Friday, November 27, 2009

தியாகராஜ கிருதி - ஸாகேத நிகேதன - ராகம் கன்னட3 - Saketa Niketana - Raga Kannada

பல்லவி
ஸாகேத நிகேதன 1ஸாகேனனக3 லேதா3

அனுபல்லவி
நீகே 2மருலைதினி நீகேலயீ கு3ணமு (ஸா)

சரணம்
ராகேந்து3 முக2 இந்த பராகேமி நெனருன நீ
ராகே மிகு3ல கோரிதிரா 3கேஸி1 ஹரண
4ராகேமைன செப்பகுரா 5கேகலு வேது
ராரா
கேஸ1வ ஸ்ரீ த்யாக3ராஜ நுத ஸு14 சரித (ஸா)


பொருள் - சுருக்கம்
சாகேத நகருறையே! முழுமதி வதனத்தோனே! கேசியை வதைத்தோனே! கேசவா! தியாகராசன் போற்றும் மங்கள சரிதத்தோனே!

  • பேணுவேனெனவில்லையா?

  • உன்னையே காதலித்தேன்; உனக்கேன் இந்த குணம்?

  • இத்தனை அசட்டையென்ன?
  • அன்புடன் உனது வருகையையே மிக்கு கோரினேனய்யா;
  • வாராது, ஏதாவது (சாக்கு) சொல்லாதீருமய்யா; கூச்சலிடுவேன்;
  • வாருமய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸாகேத/ நிகேதன/ ஸாகேனு/-அனக3 லேதா3/
சாகேத/ நகருறையே/ பேணுவேன்/ எனவில்லையா/


அனுபல்லவி
நீகே/ மருலு-ஐதினி/ நீகு/-ஏல/-ஈ/ கு3ணமு/ (ஸா)
உன்னையே/ காதலித்தேன்/ உனக்கு/ ஏன்/ இந்த/ குணம்/


சரணம்
ராகா-இந்து3/ முக2/ இந்த/ பராகு/-ஏமி/ நெனருன/ நீ/
முழுமதி/ வதனத்தோனே/ இத்தனை/ அசட்டை/ என்ன/ அன்புடன்/ உனது/

ராகே/ மிகு3ல/ கோரிதிரா/ கேஸி1/ ஹரண/
வருகையையே/ மிக்கு/ கோரினேனய்யா/ கேசியை/ வதைத்தோனே/

ராக/-ஏமைன/ செப்பகுரா/ கேகலு வேது/
வாராது/ ஏதாவது (சாக்கு)/ சொல்லாதீருமய்யா/ கூச்சலிடுவேன்/

ராரா/ கேஸ1வ/ ஸ்ரீ த்யாக3ராஜ/ நுத/ ஸு14/ சரித/ (ஸா)
வாருமய்யா/ கேசவா/ ஸ்ரீ தியாகராசன்/ போற்றும்/ மங்கள/ சரிதத்தோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸாகேனனக3 - ஸாகெத3னனக3.
2 - மருலைதினி - மருலைனதி3 : இவ்விடத்தில் 'மருலைதினி' என்பதே சரியாகும்.
4 - ராகேமைன - ராகேமி.
5 - கேகலு வேது ராரா - கேகலு வேதுருரா : இவ்விடத்தில் 'கேகலு வேது ராரா' என்பதே சரியாகும்.

Top

மேற்கோள்கள்
3 - கேஸி1 ஹரண - கம்ஸனால் ஏவப்பட்ட குதிரையரக்கன். கண்ணன் அவனை வதைத்தான். பாகவத புராணம், 10-வது புத்தகம், அத்தியாயம் 37 நோக்கவும். கண்ணன் கேசியை வதைத்தல்

Top

விளக்கம்
சாகேத நகர் - அயோத்தியா

Top


Updated on 28 Nov 2009

No comments: