வினவே ஓ மனஸா
விவரம்பு3க3 நே தெல்பெத3
அனுபல்லவி
மனஸெரிங்கி3 கு-மார்க3முன
மரி பொரலுசு செட3 வலதே3 (வி)
சரணம்
ஈ நட3தலு பனிகி ராது3
ஈஸ்1வர க்ரு2ப கலுக3 போது3
த்4யான ப4ஜன ஸேயவே
வர த்யாக3ராஜு 1மனவி (வி)
பொருள் - சுருக்கம்
ஓ மனமே!
- சீரிய தியாகராசனின் வேண்டுகோளினைக் கேளாயடி;
- விவரமாக நான் தெரிவிக்கின்றேன்;
- மனதறிந்து, தவறான வழியில் மறுபடியும் புரண்டு, கெடக்கூடாதடி;
- இந்நடத்தைகள் உதவா;
- ஈசனின் கிருபை யுண்டாகாது;
- தியானம், பஜனை செய்வாயடி.
- மனதறிந்து, தவறான வழியில் மறுபடியும் புரண்டு, கெடக்கூடாதடி;
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வினவே/ ஓ மனஸா/
கேளாயடி/ ஓ மனமே/
விவரம்பு3க3/ நே/ தெல்பெத3/
விவரமாக/ நான்/ தெரிவிக்கின்றேன்/
அனுபல்லவி
மனஸு/-எரிங்கி3/ கு-மார்க3முன/
மனது/ அறிந்து/ தவறான வழியில்/
மரி/ பொரலுசு/ செட3/ வலதே3/ (வி)
மறுபடியும்/ புரண்டு/ கெட/ கூடாதடி/
சரணம்
ஈ/ நட3தலு/ பனிகி ராது3/
இந்த/ நடத்தைகள்/ உதவா/
ஈஸ்1வர/ க்ரு2ப/ கலுக3 போது3/
ஈசனின்/ கிருபை/ யுண்டாகாது/
த்4யான/ ப4ஜன/ ஸேயவே/
தியானம்/ பஜனை/ செய்வாயடி/
வர/ த்யாக3ராஜு/ மனவி/ (வி)
சீரிய/ தியாகராசனின்/ வேண்டுகோளினை/ கேளாயடி...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மனவி - மனவினி.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
Updated on 10 Dec 2009
No comments:
Post a Comment