Wednesday, December 16, 2009

தியாகராஜ கிருதி - பாலய ஸ்ரீ ரகு4வீர - ராகம் தே3வ கா3ந்தா4ரி - Paalaya Sri Raghuvira - Raga Deva Gandhari

பல்லவி
பாலய ஸ்ரீ ரகு4வீர
ஸு-க்ரு2பாலய ராஜ குமார மாம் (பா)

சரணம்
சரணம் 1
தாராதீ41 வத3ன ராம
1தாராதீ313மன மாம் (பா)


சரணம் 2
ஹிம கர கோடி நிபா4ங்க3
ஏஹி 2மகர ஹரண நிஸ்ஸங்க3 மாம் (பா)


சரணம் 3
ராக்ஷஸ ஜன க3ண தூ3
3மகராக்ஷ ஸமர ஹர ஸூ1ர மாம் (பா)


சரணம் 4
ஸ்ரீ த31ரத2 குல ஸ1ரண ராம
ஸ்ரீ-த3 41ரதி4 மத3 ஹரண மாம் (பா)


சரணம் 5
கு-மனோ ஜன க3ண பீ4ம ராம
ஸு-மனோ வாரிதி4 ஸோம மாம் (பா)


சரணம் 6
5ஜய விஜயாக4 விராம
6ரவிஜ யம லாலித நாம மாம் (பா)


சரணம் 7
த்யாக3ராஜ நுத சரண
7நித்யாக3 ராஜ த4 ஸுகு3ண மாம் (பா)


பொருள் - சுருக்கம்
  • இரகுவீரா! நற்கருணையின் உறைவிடமே! இளவரசே!
  • தாராதிபன் வதனத்தோனே, இராமா! தாரை முதலானோர் மணாளனை வதைத்தோனே!
  • மதிகள் கோடி நிகருடலோனே! முதலையை வதைத்தோனே! பற்றற்றோனே!
  • அரக்கர் கூட்டத்தினின்றும் விலகியோனே! மகராட்சனைப் போரில் வென்ற சூரனே!
  • தசரதன் குலத்தினைக் காப்போனே, இராமா! சீரருள்வோனே! கடலின் செருக்கினை அடக்கியோனே!
  • தீய உள்ளத்தோருக்கு அச்சம் விளைவிப்போனே, இராமா! நல்லுள்ளத்தோர் கடலின் மதியே!
  • ஜய, விஜயர்களின் பாவங்களைப் போக்கியவனே! சுக்கிரீவன் மற்றும் நமனால் மதிக்கப்பெற்றப் பெயரோனே!
  • தியாகராசனால் போற்றப் பெற்ற திருவடியோனே! அழிவற்றோனே! மலையரசனைச் சுமந்தோனே!

    • என்னைக்காப்பாய்.
    • வாராய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாலய/ ஸ்ரீ ரகு4வீர/
காப்பாய்/ ஸ்ரீ ரகுவீரா/

ஸு-க்ரு2பா/-ஆலய/ ராஜ குமார/ மாம்/ (பா)
நற்கருணையின்/ உறைவிடமே/ இளவரசே/ என்னை/ காப்பாய்...


சரணம்
சரணம் 1
தாரா/-அதி4-ஈஸ1/ வத3ன/ ராம/
தாரா/ அதிபன்/ வதனத்தோனே/ இராமா/

தாரா/-அதி3/-ஈஸ1/ த3மன/ மாம்/ (பா)
தாரை/ முதலானோர்/ மணாளனை/ வதைத்தோனே/ என்னை/ காப்பாய்...


சரணம் 2
ஹிம கர/ கோடி/ நிப4/-அங்க3/
மதிகள்/ கோடி/ நிகர்/ உடலோனே/

ஏஹி/ மகர/ ஹரண/ நிஸ்-ஸங்க3/ மாம்/ (பா)
வாராய்/ முதலையை/ வதைத்தோனே/ பற்றற்றோனே/ என்னை/ காப்பாய்...


சரணம் 3
ராக்ஷஸ/ ஜன க3ண/ தூ3ர/
அரக்கர்/ கூட்டத்தினின்றும்/ விலகியோனே/

மகர-அக்ஷ/ ஸமர/ ஹர/ ஸூ1ர/ மாம்/ (பா)
மகராட்சனை/ போரில்/ வென்ற/ சூரனே/ என்னை/ காப்பாய்...


