1ஸ்மரணே ஸுக2மு ராம நாம
நருடை3 புட்டினந்து3கு நாம (ஸ்ம)
அனுபல்லவி
வர 2ராஜ யோக3 நிஷ்டு2லௌ
வாரிகானந்த3மந்தெ3டட்டு (ஸ்ம)
சரணம்
3ராம நாம ஸ்1ரவணமு வல்ல
நாம ரூபமே ஹ்ரு2த3யமு நிண்டி3
4ப்ரேம புட்ட ஸேயக3 லேதா3
5நிஷ்காம த்யாக3ராஜு ஸேயு நாம (ஸ்ம)
பொருள் - சுருக்கம்
- இராம நாமத்தினை உள்ளுருவேற்றலே சுகமாகும்;
- மனிதனாகப் பிறந்ததற்கு, நாமத்தினை உள்ளுருவேற்றலே சுகமாகும்;
- உயர் இராச யோகத்தினில் நிலைத்திருப்போராகிய அவர்களுக்கு, ஆனந்தம் நண்ணுதல் போன்று, இராம நாமத்தினை உள்ளுருவேற்றலே சுகமாகும்
- இராம நாமத்தினைச் செவி மடுத்ததனால், நாமத்தின் உருவமே இதயத்தினில் நிறைந்து, (இறைவனிடம்) காதல் பிறக்கச் செய்யவில்லையா?
- இச்சைகளற்ற, தியாகராசன் இயற்றும், இராம நாமத்தினை உள்ளுருவேற்றலே சுகமாகும்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்மரணே/ ஸுக2மு/ ராம/ நாம/
உள்ளுருவேற்றலே/ சுகமாகும்/ இராம/ நாமத்தினை/
நருடை3/ புட்டின-அந்து3கு/ நாம/ (ஸ்ம)
மனிதனாக/ பிறந்ததற்கு/ நாமத்தினை/ உள்ளுருவேற்றலே...
அனுபல்லவி
வர/ ராஜ/ யோக3/ நிஷ்டு2லௌ/
உயர்/ இராச/ யோகத்தினில்/ நிலைத்திருப்போராகிய/
வாரிகி/-ஆனந்த3மு/-அந்தெ3டு/-அட்டு/ (ஸ்ம)
அவர்களுக்கு/ ஆனந்தம்/ நண்ணுதல்/ போன்று/ உள்ளுருவேற்றலே...
சரணம்
ராம/ நாம/ ஸ்1ரவணமு வல்ல/
இராம/ நாமத்தினை/ செவி மடுத்ததனால்/
நாம/ ரூபமே/ ஹ்ரு2த3யமு/ நிண்டி3/
நாமத்தின்/ உருவமே/ இதயத்தினில்/ நிறைந்து/
ப்ரேம/ புட்ட/ ஸேயக3 லேதா3/
(இறைவனிடம்) காதல்/ பிறக்க/ செய்யவில்லையா/
நிஷ்காம/ த்யாக3ராஜு/ ஸேயு/ நாம/ (ஸ்ம)
இச்சைகளற்ற/ தியாகராசன்/ இயற்றும்/ நாமத்தினை/ உள்ளுருவேற்றலே...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸ்மரணே ஸுக2மு ராம நாம - ஸ்மரணே ஸுக2மு ஓ ராம நாம.
Top
மேற்கோள்கள்
2 - ராஜ யோக3 - இராச யோகம் - கீதையில் கண்ணன் உபதேசித்த நெறிகளிலொன்று. "இராச யோகம் என்பது 'பக்தி', 'கர்ம' மற்றும் 'ஞான' யோகங்கள் இணைந்ததொன்றாகும்." ஸ்வாமி ப்ரபவானந்தா அவர்களின் 'பதஞ்ஜலி யோக சூத்திரங்களின்' (II.45) விளக்கவுரை நோக்கவும்.
4 - ப்ரேம - 'ப்ரேம பக்தி' என்பதற்கு ராமகிருஷ்ண பரமஹம்ஸர் அவர்களின் விளக்கம் நோக்கவும்.
Top
5 - நிஷ்காம - இச்சைகளற்ற - ஏதும் பயன்களை எதிர்பாராது - இது குறித்து, கீதையில் (7-வது அத்தியாயம், செய்யுட்கள் 16, 17) கண்ணன் கூறுவது -
"அர்ஜுனா! நான்கு விதமாக என்னை வழிபடுவர், பண்புடை மனிதர்கள்;
துயருற்றவர், மெய்யறிவு வேண்டுவோர், பொருள் வேண்டுவோர், மற்றும் மெய்யறிவுடைத்தோர்;
அவர்களில், மெய்யறிவுடைத்தோன், தொண்டு ஒன்றே குறிக்கோளாக, என்றும் அதனில் நிலைத்திருப்பதனால், சிறந்தவனாவான்.
அத்தகைய மெய்யறிவுடைத்த ஞானி, எனக்கும், நான் அவனுக்கும் மிகவும் பிரியமானவர்களாவோம்."
(மெய்யறிவுடைத்தோன் - இச்சைகள், இறைவனின் மாயையினின்றெழுவதென்று உணர்ந்து, அவற்றினை முழுதுமாகத் துறந்தவன்.) (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில உரை மற்றும் விளக்கங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு.)
Top
விளக்கம்
3 - ராம நாம ஸ்1ரவணமு வல்ல - இராம நாமத்தினை உள்ளுறுவேற்றுதலால் - அத்தகைய ப்ரேம பக்தி கொண்டவர்கள் பலரைப்பற்றி, பாகவத புராணத்தில் காணலாம். ஆயினும் இங்கு, சபரி, அனுமன், ஸ்வயம்ப்ரபா மற்றும் விபீடணன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களாவர்.
5 - நிஷ்காம - இச்சைகளற்ற - 'இச்சைகளற்ற தியாகராசன் இயற்றும்' என்றும் கொள்ளலாம்.
உள்ளுருவேற்றல் - 'ஸ்மரணை' எனப்படும் இறைவனின் நாமத்தினில் உள்ளத்தில் உருவேற்றல்.
Top
Updated on 09 Dec 2009
No comments:
Post a Comment