ஸாமிகி ஸரி ஜெப்ப ஜால வேல்புல ராம (ஸா)
அனுபல்லவி
நா 1மனஸதனிபை நாடியுண்ட3க3னொருல (ஸா)
சரணம்
சரணம் 1
ஏடி யோசன சாலுனெவ்வரிகெடுலோ வ்ராலு
மாடலாடு3ட மேலு மதி3கிதே3 பதி3 வேலு (ஸா)
சரணம் 2
தன கண்டிகெந்தோ முத்3து3 2தப்படா3டி3ன பத்3து3
3சனுவு சேயுனே ப்ரொத்3து3 சல்லனி சூபு கத்3து3 (ஸா)
சரணம் 3
அன்னி வேல்புல லோனனதனி ஸரி கான
தன்னு ப்3ரோசின க4ன த்யாக3ராஜ ஸகு2டை3ன (ஸா)
பொருள் - சுருக்கம்
- இராம சாமிக்கீடு சொல்லவியலேன், (மற்ற) கடவுளர்களை;
- எனது மனம் அவன்மீது நிலைத்திருக்க, மற்ற கடவுளர்களை இராம சாமிக்கீடு சொல்லவியலேன்;
- என்ன யோசனை? போதும்; யாருக்கெவ்விதமோ தலையெழுத்து! (அவன்) பேசுவதே மேல்; உள்ளத்திற்கிதே பதினாயிரம்;
- தனது கண்ணுக்கெத்தனையோ எழில்; தவறான் சொன்ன சொல்; கனிவு கொள்ளும், எவ்வேளையும் குளிர்ந்த பார்வையுண்டு;
- அனைத்து கடவுளர்களிலும், அவனுக்கீடு காணேன்; தன்னைக் காத்த, தியாகராசனின் நெருங்கிய நண்பனாகிய, இராம சாமிக்கீடு சொல்லவியலேன், மற்ற கடவுளர்களை.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸாமிகி/ ஸரி/ ஜெப்ப/ ஜால/ வேல்புல/ ராம/ (ஸா)
சாமிக்கு/ ஈடு/ சொல்ல/ இயலேன்/ (மற்ற) கடவுளர்களை/ இராம/ சாமிக்கீடு...
அனுபல்லவி
நா/ மனஸு/-அதனிபை/ நாடி/-உண்ட3க3/-ஒருல/ (ஸா)
எனது/ மனம்/ அவன்மீது/ நிலைத்து/ இருக்க/ மற்ற/ (கடவுளர்களை) இராம சாமிக்கீடு
சரணம்
சரணம் 1
ஏடி/ யோசன/ சாலுனு/-எவ்வரிகி/-எடுலோ/ வ்ராலு/
என்ன/ யோசனை/ போதும்/ யாருக்கு/ எவ்விதமோ/ தலையெழுத்து/
மாடலு-ஆடு3ட/ மேலு/ மதி3கி/-இதே3/ பதி3 வேலு/ (ஸா)
(அவன்) பேசுவதே/ மேல்/ உள்ளத்திற்கு/ இதே/ பதினாயிரம்/
சரணம் 2
தன/ கண்டிகி/-எந்தோ/ முத்3து3/ தப்படு3/-ஆடி3ன/ பத்3து3/
தனது/ கண்ணுக்கு/ எத்தனையோ/ எழில்/ தவறான்/ சொன்ன/ சொல்/
சனுவு/ சேயு/-ஏ/ ப்ரொத்3து3/ சல்லனி/ சூபு/ கத்3து3/ (ஸா)
கனிவு/ கொள்ளும்/ எந்த/ வேளையும்/ குளிர்ந்த/ பார்வை/ உண்டு/
சரணம் 3
அன்னி/ வேல்புல லோன/-அதனி/ ஸரி/ கான/
அனைத்து/ கடவுளர்களிலும்/ அவனுக்கு/ ஈடு/ காணேன்/
தன்னு/ ப்3ரோசின/ க4ன/ த்யாக3ராஜ/ ஸகு2டை3ன/ (ஸா)
தன்னை/ காத்த/ நெருங்கிய/ தியாகராசனின்/ நண்பனாகிய/ இராம சாமிக்கீடு...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மனஸதனிபை - மனஸுனதனிபை - மனஸனதனபை : 'மனஸதனிபை' என்பதே பொருந்தும்.
2 - தப்படா3டி3ன பத்3து3 - தப்பதா3டி3ன பத்3து3 : இரண்டும் சரியானாலும், இவ்விடத்தில், முன் கூறியதே அதிகம் பொருந்தும்.
3 - சனுவு - சனவு : இரண்டுமே சரியான சொற்களாகும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
பதினாயிரம் - பெரும் சொத்தென
எத்தனையோ எழில் - இறைவனின் உருவம்
Top
Updated on 18 Jan 2010
No comments:
Post a Comment