மரவகரா நவ மன்மத2 ரூபுனி
சரணம்
சரணம் 1
நீடோ மெல்லனி மாடோ கன்னுல
தேடோ மரி 1வலெ-வாடோ மனஸா (ம)
சரணம் 2
குலுகோ 2பாவல கி3லுகோ கபுரபு
பலுகோ செக்குல தளுகோ மனஸா (ம)
சரணம் 3
வில்லோ க4ண்டல க4ல்லோ ஸுமமுல
இல்லோ ஸேவபு கொல்லோ மனஸா (ம)
சரணம் 4
கேலோவுங்க3ராலோ 3ப3ங்கா3(ரு)ய்யாலோ
செந்தனில்லாலோ மனஸா (ம)
சரணம் 5
ஸ1ரமோ கனகாம்ப3ரமோ ஸ்ரீ-கர
உரமோ ப்3ரோசு து3ரமோ மனஸா (ம)
சரணம் 6
ஆ-ஜன்மமு 4ஹ்ரு2த்3ராஜீவமுதோ
பூஜிந்துர த்யாக3ராஜ நுதுனி மனஸா (ம)
பொருள் - சுருக்கம்
ஏ மனமே!
- மறக்காதேயடா, இள மன்மத உருவத்தோனை;
- ஒய்யாரமோ!
- மென்மையான சொல்லோ!
- கண்களின் தெளிவோ!
- மேலாடையின் ஒயிலோ!
- குலுக்கோ!
- காலணிகளின் கிலுகிலுப்போ!
- கற்பூரம் நிகர் (மணக்கும்) உரையோ!
- கன்னங்களின் மினுக்கோ!
- வில்லோ!
- (வில்லின்) மணியோசையோ!
- மலர்களின் இல்லமோ!
- சேவைகளின் கொள்ளையோ!
- கைகளோ!
- மோதிரங்களோ!
- பொன்னூஞ்சலோ!
- உடனுறை இல்லாளோ!
- அம்புகளோ!
- பொன்னாடைகளோ!
- சீரருளும் (இலக்குமியுறை) மார்போ!
- காக்கும் ஊக்கமோ!
- ஒய்யாரமோ!
- வாழ்நாள் முழுதும், இதயக் கமலம்கொடு வழிபடுவேன், தியாகராசனால் போற்றப் பெற்றோனை.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மரவகரா/ நவ/ மன்மத2/ ரூபுனி/
மறக்காதேயடா/ இள/ மன்மத/ உருவத்தோனை/
சரணம்
சரணம் 1
நீடோ/ மெல்லனி/ மாடோ/ கன்னுல/
ஒய்யாரமோ/ மென்மையான/ சொல்லோ/ கண்களின்/
தேடோ/ மரி/ வலெ/-வாடோ/ மனஸா/ (ம)
தெளிவோ/ அன்றியும்/ மேலாடையின்/ ஒயிலோ/ ஏ மனமே/...
சரணம் 2
குலுகோ/ பாவல/ கி3லுகோ/ கபுரபு/
குலுக்கோ/ காலணிகளின்/ கிலுகிலுப்போ/ கற்பூரம் நிகர்/
பலுகோ/ செக்குல/ தளுகோ/ மனஸா/ (ம)
(மணக்கும்) உரையோ/ கன்னங்களின்/ மினுக்கோ/ ஏ மனமே/...
சரணம் 3
வில்லோ/ க4ண்டல/ க4ல்லோ/ ஸுமமுல/
வில்லோ/ (வில்லின்) மணி/ ஓசையோ/ மலர்களின்/
இல்லோ/ ஸேவபு/ கொல்லோ/ மனஸா/ (ம)
இல்லமோ/ சேவைகளின்/ கொள்ளையோ/ ஏ மனமே/...
சரணம் 4
கேலோ/-உங்க3ராலோ/ ப3ங்கா3ரு/-உய்யாலோ/
கைகளோ/ மோதிரங்களோ/ பொன்/ ஊஞ்சலோ/
செந்த/-இல்லாலோ/ மனஸா/ (ம)
உடனுறை/ இல்லாளோ/ ஏ மனமே/...
சரணம் 5
ஸ1ரமோ/ கனக/-அம்ப3ரமோ/ ஸ்ரீ/-கர/
அம்புகளோ/ பொன்/ ஆடைகளோ/ சீர்/ அருளும்/
உரமோ/ ப்3ரோசு/ து3ரமோ/ மனஸா/ (ம)
(இலக்குமியுறை) மார்போ/ காக்கும்/ ஊக்கமோ/ ஏ மனமே/...
சரணம் 6
ஆ-ஜன்மமு/ ஹ்ரு2த்/-ராஜீவமுதோ/
வாழ்நாள் முழுதும்/ இதய/ கமலம்கொடு/
பூஜிந்துர/ த்யாக3ராஜ/ நுதுனி/ மனஸா/ (ம)
வழிபடுவேன்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனை/ ஏ மனமே/...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வலெ-வாடோ - வலுவாடோ : தெலுங்கு அகராதியின்படி 'வலெ-வாடு' அல்லது 'வல்லெ-வாடு' என்பவைதான் சரியான சொற்களாகும். எனவே 'வலெ-வாடோ' ஏற்கப்பட்டது.
2 - பாவல - பாவுல : தெலுங்கு அகராதியின்படி 'பாவ' என்பதுதான் சரியான சொல்லாகும். எனவே 'பாவல' ஏற்கப்பட்டது.
3 - ப3ங்கா3(ரு)ய்யாலோ - ப3ங்க3(ரு)ய்யாலோ.
Top
மேற்கோள்கள்
4 - ஹ்ரு2த்3ராஜீவமுதோ - இதயக் கமலம்கொடு. ஆதி சங்கரர் இயற்றிய 'சிவானந்த லஹரி'யில் (செய்யுள் 9) கூறப்படுவது -
"ஆழந்த தாமரைக்குளங்களுக்கும், மக்களற்ற கொடிய காடுகளுக்கும்,
விரிந்த மலைகளுக்கும், மலர்களுக்காகத் திரிவர் முட்டாட்கள்;
உமை மணாளா! உனக்குத் தமதோர் இதயக் கமலத்தினை சமர்ப்பித்து,
சுகமாக இருக்க, அந்தோ! அவர் அறியமாட்டார் ஏனோ?"
(ஸ்வாமி தபஸ்யானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
Top
விளக்கம்
Updated on 19 Dec 2009
No comments:
Post a Comment