விட3 ஜாலது3ரா நா மனஸு வினரா
அனுபல்லவி
அடி3யாஸலசே தகி3லி
1நேனார்திப3டி3ன பத3ம்பு3லனு (வி)
சரணம்
தனுவே பனுலகு சனின மரி
கன ரானிதி3 கனுகொ3னின
நினுகா3 பா4விஞ்சி ஸந்தஸில்லிதி
ஸ்ரீ 2த்யாக3ராஜ நுத (வி)
பொருள் - சுருக்கம்
தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
- கேளய்யா.
- விடமாட்டாதய்யா, எனது மனது;
- வீணாசைகளின் கையில் சிக்கி, நான் துயருற்றாலும், (உனது) திருவடிகளினை விடமாட்டாதய்யா, எனது மனது;
- உடல் எப்பணிகளுக்குச் சென்றாலும், மேலும்
- காணத்தகாதவற்றினைக் கண்டுகொண்டிடினும்,
- நீயாகவே யுணர்ந்து மகிழ்வுற்றேன்.
- உடல் எப்பணிகளுக்குச் சென்றாலும், மேலும்
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
விட3/ ஜாலது3ரா/ நா/ மனஸு/ வினரா/
விட/ மாட்டாதய்யா/ எனது/ மனது/ கேளய்யா/
அனுபல்லவி
அடி3/-ஆஸலசே/ தகி3லி/
வீண்/ ஆசைகளின் கையில்/ சிக்கி/
நேனு/-ஆர்திப3டி3ன/ பத3ம்பு3லனு/ (வி)
நான்/ துயருற்றாலும்/ (உனது) திருவடிகளினை/ விடமாட்டாதய்யா...
சரணம்
தனுவு/-ஏ/ பனுலகு/ சனின/ மரி/
உடல்/ எந்த/ பணிகளுக்கு/ சென்றாலும்/ மேலும்/
கன/ ரானிதி3/ கனுகொ3னின/
காண/ தகாதவற்றினை/ கண்டுகொண்டிடினும்/
நினுகா3/ பா4விஞ்சி/ ஸந்தஸில்லிதி/
நீயாகவே/ யுணர்ந்து/ மகிழ்வுற்றேன்/
ஸ்ரீ த்யாக3ராஜ/ நுத/ (வி)
ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஆர்திப3டி3ன - ஆர்திப3டி3னா.
2 - த்யாக3ராஜ நுத - த்யாக3ராஜ வினுத.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
Updated on 08 Dec 2009
No comments:
Post a Comment