நா மொராலகிம்பவேமி ஸ்ரீ ராம
அனுபல்லவி
நீ மஹிமலு வினி வினி நேனெந்தோ நெர நம்மிதி (நா)
சரணம்
சரணம் 1
ஒக வன சருட3ல நாடு3 ஸஹோத3ர பா3த4லு
தாளக மொரலிட3 ப்3ரோசிதிவி தனகு 1ஸு-க்3ரீவமு காதா3 (நா)
சரணம் 2
ஒக நிஸி1 சருட3ன்ன மாடலோர்வக 2ஸ1ரணனகா3
ஸு1க வசனமுலகு நாது3 பலுகுலன்னி 3விபீ4ஷணமா (நா)
சரணம் 3
பூஸலு கூர்சினயடுவலெ பூனி ப4ஜிஞ்சக3
ஆஸலு க3ல த்யாக3ராஜு தா3ஸுட3னுசு தெலிஸி (நா)
பொருள் - சுருக்கம்
இராமா!
- எனது முறையீட்டினைக் கேளாயேனோ?
- உனது மகிமைகளைக் கேட்டுக் கேட்டு நான் முழுதும் நம்பினேன்;
- ஒரு வனவாசி, அன்று சோதரனின் தொல்லைகளைத் தாளாது முறையிட, காத்தனை;
- எனக்கும் இனிய தொண்டையன்றோ?
- ஒரு இரவில் சரிப்போன், அண்ணனின் சொறகளைத் தாளாது, புகலென,
- அந்த கிளி சொற்களுக்கு, எனது மொழிகள் யாவும் கத்தலோ?
- ஒரு வனவாசி, அன்று சோதரனின் தொல்லைகளைத் தாளாது முறையிட, காத்தனை;
- மணிகளைக் கோர்த்தது போன்று, விரதம் பூண்டு பஜனை செய்ய,
- ஆசைகளுடைய, தியாகராசன் தொண்டனெனத் தெரிந்தும்,
- எனது முறையீட்டினைக் கேளாயேனோ?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நா/ மொர/-ஆலகிம்பவு/-ஏமி/ ஸ்ரீ ராம/
எனது/ முறையீட்டினை/ கேளாய்/ ஏனோ/ ஸ்ரீ ராமா/
அனுபல்லவி
நீ/ மஹிமலு/ வினி/ வினி/ நேனு/-எந்தோ நெர/ நம்மிதி/ (நா)
உனது/ மகிமைகளை/ கேட்டு/ கேட்டு/ நான்/ முழுதும்/ நம்பினேன்/
சரணம்
சரணம் 1
ஒக/ வன/ சருடு3/-அல நாடு3/ ஸஹோத3ர/ பா3த4லு/
ஒரு/ வன/ வாசி/ அன்று/ சோதரனின்/ தொல்லைகளை/
தாளக/ மொரலு-இட3/ ப்3ரோசிதிவி/ தனகு/ ஸு-க்3ரீவமு/ காதா3/ (நா)
தாளாது/ முறையிட/ காத்தனை/ எனக்கும்/ இனிய தொண்டை/ அன்றோ/
சரணம் 2
ஒக/ நிஸி1/ சருடு3/-அன்ன/ மாடலு/-ஓர்வக/ ஸ1ரணு/-அனக3/-ஆ/
ஒரு/ இரவில்/ சரிப்போன்/ அண்ணனின்/ சொறகளை/ தாளாது/ புகல்/ என/ அந்த/
ஸு1க/ வசனமுலகு/ நாது3/ பலுகுலு/-அன்னி/ விபீ4ஷணமா/ (நா)
கிளி/ சொற்களுக்கு/ எனது/ மொழிகள்/ யாவும்/ கத்தலோ/
சரணம் 3
பூஸலு/ கூர்சின/-அடுவலெ/ பூனி/ ப4ஜிஞ்சக3/
மணிகளை/ கோர்த்தது/ போன்று/ விரதம் பூண்டு/ பஜனை செய்ய/
ஆஸலு/ க3ல/ த்யாக3ராஜு/ தா3ஸுடு3/-அனுசு/ தெலிஸி/ (நா)
ஆசைகள்/ உடைய/ தியாகராசன்/ தொண்டன்/ என/ தெரிந்தும்/ எனது...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ஸ1ரணனகா3 ஸு1க வசனமுலகு - ஸ1ரணனகா3 ஸு1க வசனமுலகு3 - ஸ1ரணனகா3 ஸு1க வசனமுலோ - ஸ1ரணனகா3 ஸு1க வசனமுலோலவி : 'வசனமுலகு3' என்பது சரியானால் 'கிளிபோன்ற எனது மொழிகள் யாவும் கத்தலோ?' என மொழிபெயர்க்கப்படும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - ஸு-க்3ரீவ - எல்லா புத்தகங்களிலும், இச்சொல்லுக்கு 'இனிய குரல்' என பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், சம்ஸ்கிருத மற்றும் தெலுங்கு அகராதிகளின்படி, 'க்3ரீவ' என்ற சொல்லுக்கு அத்தகைய பொருளில்லை. ஆயினும், இவ்விடத்தில் 'இனிய தொண்டை' அல்லது 'இனிய குரல்' என்ற பொருள்தான் பொருந்தும். எனவே அங்ஙனமே மொழிபெயர்க்கப்பட்டது.
1 - ஸு-க்3ரீவ - 3 - விபீ4ஷண - தியாகராஜர் 'ஸுக்3ரீவ' - 'விபீ4ஷண' என்ற பெயர்களின் பொருளுடன் விளையாடுகின்றார்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள இரண்டு மேற்கோள்களிலுமே, 'அண்ணனின் தொல்லை' என்று கூறப்படுவதனால், தியாகராஜர், தனக்கும், தனது அண்ணனால் ஏற்படும் தொல்லைகளைப் பற்றி, மறைமுகமாக, இறைவனிடம் முறையிடுகின்றாரா, என்பது விளங்கவில்லை. அவருடைய 'ஆ த3ய ஸ்ரீ ரகு4வர' என்ற 'ஆஹிரி' ராகப் பாடலில், தன் அண்ணன் தன்னை துன்புறுத்தியதனைப்பற்றி இறைவனிடம் கூறுகின்றார்.
Top
வனவாசி - சுக்கிரீவன் - அழகிய கழுத்து (தொண்டை) உடையவன்
எனக்கும் இனிய தொண்டை - இனிய குரலென
இரவில் சரிப்போன் -அரக்கன் - விபீடணன் - பயங்கரமான குரலுடையவன்
Top
Updated on 15 Dec 2009
No comments:
Post a Comment