சரணம் 4
ஸ்ரீ த31ரத2/ குல/ ஸ1ரண/ ராம/
ஸ்ரீ தசரதன்/ குலத்தினை/ காப்போனே/ இராமா/

ஸ்ரீ/-த3/ ஸ1ரதி4/ மத3/ ஹரண/ மாம்/ (பா)
சீ்ர்/ அருள்வோனே/ கடலின்/ செருக்கினை/ அடக்கியோனே/ என்னை/ காப்பாய்...


சரணம் 5
கு-மனோ ஜன க3ண/ பீ4ம/ ராம/
தீய உள்ளத்தோருக்கு/ அச்சம் விளைவிப்போனே/ இராமா/

ஸு-மனோ/ வாரிதி4/ ஸோம/ மாம்/ (பா)
நல்லுள்ளத்தோர்/ கடலின்/ மதியே/ என்னை/ காப்பாய்...


சரணம் 6
ஜய/ விஜய/-அக4/ விராம/
ஜய/ விஜயர்களின்/ பாவங்களை/ போக்கியவனே/

ரவிஜ/ யம/ லாலித/ நாம/ மாம்/ (பா)
சுக்கிரீவன்/ மற்றும் நமனால்/ மதிக்கப்பெற்ற/ பெயரோனே/ என்னை/ காப்பாய்...


சரணம் 7
த்யாக3ராஜ/ நுத/ சரண/
தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ திருவடியோனே/

நித்ய/-அக3/ ராஜ/ த4ர/ ஸுகு3ண/ மாம்/ (பா)
அழிவற்றோனே/ மலை/ யரசனை/ சுமந்தோனே/ என்னை/ காப்பாய்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் சரணங்கள் வரிசை மாற்றி கொடுக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்
1 - தாரா - தாரை - வாலியின் மனைவி.

2 - மகர - முதலை - கஜேந்திரனை முதலையின் பிடியிலிருந்து அரி விடுவித்தல் - இதனை சங்கு அரக்கனென்றும் கொள்ளலாம். 'பாஞ்சஜன' என்ற சங்கு அரக்கனை கண்ணன் வதைத்த கதை. பாகவத புராணம், 10-வது புத்தகம், 45-வது அத்தியாயம் மற்றும் விஷ்ணு புராணம், 5-வது புத்தகம், 21-வது அத்தியாயம் நோக்கவும்.

3 - மகராக்ஷ - மகராட்சன் - தண்டகாரண்யத்தில், இராமனால் கொல்லப்பட்ட 'கரன்' என்ற அரக்கனின் மகன் - இவன் இலங்கைப் போரில் இராமனால் கொல்லப்பட்டான்.

Top

4 - 1ரதி4 மத3 ஹரண - இலங்கைக்கு செல்ல, கடலின் மீது வாராவதி அமைக்க எண்ணி, இராமன், கடலரசனை வேண்டினான். ஆனால், கடலரசன் கவனியாது இருந்ததனால், சினமுற்று, இராமன், கடலரசன் மீது, பிரமாத்திரத்தினை ஏவினான். உடனே, கடலரசன் புகலடைந்து, வாராவதி கட்ட உதவினான்.

5 - ஜய விஜய - ஜய, விஜயர்கள் - வைகுண்டத்தின் காவற்காரர்கள். இவர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு, தானவர்களாகப் பிறக்க நேர்ந்தது - இரண்யாட்சன் - இரணியகசிபு, இராவணன் - கும்பகர்ணன் மற்றும் கம்ஸன் - சிசுபாலன் என. அவர்கள் யாவரையும், விஷ்ணு சாபத்தினின்றும் விடுவிப்பதெற்கென்றே அவதரித்தார்.

7 - அக3 ராஜ த4 - மலையரசன் - மந்தர மலை. பாற்கடலினின்று, அமிழ்து பெறவேண்டி, மந்தரமலையை மத்தாக்கி, தேவர்களும், தானவர்களும் கடைந்தனர். அப்போது, மந்தர மலை கடலில் மூழ்க, விஷ்ணு, ஆமையாக அவதரித்து, மந்தர மலையைச் சுமந்தார்.

Top

விளக்கம்
6 - ரவிஜ யம லாலித நாம - சுக்கிரீவன் மற்றும் யமன் இருவருமே சூரியனின் புதல்வர்கள். தியாகராஜர், தன்னுடை கீர்த்தனைகளில், 'ரவிஜ' என்ற சொல்லினை சுக்கிரீவனைக் குறிக்க பயன்படுத்துகின்றார். அதனால் இதனை 'சுக்கிரீவன்' மற்றும் 'நமன்' என்றோ அல்லது 'சூரியன்மகன் நமன்' என்றோ கொள்ளலாம்.

தாராதிபன் - மதி

Top


Updated on 17 Dec 2009

No comments: