Friday, November 27, 2009

தியாகராஜ கிருதி - ப4ஜரே ப4ஜ - ராகம் கன்னட3 - Bhajare Bhaja - Raga Kannada

பல்லவி
4ஜரே ப4ஜ மானஸ ராமம்

அனுபல்லவி
அஜ முக2 ஸு1க வினுதம் ஸு14 சரிதம் (ப4)

சரணம்
சரணம் 1
நிர்மித லோகம் நிர்ஜித ஸோ1கம்
பாலித முனி ஜனமது4னா ந்ரு2ப பாகம் (ப4)


சரணம் 2
1ங்கர மித்ரம் ஸ்1யாமள கா3த்ரம்
கிங்கர ஜன க31தாப த்ரய 2தமோ-மித்ரம் (ப4)


சரணம் 3
பூ4 ஸம ஸா1ந்தம் பூ4ஜா காந்தம்
வாரமகி2லத3ம் த்யாக3ராஜ ஹ்ரு2த்3-பா4ந்தம் (ப4)


பொருள் - சுருக்கம்
மனமே
  • பஜிப்பாயடா, பஜிப்பாய், இராமனை.
    • பிரமன் முதலானோர் மற்றும் சுகரால் போற்றப் பெற்றோனை,
    • மங்கள சரிதத்தோனை,
    • உலகத்தினைப் படைத்தவனை,
    • துயரத்தினை வென்றவனை,
    • முனிவர்களைக் காப்பவனை,
    • இப்போழ்து வேந்தன் மைந்தனை,
    • சங்கரனின் தோழனை,
    • நீலவண்ண மேனியனை,
    • பணியாளர், குடிமக்களின் முவ்வெம்மை யிருள் நீக்கும் பகலவனை,
    • புவி நிகர் அமைதியானவனை,
    • புவிமகள் கேள்வனை,
    • எவ்வமயமும் யாவற்றினையும் அருள்வோனை,
    • தியாகராசனின் இதயத்தினில் துலங்குவோனை,

  • பஜிப்பாயடா, பஜிப்பாய், இராமனை.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
4ஜரே/ ப4ஜ/ மானஸ/ ராமம்/
பஜிப்பாயடா/ பஜிப்பாய்/ மனமே/ இராமனை/


அனுபல்லவி
அஜ/ முக2/ ஸு1க/ வினுதம்/ ஸு14/ சரிதம்/ (ப4)
பிரமன்/ முதலானோர்/ (மற்றும்) சுகரால்/ போற்றப் பெற்றோனை/ மங்கள/ சரிதத்தோனை/ பஜிப்பாயடா...


சரணம்
சரணம் 1
நிர்மித/ லோகம்/ நிர்ஜித/ ஸோ1கம்/
படைத்தவன்/ உலகத்தினை/ வென்றவன்/ துயரத்தினை/

பாலித/ முனி ஜனம்/-அது4னா/ ந்ரு2ப/ பாகம்/ (ப4)
காப்பவன்/ முனிவர்களை/ இப்போழ்து/ வேந்தன்/ மைந்தனை/ பஜிப்பாயடா...


சரணம் 2
1ங்கர/ மித்ரம்/ ஸ்1யாமள/ கா3த்ரம்/
சங்கரனின்/ தோழனை/ நீலவண்ண/ மேனியனை/

கிங்கர/ ஜன க3ண/ தாப த்ரய/ தமோ/-மித்ரம்/ (ப4)
பணியாளர்/ குடிமக்களின்/ முவ்வெம்மை/ யிருள் (நீக்கும்)/ பகலவனை/ பஜிப்பாயடா...


சரணம் 3
பூ4/ ஸம/ ஸா1ந்தம்/ பூ4ஜா/ காந்தம்/
புவி/ நிகர்/ அமைதியானவனை/ புவிமகள்/ கேள்வனை/

வாரம்/-அகி2லத3ம்/ த்யாக3ராஜ/ ஹ்ரு2த்/-பா4ந்தம்/ (ப4)
எவ்வமயமும்/ யாவற்றினையும் அருள்வோனை/ தியாகராசனின்/ இதயத்தினில்/ துலங்குவோனை/ பஜிப்பாயடா...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - தாப த்ரய - முவ்வெம்மை - அத்தியாத்துமிகம், ஆதி-தெய்வீகம், ஆதி-பௌதீகம்.

Top

விளக்கம்
2 - தமோ-மித்ரம் : 'தமோமித்ரம்' என புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. 'மித்ர' என்றால் 'பகலவன்' என்று பொருளாகும். எனவே, இதனை, 'தம:+மித்ரம்' என்று பிரித்து, 'இருள் நீக்கும் பகலவன்' என்று பொருள் கொள்ளப்பட்டது. ஆனால், இதனை, 'தமோऽமித்ரம்' என்று கொண்டு 'தம:+அமித்ரம்' என்று பிரிக்கக்கூடுமா என்று தெரியவில்லை. அங்ஙனம், 'இருளுக்கு எதிரி' - அதாவது 'பகலவன்' என்று பொருளாகும். இரண்டு விதங்களிலும் பொருளில் மிக வேறுபாடில்லை.

Top


Updated on 27 Nov 2009

No comments: