தனவாரி தனமு லேதா3
தாரகாதி4பானன வாதா3
அனுபல்லவி
இன வம்ஸ1 ராஜுலகீ
கு3ணமுலென்னடை3ன கலதா3 நாது3பை (த)
சரணம்
சரணம் 1
அல நாடு3 1அன்னமாரகி3ஞ்சு வேள
ப3லு வானருல பங்க்தினுஞ்ச லேதா3 (த)
சரணம் 2
2பேர பேர பிலிசி ஹாரமுலு ப்ரேம
மீர மீரொஸக3 லேதா3 நாது3பை (த)
சரணம் 3
ராம ராம ராம ரச்ச ஸேயகவே
தாமஸம்பு3யேல த்யாக3ராஜ நுத (த)
பொருள் - சுருக்கம்
மதி வதனத்தோனே, இராமா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
- என்மீது தன்னவனெனும் தன்மை இல்லையா?
- வாதா?
- பரிதி குல மன்னர்களுக்கு இந்த குணங்கள் என்றாவது உண்டா?
- அந்நாள், உணவுண்ணும் போழ்து, வல்ல வானரர்களை (சம) பந்தியில் இருத்தவில்லையா?
- பெயர் பெயராக அழைத்து, மாலைகளை கனிவு மீர, நீங்கள் அளிக்கவில்லையா?
- அந்நாள், உணவுண்ணும் போழ்து, வல்ல வானரர்களை (சம) பந்தியில் இருத்தவில்லையா?
- தகராறு செய்யாதீருமய்யா;
- தாமதமேனோ?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தனவாரி/ தனமு/ லேதா3/
தன்னவனெனும்/ தன்மை/ இல்லையா/
தாரக/-அதி4ப/-ஆனன/ வாதா3/
தாரை/ அதிபன் (மதி)/ வதனத்தோனே/ வாதா/
அனுபல்லவி
இன/ வம்ஸ1/ ராஜுலகு/-ஈ/
பரிதி/ குல/ மன்னர்களுக்கு/ இந்த/
கு3ணமுலு/-என்னடை3ன/ கலதா3/ நாது3பை/ (த)
குணங்கள்/ என்றாவது/ உண்டா/ என்மீது/ தன்னவனெனும்...
சரணம்
சரணம் 1
அல/ நாடு3/ அன்னமு/-ஆரகி3ஞ்சு/ வேள/
அந்த/ நாள்/ உணவு/ உண்ணும்/ போழ்து/
ப3லு/ வானருல/ பங்க்தினி/-உஞ்ச லேதா3/ (த)
வல்ல/ வானரர்களை/ (சம) பந்தியில்/ இருத்தவில்லையா/
சரணம் 2
பேர/ பேர/ பிலிசி/ ஹாரமுலு/ ப்ரேம/
பெயர்/ பெயராக/ அழைத்து/ மாலைகளை/ கனிவு/
மீர/ மீரு/-ஒஸக3 லேதா3/ நாது3பை/ (த)
மீர/ நீங்கள்/ அளிக்கவில்லையா/ என்மீது/ தன்னவனெனும்...
சரணம் 3
ராம/ ராம/ ராம/ ரச்ச/ ஸேயகவே/
இராமா/ இராமா/ இராமா/ தகராறு/ செய்யாதீருமய்யா/
தாமஸம்பு3/-ஏல/ த்யாக3ராஜ/ நுத/ (த)
தாமதம்/ ஏனோ/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் முதலிரண்டு சரணங்கள் வரிசை மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
2 - பேர பேர பிலிசி - பெயர் பெயராக - போரில் பங்கேற்ற வானரர்களைக் குறிக்கும். வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், கடைசி அத்தியாயம் (இராமன் முடிசூடுதல்) நோக்கவும்.
விளக்கம்
1 - அன்னமாரகி3ஞ்சு வேள - உணவு உண்ணும் போழ்து - இத்தகைய சம்பவம் ஏதும் வால்மீகி ராமாயணத்தில் காணப்படவில்லை.
Top
Updated on 10 Jan 2010
No comments:
Post a Comment