Friday, December 11, 2009

தியாகராஜ கிருதி - கருணா ஸமுத்3ர - ராகம் தே3வ கா3ந்தா4ரி - Karuna Samudra - Raga Deva Gandhari

பல்லவி
கருணா ஸமுத்3ர நனு
காவவே ஸ்ரீ ராம ப4த்3

அனுபல்லவி
1ரணாக3த ஹ்ரு2ச்சி2த்3
1மன 1நிர்ஜித நித்3 (க)

சரணம்
நா பாபமு நாதோனுண்டே
ஸ்ரீ-ப நீ பி3ருது3கேமி ப்3ரதுகு
ஏ பாபுல ஸா1பமோ
எந்து3கீ சலமு த்யாக3ராஜ நுத (க)


பொருள் - சுருக்கம்
  • கருணைக் கடலே! மேதகு இராமா! சரணடைந்தோரின் உள்ளக்குமுறலைத் தணிப்போனே! உறக்கத்தை வென்றோனே! மாமணாளா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
    • என்னைக் காப்பாய்.
    • எனது பாவங்கள் என்னுடனேயிருந்தால், உனது விருதுக்கென்ன பிழைப்பு?
    • எப்பாவிகளின் சாபமோ?
    • எதற்கிந்த பிடிவாதம்?



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    கருணா/ ஸமுத்3ர/ நனு/
    கருணை/ கடலே/ என்னை/

    காவவே/ ஸ்ரீ ராம/ ப4த்3ர/
    காப்பாய்/ ஸ்ரீ ராமா/ மேதகு/


    அனுபல்லவி
    1ரணு/-ஆக3த/ ஹ்ரு2த்/-சி2த்3ர/
    சரண்/ அடைந்தோரின்/ உள்ள/ குமுறலை/

    1மன/ நிர்ஜித/ நித்3ர/ (க)
    தணிப்போனே/ வென்றோனே/ உறக்கத்தை/


    சரணம்
    நா/ பாபமு/ நாதோனு/-உண்டே/
    எனது/ பாவங்கள்/ என்னுடனே/ யிருந்தால்/

    ஸ்ரீ/-ப/ நீ/ பி3ருது3கு/-ஏமி/ ப்3ரதுகு/
    மா/ மணாளா/ உனது/ விருதுக்கு/ என்ன/ பிழைப்பு/

    ஏ/ பாபுல/ ஸா1பமோ/
    எந்த/ பாவிகளின்/ சாபமோ/

    எந்து3கு/-ஈ/ சலமு/ த்யாக3ராஜ/ நுத/ (க)
    எதற்கு/ இந்த/ பிடிவாதம்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)

    மேற்கோள்கள்
    1 - நிர்ஜித நித்3 - உறக்கத்தினை வென்றோன் - இறைவன் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவன். எனவே, இந்த புகழுரை, இராமனுக்கும், இலக்குவனுக்கும், விசுவாமித்திரர் புகட்டிய, 'பலை-அதிபலை' என்ற மந்திரங்களைக்குறிக்கும். இந்த மந்திரங்களை ஜபித்தலால் ஊண் உறக்கத்தினை வெல்லமுடியும் என்பதனால் அம்முனிவர் அவர்களுக்கு உபதேசித்தார். வால்மீகி ராமாயணம், பால காண்டம் - 22-வது அத்தியாயம் நோக்கவும்.

    Top

    விளக்கம்
    என்னுடனேயிருந்தால் - என்னை விட்டகலாதிருந்தால்

    விருது - வீழ்ந்தோரைப் புனிதராக்கும் விருது

    Top


    Updated on 12 Dec 2009
  • No comments: