ஸுந்த3ரி நன்னிந்த3ரிலோ
ஜூசி ப்3ரோவவம்ம த்ரிபுர (ஸு)
அனுபல்லவி
ஸந்த3டி3யனி இந்து3 முகி2
1ஜாலமு வத்3த3ம்ம த்ரிபுர (ஸு)
சரணம்
சரணம் 1
2பா3லே பாலித ஸுர ஜாலே க3மன ஜித
மராலே ஸ்வக்ரு2தாகி2ல லீலே 3திலகாங்கித
பா2லே நீ ப4க்தியு மேலே நீ த3ய
ராதே3லே தல்லி த்ரிபுர (ஸு)
சரணம் 2
வாணி வினுதே ஸு1க பாணி 4வர ஸே1ஷ
வேணி லலிதே கல்யாணி ஸாம்ப3 ஸி1வுனி
ராணி மாது4ர்ய வாணி நம்மிதி
பூபோ3ணி தல்லி த்ரிபுர (ஸு)
சரணம் 3
வாரீஸ1 ஸ்துத க3ம்பீ4ரே ஆதி3 புர
விஹாரி தீ3ன ஜனாதா4ரி நக3 ராஜ
குமாரி து3ஷ்கர்ம விதா3ரி த்யாக3ராஜு
கோரியுன்ன த்ரிபுர (ஸு)
பொருள் - சுருக்கம்
- திரிபுர சுந்தரி!
- மதி முகத்தினளே!
- பாலையே! வானோரைக் காப்பவளே! நடையில் அன்னத்தை வென்றவளே! அனைத்து திருவிளையாடல்களை தான் படைத்தவளே! திலகம் விளங்கும் நெற்றியினளே! தாயே!
- வாணி போற்றுபவளே! கிளியேந்துபவளே! உயர் சேடனின் வேணிகையாளே! மெல்லியளே! கலியாணி! சாம்ப சிவனின் அரசியே! இனிய சொல்லினளே! பூங்கோதையே! தாயே!
- கடலரசன் துதிக்கும் மாட்சிமையுடைத்தவளே! ஆதிபுரத்தில் உறைபவளே! எளியோருக்கு ஆதாரமானவளே! மலையரசன் மகளே! தீய வினைகளைக் களைபவளே! தியாகராசன் கோரியுள்ள திரிபுர சுந்தரி!
- என்னை இவ்வெல்லோரிலும் கண்டு காப்பாயம்மா;
- கும்பலென, ஏய்க்க வேண்டாமம்மா;
- மேலானது உனது பக்தியே;
- உனது தயை வாராதேனோ?
- நம்பினேன்.
- என்னை இவ்வெல்லோரிலும் கண்டு காப்பாயம்மா;
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸுந்த3ரி/ நன்னு/-இந்த3ரிலோ/
சுந்தரி/ என்னை/ இவ்வெல்லோரிலும்/
ஜூசி/ ப்3ரோவு/-அம்ம/ த்ரிபுர/ (ஸு)
கண்டு/ காப்பாய்/ அம்மா/ திரிபுர/ சுந்தரி...
அனுபல்லவி
ஸந்த3டி3/-அனி/ இந்து3/ முகி2/
கும்பல்/ என/ மதி/ முகத்தினளே/
ஜாலமு/ வத்3து3/-அம்ம/ த்ரிபுர/ (ஸு)
ஏய்க்க/ வேண்டாம்/ அம்மா/ திரிபுர/ சுந்தரி...
சரணம்
சரணம் 1
பா3லே/ பாலித/ ஸுர ஜாலே/ க3மன/ ஜித/
பாலையே/ காப்பவளே/ வானோரை/ நடையில்/ வென்றவளே/
மராலே/ ஸ்வ/-க்ரு2த/-அகி2ல/ லீலே/ திலக/-அங்கித/
அன்னத்தை/ தான்/ படைத்தவளே/ அனைத்து/ திருவிளையாடல்களை/ திலகம்/ விளங்கும்/
பா2லே/ நீ/ ப4க்தியு/ மேலே/ நீ/ த3ய/
நெற்றியினளே/ உனது/ பக்தியே/ மேலானது/ உனது/ தயை/
ராது3/-ஏலே/ தல்லி/ த்ரிபுர/ (ஸு)
வாராது/ ஏனோ/ தாயே/ திரிபுர/ சுந்தரி...
சரணம் 2
வாணி/ வினுதே/ ஸு1க/ பாணி/ வர/ ஸே1ஷ/
வாணி/ போற்றுபவளே/ கிளி/ ஏந்துபவளே/ உயர்/ சேடனின்/
வேணி/ லலிதே/ கல்யாணி/ ஸாம்ப3/ ஸி1வுனி/
வேணிகையாளே/ மெல்லியளே/ கலியாணி/ சாம்ப/ சிவனின்/
ராணி/ மாது4ர்ய/ வாணி/ நம்மிதி/
அரசியே/ இனிய/ சொல்லினளே/ நம்பினேன்/
பூ-போ3ணி/ தல்லி/ த்ரிபுர/ (ஸு)
பூங்கோதையே/ தாயே/ திரிபுர/ சுந்தரி...
