Wednesday, January 6, 2010

தியாகராஜ கிருதி - க3ட்டிகா3னு - ராகம் பே3க3ட3 - Gattiganu - Raga Begada

பல்லவி
3ட்டிகா3னு நனு செயி பட்டேதெ3ன்னடிகோ

அனுபல்லவி
புட்டின நாடனுண்டி3 இட்டி வித4முலே கானி (க3)

சரணம்
சரணம் 1
கொ3ப்ப தனமு மனத3னி மத3மெப்படிகினி தலகெக்கி
தப்பு பலுகுலாடு3சு 1தானுப்பதில்லுசுனு
தெப்புனயிங்கி3தமெருக3க மெப்புலகாஸி1ஞ்சுயா
சப்பனி ப்ரபு4வுல கட3னனு த்ரிப்படயேலராயனுசுனு (க3)


சரணம் 2
வரமைன ஸஜ்ஜனுலனு பரிசாரகுலனெல்லனு
ஸரி ஜேஸி தா3னமொஸகி3 பரமெஞ்சகனு
கரி த4ன மத3முலு கலிகி3ன நருலனு பூஜிஞ்செடு3யா
தரமெருக3னி த4னிகுலயனுஸரணமேலராயனுசுனு (க3)


சரணம் 3
ஸி1வ பூஜலு மரியுனு மாத4வ பூஜலுனொனரிஞ்சுசு
பு4வி தா ஸரி ஜேஸெடி3 வாரெவரனுசுனுயெஞ்சு
அவிவேக த4ன மத்துல 2ஸி1வ ஸி1 வேட33 வத்33னி
குவலய த3ள லோசன ஸு-விப4வ த்யாக3ராஜ வினுத (க3)


பொருள் - சுருக்கம்
தியாகராசன் போற்றும் குவளையிதழ்க் கண்ணா! பெருந்தகையே!

  • கெட்டியாக என்னைக் கைப் பற்றுவதென்றைக்கோ?
  • பிறந்த நாள் முதலாக இவ்விதமேயன்றி, கெட்டியாக எனது கைப் பற்றுவதென்றைக்கோ?

    • மேன்மை தமதென, செருக்கு எவ்வமயமும் தலைக்கேறி,
    • தவறான சொற்கள் பேசிக்கொண்டு, தான் பெருமிதமுற்று,
    • விரைவினில், இங்கிதமறியாது, பெயருக்காசைப்படும்
    • அந்த சுவையற்ற பிரபுக்களின் பக்கம் திரிவதேனடா என்று

  • கெட்டியாக என்னைக் கைப் பற்றுவதென்றைக்கோ?

    • உயரிய நல்லோரையும், (தமது) பணியாளர்கள் யாவரையும் சமமாக்கி, கொடையளித்து,
    • மறுமையினைப் பற்றியெண்ணாது,
    • கரி மற்றும் செல்வச் செருக்குடை மனிதர்களைத் தொழும்
    • அந்த தரமறியாச் செல்வந்தர்களைப் பின்தொடர்தலேனடா என்று

  • கெட்டியாக என்னைக் கைப் பற்றுவதென்றைக்கோ?

    • சிவ வழிபாடு, மற்றும் மாதவ வழிபாடுகளை நடத்திக்கொண்டு,
    • புவியில் தமக்கு நிகர் (வழிபாடு) செய்பவர் எவரென எண்ணும்,
    • விவேகமற்ற, செல்வ மத்தர்களை, சிவ சிவ! வேண்டாதே என்று,

  • கெட்டியாக என்னைக் கைப் பற்றுவதென்றைக்கோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
3ட்டிகா3னு/ நனு/ செயி/ பட்டேதி3/-என்னடிகோ/
கெட்டியாக/ என்னை/ கை/ பற்றுவது/ என்றைக்கோ/


அனுபல்லவி
புட்டின/ நாடனு/-உண்டி3/ இட்டி/ வித4முலே/ கானி/ (க3)
பிறந்த/ நாள்/ முதலாக/ இந்த/ விதமே/ அன்றி/ கெட்டியாக...


