Monday, January 25, 2010

தியாகராஜ கிருதி - தொ3ரகுனாயிடுவண்டி - ராகம் பி3லஹரி - Dorakunaayituvanti - Raga Bilahari

பல்லவி
தொ3ரகுனா1யிடுவண்டி ஸேவ

அனுபல்லவி
தொ3ரகுனா அல்ப தபமொனரிஞ்சின பூ4-
ஸுர வருலகைன ஸுருலகைன (தொ3)

சரணம்
சரணம் 1
2தும்பு3ரு நாரது3லு ஸுகு3
3கீர்தனம்பு3னாலாபமு ஸேயக3
அம்ப3ரீஷ முக்2யுலு நாமமு
ஸேயக3 4ஜாஜுலு பை சல்லக3
பி3ம்பா34ருலகு3 ஸுரவாரயலி
வேணுலு நாட்யமுலாட33
அம்பு3ஜ ப45பாகாருலிரு-
33லனன்வய பி3ருதா3வளினி பொக333
அம்ப3ர வாஸ ஸதுலு கர
கங்கணம்பு3லு க4ல்லனி விஸரக3 மணி
ஹாரம்பு3லு கத3லக3னூசே ப2ணி
தல்பம்பு3ன நெலகொன்ன ஹரினி கனுகொ3ன (தொ3)


சரணம் 2
மரகத மணி ஸன்னிப4 தே3ஹம்பு3
மெருகு3 கனக சேலமு ஸோ1பி4ல்ல
சரண யுக3 நகா2வளி காந்துலு
6சந்து3ரு பில்லலனு கேர
வர நூபுரமு வெலுக3 கர யுக3முன
வஜ்ரபு பூ4ஷணமுலு மெரய
உரமுன முக்தா ஹாரமுலு மரியு
உசிதமைன மகர குண்ட3லம்பு3லு
சிரு நவ்வுலு கல வத3னம்பு3
முங்கு3ருலத்33ம்பு கபோலமு முத்3து3
குரியு தி3வ்ய பா2லம்பு3ன திலகமு
மெரயு பு4வி லாவண்ய நிதி4னி கன (தொ3)


சரணம் 3
தாமஸ கு3ண ரஹித முனுலகு பொக33
தரமு கா3கனே ப்4ரமஸி நில்வக3
ஸ்ரீமத்கனகபு தொட்ல பைனி
செலுவொந்த3 கொலுவுண்ட33
காமித ப2ல தா3யகியௌ ஸீதா
காந்துனி கனியுப்பொங்க33
7ராம ப்3ரஹ்ம தனயுடௌ3
த்யாக3ராஜு தா பாடு3சுனூசக3
ராமுனி ஜக3து3த்3தா4ருனி ஸுர ரிபு
பீ4முனி த்ரி-கு3ணாதீதுனி பூர்ண
காமுனி சின்மய ரூபுனி ஸத்3-கு3
தா4முனி கனுலார மதி3னி கனுகொ3ன (தொ3)


பொருள் - சுருக்கம்
  • கிடைக்குமா இப்படிப்பட்ட சேவை!
  • கிடைக்குமா அற்பத் தவமியற்றிய அந்தணப் பெரியோருக்காகிலும், வானோருக்காகிலும், இப்படிப்பட்ட சேவை!

    • தும்புரு மற்றும் நாரதர் (இறைவனின்) நற்பண்பு கீர்த்தனங்களினை ஆலாபம் செய்ய,
    • அம்பரீடர் முதலிய தலைசிறந்தோர், நாம செபம் செய்கையில், சாதி மல்லிகை மலர்களை (அவன்) மீது தூவ,
    • கோவை (நிகர்) இதழுடை, வானோர் நடன மாதராம் (வண்டு நிகர்) கருங்குழலியர் நாட்டியங்களாட,
    • மலரோன் மற்றும் இந்திரன் (இறைவனின்) இரு புறமும் (நின்று) (பரிதி) குல விருதுப் பட்டியலினைப் புகழ,
    • வானுறை மடந்தையர் கர கங்கணங்கள் கலீரென, விசிற,
    • (திரு மார்பினில்) மணி மாலைகளசைய,

  • ஆடும் அரவு அணையினில் நிலைபெற்ற அரியினைக் கண்டுகொள்ளக் கிடைக்குமா!

    • மரகத மணி நிகருடம்பினில், பளபளக்கும் பொன்னாடையொளிர,
    • திருவடியிணை நக வரிசைகளின் ஒளி, சந்திரக்குஞ்சுகளினைப் பழிக்க,
    • உயர் சிலம்பு விளங்க,
    • இரு கரங்களிலும் வைர ஆபரணங்கள் ஒளிர,
    • திருமார்பினில் முத்து மாலைகளும்,
    • உகந்த மகர குண்டலங்களும்,
    • புன்னகை தவழும் வதனத்தினில் (முடி) சுருளல்களும்,
    • கண்ணாடிக் கன்னங்களும்,
    • எழில் வழியும் திவ்வியமான நெற்றியினில் திலகமும் திகழும்,

  • புவியின் பேரழகுச் செல்வத்தினைக் காணக் கிடைக்குமா!

    • தாமத குணமற்ற முனிவர்களுக்கும், புகழ வொண்ணாது (அவர்) மலைத்து நிற்க,
    • உயர்ந்த தங்கத்தொட்டிலின் மீது, எழில் தவழ (இறைவன்) கொலுவிருக்க,
    • (தொண்டருக்கு) விரும்பிய பயனை யருளும் சீதை, கணவனைக் கண்டு பெருமிதமுற,
    • இராம பிரமத்தின் மைந்தனாம் தியாகாராசன், தான் பாடிக்கொண்டு ஆராட்ட,
    • இராமனை,
    • உலகினைப் பேணுவோனை,
    • வானோர் பகைவருக்கு அச்சமூட்டுவோனை,
    • முக்குணங்களுக்கு மேற்பட்டோனை,
    • நிறையப்பெறும் இச்சைகளோனை,
    • சின்மயமான உருவத்தோனை,
    • நற்பண்புகளின் உறைவிடத்தினை,

  • கண்ணார, உள்ளத்தினில் கண்டுகொள்ளக் கிடைக்குமா!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தொ3ரகுனா/-இடுவண்டி/ ஸேவ/
கிடைக்குமா/ இப்படிப்பட்ட/ சேவை/


அனுபல்லவி
தொ3ரகுனா/ அல்ப/ தபமு/-ஒனரிஞ்சின/
கிடைக்குமா/ அற்ப/ தவம்/ இயற்றிய/

பூ4-ஸுர/ வருலகு/-ஐன/ ஸுருலகு/-ஐன/ (தொ3)
அந்தண/ பெரியோருக்கு/ ஆகிலும்/ வானோருக்கு/ ஆகிலும்/ கிடைக்குமா...


சரணம்
சரணம் 1
தும்பு3ரு/ நாரது3லு/ ஸுகு3ண/
தும்புரு/ மற்றும் நாரதர்/ (இறைவனின்) நற்பண்பு/

கீர்தனம்பு3லனு/-ஆலாபமு/ ஸேயக3/
கீர்த்தனங்களினை/ ஆலாபம்/ செய்ய/

அம்ப3ரீஷ/ முக்2யுலு/ நாமமு/
அம்பரீடர்/ முதலிய தலைசிறந்தோர்/ நாம செபம்/

ஸேயக3/ ஜாஜுலு/ பை/ சல்லக3/
செய்கையில்/ சாதி மல்லிகை மலர்களை/ (அவன்) மீது/ தூவ/

பி3ம்ப3/-அத4ருலகு3/ ஸுர/ வார/-அலி/
கோவை/ (நிகர்) இதழுடை/ வானோர்/ நடன/ மாதராம்/ வண்டு/

வேணுலு/ நாட்யமுலு/-ஆட33/
(நிகர் கருங்) குழலியர்/ நாட்டியங்கள்/ ஆட/

அம்பு3ஜ ப4வ/ பாக/-அருலு/-இரு/-
மலரோன்/ (மற்றும்) பாகாசுரன்/ எதிரி (இந்திரன்)/ (இறைவனின்) இரு/

33லனு/-அன்வய/ பி3ருது3/-ஆவளினி/ பொக333/
புறமும்/ (நின்று) (பரிதி) குல/ விருது/ பட்டியலினை/ புகழ/

அம்ப3ர/ வாஸ/ ஸதுலு/ கர/
வான்/ உறை/ மடந்தையர்/ கர/

கங்கணம்பு3லு/ க4ல்லனி/ விஸரக3/ மணி/
கங்கணங்கள்/ கலீரென/ விசிற/ (திரு மார்பினில்) மணி/

ஹாரம்பு3லு/ கத3லக3னு/-ஊசே/ ப2ணி/
மாலைகள்/ அசைய/ ஆடும்/ அரவு/

தல்பம்பு3ன/ நெலகொன்ன/ ஹரினி/ கனுகொ3ன/ (தொ3)
அணையினில்/ நிலைபெற்ற/ அரியினை/ கண்டுகொள்ள/ கிடைக்குமா...


சரணம் 2
மரகத/ மணி/ ஸன்னிப4/ தே3ஹம்பு3ன/
மரகத/ மணி/ நிகர்/ உடம்பினில்/

மெருகு3/ கனக/ சேலமு/ ஸோ1பி4ல்ல/
பளபளக்கும்/ பொன்/ ஆடை/ யொளிர/

சரண/ யுக3/ நக2/-ஆவளி/ காந்துலு/
திருவடி/ இணை/ நக/ வரிசைகளின்/ ஒளி/

சந்து3ரு/ பில்லலனு/ கேர/
சந்திர/ குஞ்சுகளினை/ பழிக்க/

வர/ நூபுரமு/ வெலுக3/ கர யுக3முன/
உயர்/ சிலம்பு/ விளங்க/ இரு கரங்களிலும்/

வஜ்ரபு/ பூ4ஷணமுலு/ மெரய/
வைர/ ஆபரணங்கள்/ ஒளிர/

உரமுன/ முக்தா/ ஹாரமுலு/ மரியு/
திருமார்பினில்/ முத்து/ மாலைகளும்/ அன்றி

உசிதமைன/ மகர/ குண்ட3லம்பு3லு/
உகந்த/ மகர/ குண்டலங்களும்/

சிரு நவ்வுலு/ கல/ வத3னம்பு3ன/
புன்னகை/ தவழும்/ வதனத்தினில்/

முங்கு3ருலு/-அத்33ம்பு/ கபோலமு/ முத்3து3/
(முடி) சுருளல்களும்/ கண்ணாடி/ கன்னங்களும்/ எழில்/

குரியு/ தி3வ்ய/ பா2லம்பு3ன/ திலகமு/
வழியும்/ திவ்வியமான/ நெற்றியினில்/ திலகமும்/

மெரயு/ பு4வி/ லாவண்ய/ நிதி4னி/ கன/ (தொ3)
திகழும்/ புவியின்/ பேரழகு/ செல்வத்தினை/ காண/ கிடைக்குமா...


சரணம் 3
தாமஸ/ கு3ண/ ரஹித/ முனுலகு/ பொக33/
தாமத/ குணம்/ அற்ற/ முனிவர்களுக்கும்/ புகழ/

தரமு கா3கனே/ ப்4ரமஸி/ நில்வக3/
ஒண்ணாது/ (அவர்) மலைத்து/ நிற்க/

ஸ்ரீமத்/-கனகபு/ தொட்ல/ பைனி/
உயர்ந்த/ தங்க/ தொட்டிலின்/ மீது/

செலுவு/-ஒந்த3/ கொலுவு/-உண்ட33/
எழில்/ தவழ/ (இறைவன்) கொலுவு/ இருக்க/

காமித/ ப2ல/ தா3யகியௌ/ ஸீதா/
(தொண்டருக்கு) விரும்பிய/ பயனை/ யருளும்/ சீதை/

காந்துனி/ கனி/-உப்பொங்க33/
கணவனை/ கண்டு/ பெருமிதமுற/

ராம/ ப்3ரஹ்ம/ தனயுடௌ3/
இராம/ பிரமத்தின்/ மைந்தனாம்/

த்யாக3ராஜு/ தா/ பாடு3சுனு/-ஊசக3/
தியாகாராசன்/ தான்/ பாடிக்கொண்டு/ ஆராட்ட/

ராமுனி/ ஜக3த்/-உத்3தா4ருனி/ ஸுர/ ரிபு/
இராமனை/ உலகினை/ பேணுவோனை/ வானோர்/ பகைவருக்கு/

பீ4முனி/ த்ரி-கு3ண/-அதீதுனி/ பூர்ண/
அச்சமூட்டுவோனை/ முக்குணங்களுக்கு/ மேற்பட்டோனை/ நிறையப்பெறும்/

காமுனி/ சின்மய/ ரூபுனி/ ஸத்3-கு3ண/
இச்சைகளோனை/ சின்மயமான/ உருவத்தோனை/ நற்பண்புகளின்/

தா4முனி/ கனுலார/ மதி3னி/ கனுகொ3ன/ (தொ3)
உறைவிடத்தினை/ கண்ணார/ உள்ளத்தினில்/ கண்டுகொள்ள/ கிடைக்குமா...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - கீர்தனம்பு3 - ஸங்கீர்தனம்பு3ல.

Top

மேற்கோள்கள்
2 - தும்பு3ரு - கந்தருவரின் மன்னன் - வானோரின் பாணன்.

4 - ஜாஜுலு - சாதி மல்லிகை.

5 - பாகாரி - பாகாசுரன் பகைவன் - இந்திரன். அமுதம் கடைந்தபின் தேவர்களுக்கும் தானவர்களுக்கும் மூண்ட போரினில் இந்திரன், 'பாக' என்ற அசுரனைக் கொன்றான். பாகவத புராணம், 8-வது புத்தகம், 10-வது அத்தியாயம் நோக்கவும்.

7 - ராம ப்3ரஹ்ம - தியாகராஜரின் தந்தையின் பெயர்.

Top

விளக்கம்
1 - இடுவண்டி ஸேவ - இப்படிப்பட் சேவை. இச்சொற்கள் அனுபல்லிவியை பல்லவியுடன் இணைக்கும்போது மட்டும் சேர்க்க இயலும். சரணங்களை இணைக்கையினில், இச்சொற்கள் சேராது.

6 - சந்து3ரு பில்லலனு - தியாகராசர், இறைவனின் திருவடி நகங்களை, சந்திரக் குஞ்சுகளுக்கு ஒப்பிடுகின்றார். .

அம்பரீடர் - இருடி
சின்மயம் - உணர்வு அல்லது ஞானத் தன்மை

Top


Updated on 25 Jan 2010

No comments: