1மரசே வாட3னா ராம நினு மத3ன ஜனக
அனுபல்லவி
மரகதாங்க3 2நீயொக்க மதி3னெஞ்ச வலது3 (ம)
சரணம்
கானி மானவுலு கருண லேக நாபை
லேனி நேரமுலெஞ்சின கானி
ஸ்ரீ நிஜமுக3 நா செந்த ஜேரின கானி
ரானி நீ த3ய த்யாக3ராஜ நுத (ம)
பொருள் - சுருக்கம்
இராமா! மதனையீன்றோனே! மரகத மேனியனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
- மறப்பவனா, உன்னை (நான்)? உனதொரு மனத்தினில் (அப்படி) எண்ணலாகாது;
- வேண்டாத மனிதர்கள், கருணையின்றி, என்மீது இல்லாத குற்றங்கள் கண்டாலும்,
- செல்வம், உண்மையாகவே, என்னை வந்தடைந்தாலும்,
- வேண்டாத மனிதர்கள், கருணையின்றி, என்மீது இல்லாத குற்றங்கள் கண்டாலும்,
- வாராத உனது தயையினை, மறப்பவனா, (நான்)?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மரசே வாட3னா/ ராம/ நினு/ மத3ன/ ஜனக/
மறப்பவனா/ இராமா/ உன்னை (நான்)/ மதனை/ ஈன்றோனே/
அனுபல்லவி
மரகத/-அங்க3/ நீயொக்க/ மதி3னி/-எஞ்ச வலது3/ (ம)
மரகத/ மேனியனே/ உனதொரு/ மனத்தினில்/ (அப்படி) எண்ணலாகாது/
சரணம்
கானி/ மானவுலு/ கருண/ லேக/ நாபை/
வேண்டாத/ மனிதர்கள்/ கருணை/ இன்றி/ என்மீது/
லேனி/ நேரமுலு/-எஞ்சின கானி/
இல்லாத/ குற்றங்கள்/ கண்டாலும்/
ஸ்ரீ/ நிஜமுக3/ நா/ செந்த ஜேரின கானி/
செல்வம்/ உண்மையாகவே/ என்னை/ வந்தடைந்தாலும்/
ரானி/ நீ/ த3ய/ த்யாக3ராஜ/ நுத/ (ம)
வாராத/ உனது/ தயையினை/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ மறப்பவனா...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மரசே - மரசு.
2 - நீயொக்க - சில புத்தகங்களில் இச்சொல் கொடுக்கப்படவில்லை.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
2 - நீயொக்க - இச்சொல்லில் உள்ள 'ஒக்க' (ஒரு) என்பதற்கு தனிப்பட்ட பொருளேதும் இல்லை.
வாராத - கிடைத்தற்கரிய
Top
Updated on 30 Nov 2009
No comments:
Post a Comment