ஓ ரமா ரமண 1ராம ராம
நேனோர்வ ஜால ரகு4 ராம
சரணம்
சரணம் 1
ஸாரஸாக்ஷ மனஸார நம்மிதினி
சேரரா நீவுபசாரமாயெகா3 (ஓ)
சரணம் 2
அங்க3லார்பு கனி பொங்க3கா3னு ஸ்ரீ
ரங்க3 நீ மதி3 கரங்க3 லேது3ரா (ஓ)
சரணம் 3
நின்னு நம்மி நே கி2ன்னுடை3தி
ஆபன்னு நருலகேமுன்னதி3த்3த4ரினி (ஓ)
சரணம் 4
சுட்டி சுட்டி நா கு3ட்டுனங்க3டி3ன
பெட்ட ஜேஸி சே பட்டகுண்டிவி (ஓ)
சரணம் 5
தீ4ருட3ஞ்சு நினு கோருகுன்ன நீ
வாரலீ வ்யஸன வாரிதி4னீதி3ரா (ஓ)
சரணம் 6
மேடியௌ 2பலுகு போ3டி பதிகியே
நாடி க்ரோத4மோ தோடி3 வாரலலோ (ஓ)
சரணம் 7
மான ரக்ஷக புராண ஸஜ்ஜன
நிதா3னுட3னுசு நினு தா3னமடி3கி3தினி (ஓ)
சரணம் 8
கா3ன நீகு ஸரி கா3ன லோல இக
கான ராரு பெத்3தா3ன பெட்டுது3னு (ஓ)
சரணம் 9
3யோக3 ஸித்3து4லகு ஏ க3தியனுசு
வேக3 தோசதா3 த்யாக3ராஜ நுத (ஓ)
பொருள் - சுருக்கம்
ஓ இரமை மணாளா, இராமா! இரகுராமா! கமலக்கண்ணா! திருவரங்கத்தோனே! மானத்தைக் காப்போனே! பழம்பொருளே! இசை விரும்பியே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
- நான் பொறுக்கவியலேன்;
- உளமார நம்பினேன்; வாருமய்யா; (இஃது) உனது சேவையன்றோ?
- கூக்குரலிடக் கண்டும், பொங்குமளவு, உனதுள்ளம் உருகவில்லையய்யா!
- உன்னை நம்பி நான் (மனம்) தளர்ந்தேன்; அவதியுற்ற மனிதருக்கு என்னவுளது இப்புவியில்?
- சுற்றிச் சுற்றி, எனது மானத்தினைக் கடை பரப்பச் செய்து, கைப் பற்றாதிருந்தாய்;
- தீரனென உன்னைக் கோரிய உன்னவர்கள் இத்துயரக்கடலில் தத்தளித்தனரா?
- மேதகு நாவரசி மணாளனுக்கு என்றைய குறையோ, எனக்கு நிரகரானோரில்?
- நல்லோரை ஆதரிப்பவனென உன்னை இரந்தேன்;
- இசையில் உனக்கு நிகர் இன்னும் காணமாட்டார்; பேராணையிடுவேன்;
- யோக சித்தர்களுக்கு என்ன போக்கென விரைவில் தோன்றாதா?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஓ ரமா/ ரமண/ ராம/ ராம/
ஓ இரமை/ மணாளா/ இராமா/ இராமா/
நேனு/-ஓர்வ/ ஜால/ ரகு4 ராம/
நான்/ பொறுக்க/ இயலேன்/ இரகுராமா/
சரணம்
சரணம் 1
ஸாரஸ/-அக்ஷ/ மனஸார/ நம்மிதினி/
கமல/ கண்ணா/ உளமார/ நம்பினேன்/
சேரரா/ நீ/-உபசாரமு/-ஆயெகா3/ (ஓ)
வாருமய்யா/ (இஃது) உனது/ சேவை/ அன்றோ/
சரணம் 2
அங்க3லார்பு/ கனி/ பொங்க3கா3னு/
கூக்குரலிட/ கண்டும்/ பொங்குமளவு/
ஸ்ரீ ரங்க3/ நீ/ மதி3/ கரங்க3 லேது3ரா/ (ஓ)
திரு அரங்கத்தோனே/ உனது/ உள்ளம்/ உருகவில்லையய்யா/
சரணம் 3
நின்னு/ நம்மி/ நே/ கி2ன்னுடு3-ஐதி/
உன்னை/ நம்பி/ நான்/ (மனம்) தளர்ந்தேன்/
ஆபன்னு/ நருலகு/-ஏமி/-உன்னதி3/-இத்3த4ரினி/ (ஓ)
அவதியுற்ற/ மனிதருக்கு/ என்ன/ உளது/ இப்புவியில்/
சரணம் 4
சுட்டி/ சுட்டி/ நா/ கு3ட்டுனு/-அங்க3டி3ன/
சுற்றி/ சுற்றி/ எனது/ மானத்தினை/ கடை/
பெட்ட/ ஜேஸி/ சே/ பட்டக/-உண்டிவி/ (ஓ)
பரப்ப/ செய்து/ கை/ பற்றாது/ இருந்தாய்/
சரணம் 5
தீ4ருடு3/-அஞ்சு/ நினு/ கோருகுன்ன/
தீரன்/ என/ உன்னை/ கோரிய/
நீ வாரலு/-ஈ/ வ்யஸன/ வாரிதி4னி/-ஈதி3ரா/ (ஓ)
உன்னவர்கள்/ இந்த/ துயர/ கடலில்/ தத்தளித்தனரா/
சரணம் 6
மேடியௌ/ பலுகு போ3டி/ பதிகி/-
மேதகு/ நாவரசி/ மணாளனுக்கு/
ஏ நாடி/ க்ரோத4மோ/ தோடி3 வாரலலோ/ (ஓ)
என்றைய/ குறையோ/ (எனக்கு) நிரகரானோரில்/
சரணம் 7
மான/ ரக்ஷக/ புராண/ ஸஜ்ஜன/
மானத்தை/ காப்போனே/ பழம்பொருளே/ நல்லோரை/
நிதா3னுடு3/-அனுசு/ நினு/ தா3னமு-அடி3கி3தினி/ (ஓ)
ஆதரிப்பவன்/ என/ உன்னை/ இரந்தேன்/
சரணம் 8
கா3ன/ நீகு/ ஸரி/ கா3ன/ லோல/ இக/
இசையில்/ உனக்கு/ நிகர்/ இசை/ விரும்பியே/ இன்னும்/
கான ராரு/ பெத்3த3-ஆன/ பெட்டுது3னு/ (ஓ)
காணமாட்டார்/ பேராணை/ இடுவேன்/
சரணம் 9
யோக3/ ஸித்3து4லகு/ ஏ/ க3தி/-அனுசு/
யோக/ சித்தர்களுக்கு/ என்ன/ போக்கு/ என/
வேக3/ தோசதா3/ த்யாக3ராஜ/ நுத/ (ஓ)
விரைவில்/ தோன்றாதா/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - பலுகு போ3டி பதிகி - பலுகு போ3டிகி.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - ராம ராம - இச்சொற்கள், இறைவனைக் குறிப்பதாக மொழிபெயர்க்கப்பட்டாலும், பேச்சு வழக்கில், 'ராம ராம' என்று இரட்டையாகக் கூறுதல் அயர்ச்சியைக் குறிக்கும்.
3 - யோக3 ஸித்3து4லகு - தியாகராஜர், தன் வாழ்வில் கடைப்பிடித்தது, பக்தி யோகமாகும். எனவே, இச்சொற்கள் (யோக சித்தர்கள்) பெரும் தொண்டர்களைக் குறிக்கும்.
அவதியுற்ற மனிதருக்கு என்னவுளது - உன்னைத்தவிர போக்கிடம் என்னவுளது என
நாவரசி - கலைமகள்; நாவரசி மணாளன் - பிரமன்
Top
Updated on 29 Nov 2009
No comments:
Post a Comment