சரணம் 3
வாரி/-ஈஸ1/ ஸ்துத/ க3ம்பீ4ரே/ ஆதி3/ புர/
கடல்/ அரசன்/ துதிக்கும்/ மாட்சிமையுடைத்தவளே/ ஆதி/ புரத்தில்/
விஹாரி/ தீ3ன ஜன/-ஆதா4ரி/ நக3/ ராஜ/
உறைபவளே/ எளியோருக்கு/ ஆதாரமானவளே/ மலை/ யரசன்/
குமாரி/ து3ஷ்/-கர்ம/ விதா3ரி/ த்யாக3ராஜு/
மகளே/ தீய/ வினைகளை/ களைபவளே/ தியாகராசன்/
கோரி/-உன்ன/ த்ரிபுர/ (ஸு)
கோரி/ உள்ள/ திரிபுர/ சுந்தரி...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - திலகாங்கித - திலகாஞ்சித : லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (632) அம்மையின் ஒர் பெயர் 'ஸிந்தூ3ர திலகாஞ்சிதா' என்பதாகும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - ஜாலமு - இந்த தெலுங்கு சொல்லுக்கு 'ஏய்த்தல்' என்றும் 'தாமதம்' என்று இரண்டு பொருள்களுண்டு. இவ்விடத்தில் 'ஏய்த்தல்' என்ற பொருள் பொருந்தும்.
2 - பா3லே - பாலை - 16 வயதுக்குட்பட்ட இளம்பெண்.
4 - வர ஸே1ஷ வேணி - பார்வதி சேடனை வேணிகையாக (சடை) அணிந்துள்ளதாக.
வேணிகை - சடை
மெல்லியள் - லலிதா
ஆதிபுரம் - இன்றைய திருவொற்றியூர் (சென்னை அருகில்)
Top
Updated on 19 Jn 2010
3 comments:
அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே,
bAlE என்பதற்கு ’ பாலையே!’ என்று பொருள் கொடுத்து அதற்கு விளக்கமாக ‘16 வயதுக்குட்பட்ட இளம்பெண்’ என்று பொருள் கொடுத்துள்ளீர். இளம்பெண் என்று முதலிலேயே கொடுத்திருக்கலாமே. ஏனெனில் பாலையே என்பதனை பால்+ஐ+ஏ என்று பிரித்துப்பொருள் கொள்ளலாம். பாலை மட்டும் எனும் பொருள் படும். அல்லது பா3லையே என்று கொடுத்திருக்கலாம்.
கல்யாணி என்பதற்கு கலியாணி என்று ஏன் பொருள் கூறியுள்ளீர்.
கலியாணி என்ற சொல் உண்டா?
வணக்கம்
கோவிந்தசாமி
திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
கடவுளரின் பெயர்களுக்குப் பொருள் கூறலாம். ஆனால் அப்படி கூறப்பட்ட பொருள் அந்த பெயராகாது. 'பாலா திரிபுரசுந்தரி' என்பதும் 'கல்யாணி' என்பதும் தாயாரின் பெயர்கள். அவற்றினை அப்படியேதான் கொடுக்கவேண்டுமே தவிர மொழிபெயர்த்தல் சரியானதாக எனக்குப்படவில்லை. இதற்கு விலக்கு, கோவில்களில் இறைவன், இறைவியரின் பெயர்கள் தமிழிலே வழங்கும்போது அதையே பயன்படுத்தியுள்ளேன். உதாரணமாக, 'தர்மஸம்வர்த்தனி' என்ற திருவையாறு அம்மையின் பெயர் தமிழில் 'அறம் வளர்த்த நாயகி' என்று வழங்கும். பல இடங்களில் இந்த தமிழ்ப் பெயர்களே சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக, 'தேவயானை' என்ற முருகனின் மனைவியின் பெயரை முத்துஸ்வாமி தீக்ஷிதர் 'கஜாம்பா' என்று மொழிபெயர்த்துள்ளார். எனவே பெயர்களைப் பற்றிய விதிகள் எல்லா மொழிகளிலும் - ஆங்கிலத்திலும் கூட - கொஞ்சம் தளர்த்தப்பட்டுள்ளன.
மேலும் தமிழில் எழுதும்போது, notation schme பயன்படுத்துவதும் சரியென்று எனக்குப்படவில்லை.
'கல்யாணி' என்ற சொல், என் சிற்றறிவுக்கு எட்டியவரை, 'கலியாணி' என்றே தமிழில் எழுதப்படும்.
தற்சமம் மற்றும் தற்பவம் என்ற இலக்கண முறைகளை நான் கூடியவரையில் கடைப்பிடித்து பொருள் கூறியுள்ளேன்.
வணக்கம்
வே கோவிந்தன்.
Post a Comment