சரணம்
சரணம் 1
கொ3ப்ப தனமு/ மனதி3/-அனி/ மத3மு/-எப்படிகினி/ தலகு/-எக்கி/
மேன்மை/ தமது/ என/ செருக்கு/ எவ்வமயமும்/ தலைக்கு/ ஏறி/

தப்பு/ பலுகுலு/-ஆடு3சு/ தானு/-உப்பதில்லுசுனு/
தவறான/ சொற்கள்/ பேசிக்கொண்டு/ தான்/ பெருமிதமுற்று/

தெப்புன/-இங்கி3தமு/-எருக3க/ மெப்புலகு/-ஆஸி1ஞ்சு/-ஆ/
விரைவினில்/ இங்கிதம்/ அறியாது/ பெயருக்கு/ ஆசைப்படும்/ அந்த/

சப்பனி/ ப்ரபு4வுல/ கட3னனு/ த்ரிப்பட/-ஏலரா/-அனுசுனு/ (க3)
சுவையற்ற/ பிரபுக்களின்/ பக்கம்/ திரிவது/ ஏனடா/ என்று/ கெட்டியாக...


சரணம் 2
வரமைன/ ஸஜ்ஜனுலனு/ பரிசாரகுலனு/-எல்லனு/
உயரிய/ நல்லோரையும்/ (தமது) பணியாளர்கள்/ யாவரையும்/

ஸரி/ ஜேஸி/ தா3னமு/-ஒஸகி3/ பரமு/-எஞ்சகனு/
சமம்/ ஆக்கி/ கொடை/ அளித்து/ மறுமையினைப் பற்றி/ எண்ணாது/

கரி/ த4ன/ மத3முலு கலிகி3ன/ நருலனு/ பூஜிஞ்செடு3/-ஆ/
கரி/ (மற்றும்) செல்வ/ செருக்குடை/ மனிதர்களை/ தொழும்/ அந்த/

தரமு/-எருக3னி/ த4னிகுல/-அனுஸரணமு/-ஏலரா/-அனுசுனு/ (க3)
தரம்/ அறியா/ செல்வந்தர்களை/ பின்தொடர்தல்/ ஏனடா/ என்று/ கெட்டியாக...


சரணம் 3
ஸி1வ/ பூஜலு/ மரியுனு/ மாத4வ/ பூஜலுனு/-ஒனரிஞ்சுசு/
சிவ/ வழிபாடு/ மற்றும்/ மாதவ/ வழிபாடுகளை/ நடத்திக்கொண்டு/

பு4வி/ தா/ ஸரி/ ஜேஸெடி3 வாரு/-எவரு/-அனுசுனு/-எஞ்சு/
புவியில்/ தமக்கு/ நிகர்/ (வழிபாடு) செய்பவர்/ எவர்/ என/ எண்ணும்/

அவிவேக/ த4ன/ மத்துல/ ஸி1வ/ ஸி1வ/ வேட33 வத்3து3/-அனி/
விவேகமற்ற/ செல்வ/ மத்தர்களை/ சிவ/ சிவ/ வேண்டாதே/ என்று/

குவலய/ த3ள/ லோசன/ ஸு-விப4வ/ த்யாக3ராஜ/ வினுத/ (க3)
குவளை/ இதழ்/ கண்ணா/ பெருந்தகையே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ கெட்டியாக...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - உப்பதில்லு - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. எதுகை-மோனையை நோக்கில் இச்சொல்லே சரியெனத் தோன்றுகின்றது. ஆனால் சரியான தெலுங்கு சொல் 'உப்33தில்லு' ஆகும்.

2 - ஸி1வ ஸி1 - சிவ சிவ - கேளத்தகாதவை கேட்க 'சிவ சிவ' எனல்

Top


Updated on 06 Jan 2010

No comments: