Saturday, January 30, 2010

தியாகராஜ கிருதி - வாஸுதே3வ வர கு3ண - ராகம் பி3லஹரி - Vasudeva Vara Guna - Raga Bilahari

பல்லவி
வாஸுதே3வ வர கு3ண மாமவ

அனுபல்லவி
வாஸவ ஹ்ரு23ய நிவாஸ சித்3விலாஸ (வா)

சரணம்
சரணம் 1
ஸாக3ர ஸ1யன ப4வ ஸாக3ர தாரக (வா)


சரணம் 2
நீரஜ நயன க4ன நீல ஸு-ஜன பால (வா)


சரணம் 3
பா43வத ப்ரிய த்யாக3ராஜார்சித (வா)


பொருள் - சுருக்கம்
  • வாசுதேவா! நற்பண்புகளோனே!
  • வாசவன் இதயத்துறைவோனே! சித்தத்தினிலொளிர்பவனே!
  • (பாற்)கடற்றுயில்வோனே! பிறவிக்கடலினைக் கடத்துவிப்போனே!
  • கமலக் கண்ணா! கார்முகில் நீலவண்ணா! நல்லோரைப் பேணுவோனே!
  • பாகவதர்களுக் கினியோனே! தியாகராசனால் தொழப் பெற்றோனே!

    • என்னைக் காப்பாய்



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வாஸுதே3வ/ வர/ கு3ண/ மாம்/-அவ/
வாசுதேவா/ நற்/ பண்புகளோனே/ என்னை/ காப்பாய்/


அனுபல்லவி
வாஸவ/ ஹ்ரு23ய/ நிவாஸ/ சித்/-விலாஸ/ (வா)
வாசவன்/ இதயத்து/ உறைவோனே/ சித்தத்தினில்/ ஒளிர்பவனே/


சரணம்
சரணம் 1
ஸாக3ர/ ஸ1யன/ ப4வ/ ஸாக3ர/ தாரக/ (வா)
(பாற்)கடல்/ துயில்வோனே/ பிறவி/ கடலினை/ கடத்துவிப்போனே/


சரணம் 2
நீரஜ/ நயன/ க4ன/ நீல/ ஸு-ஜன/ பால/ (வா)
கமல/ கண்ணா/ கார்முகில்/ நீலவண்ணா/ நல்லோரை/ பேணுவோனே/


சரணம் 3
பா43வத/ ப்ரிய/ த்யாக3ராஜ/-அர்சித/ (வா)
பாகவதர்களுக்கு/ இனியோனே/ தியாகராசனால்/ தொழப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
வாசவன் - இந்திரன்

Top


Updated on 31 Jan 2010

No comments: