல்லுக்கு 'வசதி', 'தருணம்', 'தகுதி' என்ற பொருள்களுண்டு. ஆனால், புத்தகங்களில், 'வசதி', 'தருணம்' என்ற பொருளில் இச்சொல் ஏற்கப்பட்டுள்ளது. அங்ஙனமே, இங்கும் மொழிபெயர்க்கப்பட்டது.

Top


Updated on 04 Jan 2010

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
அனுபல்லவியில் இஸுமந்த என்பதற்கு சிறிதளவு எனும் பொருள் கொடுக்கப் பட்டுள்ளது. இஸுமு என்பதற்கு மணல் எனும் பொருளும் கொடுக்கப் பட்டுள்ளது. மணலுக்கு இஸக/இஸுக என்னும் சொற்கள் தானே வழக்கிலுள்ளன.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

தெலுங்கு அகராதியின்படி 'இஸுமு', 'இஸுக' - இரண்டிற்கும் ஒரே பொருள்தான். அகராதி இஸுமு- இஸுக நோக்கவும்.

வணக்கம்
கோவிந்தன்