Tuesday, January 5, 2010

தியாகராஜ கிருதி - ஸாக்ஷி லேத3னுசு - ராகம் ப3ங்கா3ள - Sakshi Ledanuchu - Raga Bangala

பல்லவி
ஸாக்ஷி லேத3னுசு ஸாதி4ம்பகே
ஸத்ய ஸந்த4 ஸத்34க்த பாலக

அனுபல்லவி
வீக்ஷகாது3லெல்ல நவ்வரா ஜக3த்-
ஸாக்ஷி வம்ஸ1 நீரதி4 பூர்ண சந்த்3ர (ஸா)

சரணம்
1க்தி நீயெட3 நிண்டா3ர லேதா3 பரா-
1க்தி ப்3ரோவ லேதா3 விஷயமந்து3
விரக்தி கல்கு3 ஸ்ரீ த்யாக3ராஜுனி நிஜ
4க்தி நீவெருக3 லேவா மானவுல (ஸா)


பொருள் - சுருக்கம்
சொல் தவறாதவனே! நற்றொண்டரைப் பேணுவோனே! உலக சாட்சி குலக்கடலின் முழு மதியே!

  • சாட்சியில்லையென சாதிக்காதே;
  • நோக்குவோர் யாவரும் நகைப்பரன்றோ?

    • வல்லமையுன்னிடம் நிறைய இல்லையா?
    • பராசக்தி காக்கவில்லையா?
    • விடயங்களில் பற்றின்மை உண்டாகும் தியாகராசனின் உண்மையான பக்தியினை நீ அறிந்திலையோ?


  • மானவர்களின் சாட்சியில்லையென சாதிக்காதே.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸாக்ஷி/ லேது3/-அனுசு/ ஸாதி4ம்பகே/
சாட்சி/ இல்லை/ என/ சாதிக்காதே/

ஸத்ய ஸந்த4/ ஸத்3-ப4க்த/ பாலக/
சொல் தவறாதவனே/ நற்றொண்டரை/ பேணுவோனே/


அனுபல்லவி
வீக்ஷகாது3லு/-எல்ல/ நவ்வரா/ ஜக3த்-/
நோக்குவோர்/ யாவரும்/ நகைப்பரன்றோ/ உலக/

ஸாக்ஷி/ வம்ஸ1/ நீரதி4/ பூர்ண/ சந்த்3ர/ (ஸா)
சாட்சி/ குல/ கடலின்/ முழு/ மதியே/


சரணம்
1க்தி/ நீயெட3/ நிண்டா3ர/ லேதா3/
வல்லமை/ உன்னிடம்/ நிறைய/ இல்லையா/

பராஸ1க்தி/ ப்3ரோவ லேதா3/ விஷயமந்து3/
பராசக்தி/ காக்கவில்லையா/ விடயங்களில்/

விரக்தி/ கல்கு3/ ஸ்ரீ த்யாக3ராஜுனி/ நிஜ/
பற்றின்மை/ உண்டாகும்/ ஸ்ரீ தியாகராசனின்/ உண்மையான/

4க்தி/ நீவு/-எருக3 லேவா/ மானவுல/ (ஸா)
பக்தியினை/ நீ/ அறிந்திலையோ/ மானவர்களின்/ சாட்சி...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
உலக சாட்சி - பரிதி
விடயம் - புலன்களால் நுகரப்படுபவை

Top


Updated on 05 Jan 2010

No comments: