நின்னாட3னேல நீரஜாக்ஷ
அனுபல்லவி
1கன்னவாரி பைனி காக ஸேயனேல (நி)
சரணம்
சரணம் 1
2கர்மமுனகு 3தகி3னட்லு கார்யமுலு நடு3சுனு
த4ர்மமுனகு தகி3னட்லு தை3வமு ப்3ரோசுனு (நி)
சரணம் 2
சித்தமுனகு தகி3னட்லு 4ஸித்3தி4யு கல்கு3னு
5வித்தமுனகு தகி3னட்லு வேடு3க நடு3சுனு (நி)
சரணம் 3
6ஸத்ய ரூப நின்னு 7ஸன்னுதி ஜேஸி
தத்வமு தெலிஸின த்யாக3ராஜுனிகி (நி)
பொருள் - சுருக்கம்
கமலக்கண்ணா! மெய்யுருவே!
- உன்னை குறை கூறுவானேன்?
- கண்டவர்களின் (அல்லது பெற்றோர்) மீது ஆத்திரப் படலேன்?
- கருமத்திற்கேற்ப, காரியங்கள் நடக்கும்;
- அறத்திற்கேற்ப, தெய்வம் காக்கும்;
- எண்ணத்திற்கேற்ப, வெற்றி கிடைக்கும்;
- காசுக்கேற்ப, கூத்து நடக்கும்;
- உன்னை சிறக்கப் போற்றி, உண்மை யறிந்த தியாகராசனுக்கு, உன்னை குறை கூறுவானேன்?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நின்னு/-ஆட3னு-ஏல/ நீரஜ/-அக்ஷ/
உன்னை/ குறை கூறுவானேன்/ கமல/ கண்ணா/
அனுபல்லவி
கன்னவாரி/ பைனி/ காக ஸேயனு/-ஏல/ (நி)
கண்டவர்கள் (அல்லது பெற்றோர்)/ மீது/ ஆத்திரப் படல்/ ஏன்/
சரணம்
சரணம் 1
கர்மமுனகு/ தகி3னட்லு/ கார்யமுலு/ நடு3சுனு/
கருமத்திற்கு/ ஏற்ப/ காரியங்கள்/ நடக்கும்/
த4ர்மமுனகு/ தகி3னட்லு/ தை3வமு/ ப்3ரோசுனு/ (நி)
அறத்திற்கு/ ஏற்ப/ தெய்வம்/ காக்கும்/
சரணம் 2
சித்தமுனகு/ தகி3னட்லு/ ஸித்3தி4யு/ கல்கு3னு/
எண்ணத்திற்கு/ ஏற்ப/ வெற்றி/ கிடைக்கும்/
வித்தமுனகு/ தகி3னட்லு/ வேடு3க/ நடு3சுனு/ (நி)
காசுக்கு/ ஏற்ப/ கூத்து (வேடிக்கை)/ நடக்கும்/
சரணம் 3
ஸத்ய/ ரூப/ நின்னு/ ஸன்னுதி ஜேஸி/
மெய்/ உருவே/ உன்னை/ சிறக்கப் போற்றி/
தத்வமு/ தெலிஸின/ த்யாக3ராஜுனிகி/ (நி)
உண்மை/ யறிந்த/ தியாகராசனுக்கு/ உன்னை...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - கர்மமுனகு - த4ர்மமுனகு - சித்தமுனகு - வித்தமுனகு - இச்சொற்கள் பல புத்தகங்களில் பலவாறு கொடுக்கப்பட்டுள்ளன. ஒரே சீராக இருக்கவேண்டி இங்ஙனம் ஏற்கப்பட்டது.
3 - தகி3னட்லு - தகி3னட்டு.
6 - ஸத்ய ரூப - ஸத்வ ரூப.
7 - ஸன்னுதி ஜேஸி - ஸன்னுதி ஜேயு : இவ்விடத்தில் 'ஸன்னுதி ஜேஸி' என்பதே பொருந்தும் என நினைக்கின்றேன்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - கன்னவாரி பைனி - கண்டவர்களின் மீது - 'பெற்றோர் மீது' என்றும் கொள்ளலாம்.
4 - ஸித்3தி4 - சித்தி - இதனை, 'வெற்றி'யென்றோ அல்லது 'அணிமா சித்தி'களென்றோ கொள்ளலாம். ஆனால், தியாகராஜர், தனது 'க்ஷீணமை' என்ற கீர்த்தனையில், 'அணிமா சித்திகள், மனிதப்பிறவியின் நோக்கமாகிய, வீடுபெறுதல் என்பதற்கு இடைஞ்சலாக இருப்பதுடன், மறுபடியும் பிறக்கவைக்கின்றன' என்று கூறுகின்றார். எனவே, 'வெற்றி'யென்ற பொதுவான பொருள் ஏற்கப்பட்டது.
5 - வித்தமுனகு தகி3னட்லு வேடு3க நடு3சுனு - ஒரு புத்தகத்தில், இதற்கு, 'பணம் செலவழிப்பதற்கு ஏற்ப, கேளிக்கை வெற்றிபெறும்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.
கருமம் - முன்வினை அல்லது செய்கைகள்
Top
Updated on 26 Nov 2009
No comments:
Post a Comment