Thursday, November 5, 2009

தியாகராஜ கிருதி - ஸுந்த3ரி நின்னு - ராகம் ஆரபி4 - Sundari Ninnu - Raga Arabhi

பல்லவி
ஸுந்த3ரி நின்னு வர்ணிம்ப ப்3ரஹ்மாதி3
ஸுரலகைன தரமா

அனுபல்லவி
குந்த3 ரத3னே ஸனந்த3னாதி3
வந்தி3தே நேனெந்த த்ரிபுர (ஸு)

சரணம்
சரணம் 1
கலகலமனு முக2 களலனு கனி
கலுவல ராஜு 1பு4விகி ராடா3யெ
செலகு3 நீ லாவண்யமுனு கனி
அலனாடே3 வல ராஜு கானக போயெ
2நிலுவரமகு3 நீ க3ம்பீ4ரமுனு கனி
ஜல ராஜு ஜட3 வேஷுடா3யெ
3லமைன தீ4ரத்வமுனு கனி
கனகாசலுடு3 தா ஸி1ல ரூபுடா3யெ த்ரிபுர (ஸு)


சரணம் 2
கனுலனு கனி ஸிக்3கு3படி33ண்டு3
மீனுலு வனதி4 வாஸமு ஸேயனாயெ
ஜனனி நீ சிரு நவ்வு காந்தி ஸோகி
ஸி1வுட3னுபமமௌ ஸு1ப்4ருடா3யெ
மினுகு ஸொம்முல சேல காந்துல
மெருபுலு கனி நிமிஷமு நிலுவதா3யெ
கனகாங்கி3 நீ ஸ்வரமுனு வினி வாணி
மக3னி ஜிஹ்வனு தா பூனிகாயெ த்ரிபுர (ஸு)


சரணம் 3
பாவனமு ஜேயு பி3ருது3னி கனி ப4க்த
பாபமு பாரி போனாயெ
ஏ வேள நீ த3ய சேத ஸத்-கவுலெல்ல
காவ்யமுலனு ஸேயனாயெ
மா வருனிகி செல்லலனி ஸந்தோஷமுன
தே3வி பெத்33லு பல்கனாயெ
பா4விஞ்சி நீ பாத3முன த்யாக3ராஜு
பா4வுகமனுகொனனாயெ த்ரிபுர (ஸு)


பொருள் - சுருக்கம்
திரிபுர சுந்தரி! முல்லைப் பற்களுடையவளே! சனந்தனர் ஆகியோரால் வந்திக்கப் பெற்றவளே! தாயே! பொன்னங்கத்தினளே! தேவி!
  • உன்னை வருணிக்க பிரமன் முதலான வானோருக்காகிலும் தரமா? நான் எம்மாத்திரம்?

    • கலகலவென்றுள்ள முகக் களையினைக் கண்டு, அல்லியரசன் புவிக்கு வாரானாயினன்;

    • ஒளிருமுனது எழிலினைக் கண்டு, அன்றே, காதல் மன்னன் காணாமற்போயினன்;

    • உறுதியான உனது மாட்சிமையினைக் கண்டு, கடலரசன் சலனமற்ற உருவத்தோனாயினன்;

    • பலமான தீரத்தினைக் கண்டு, பொன் மலையோன், தான் சிலை வடிவாகினன்;

    • கண்களைக் கண்டு வெட்கி, கெண்டை மீன்கள், கடல் வாசம் செய்யலாயின;

    • உனது புன்னகையின் ஒளி பட்டு, சிவன் ஒப்பற்ற தூயோனாகினன்;

    • மின்னும் நகைகளையும் ஆடையின் ஒளியினையும், மின்னல்கள் கண்டு, நிமிடமும் நில்லாதாயின;

    • உனது குரலைச் செவி மடுத்து, வாணி கணவனின் நாவினில், தான் புகலாயிற்று;

    • புனிதப்படுத்தும் விருதினைக் கண்டு, தொண்டர்களின் பாவங்கள் ஓடலாயின;

    • எவ்வமயமும், உனது தயையினால், நற்கவிகள் அனைத்து காவியங்களையும் இயற்றலாயினர்;

    • மா மணாளனின் தங்கையென, மகிழ்ச்சியுடன், சான்றோர் பகரலாயினர்;

    • உள்ளத்தினில் உணர்ந்து, உனது திருவடியினில், தியாகராசன், பேறெனக் கொள்ளலாயினன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸுந்த3ரி/ நின்னு/ வர்ணிம்ப/ ப்3ரஹ்மா/-ஆதி3/
சுந்தரி/ உன்னை/ வருணிக்க/ பிரமன்/ முதலான/

ஸுரலகு/-ஐன/ தரமா/
வானோருக்கு/ ஆகிலும்/ தரமா/


அனுபல்லவி
குந்த3/ ரத3னே/ ஸனந்த3ன/-ஆதி3/
முல்லை/ பற்களுடையவளே/ சனந்தனர்/ ஆகியோரால்/

வந்தி3தே/ நேனு/-எந்த/ த்ரிபுர/ (ஸு)
வந்திக்கப் பெற்றவளே/ நான்/ எம்மாத்திரம்/ திரிபுர/ சுந்தரி...


சரணம்
சரணம் 1
கலகலமனு/ முக2/ களலனு/ கனி/
கலகலவென்றுள்ள/ முக/ களையினை/ கண்டு/

கலுவல/ ராஜு/ பு4விகி/ ராடா3யெ/
அல்லி/ அரசன்/ புவிக்கு/ வாரானாயினன்/

செலகு3/ நீ/ லாவண்யமுனு/ கனி/
ஒளிரும்/ உனது/ எழிலினை/ கண்டு/

அலனாடே3/ வல/ ராஜு/ கானக/ போயெ/
அன்றே/ காதல்/ மன்னன்/ காணாமல்/ போயினன்/

நிலுவரமகு3/ நீ/ க3ம்பீ4ரமுனு/ கனி/
உறுதியான/ உனது/ மாட்சிமையினை/ கண்டு/

ஜல/ ராஜு/ ஜட3/ வேஷுடா3யெ/
கடல்/ அரசன்/ சலனமற்ற/ உருவத்தோனாயினன்/

3லமைன/ தீ4ரத்வமுனு/ கனி/
பலமான/ தீரத்தினை/ கண்டு/

கனக/-அசலுடு3/ தா/ ஸி1ல/ ரூபுடா3யெ/ த்ரிபுர/ (ஸு)
பொன்/ மலையோன்/ தான்/ சிலை/ வடிவாகினன்/ திரிபுர/ சுந்தரி...


சரணம் 2
கனுலனு/ கனி/ ஸிக்3கு3படி3/ க3ண்டு3/
கண்களை/ கண்டு/ வெட்கி/ கெண்டை/

மீனுலு/ வனதி4/ வாஸமு/ ஸேயனாயெ/
மீன்கள்/ கடல்/ வாசம்/ செய்யலாயின/

ஜனனி/ நீ/ சிரு நவ்வு/ காந்தி/ ஸோகி/
தாயே/ உனது/ புன்னகையின்/ ஒளி/ பட்டு/

ஸி1வுடு3/-அனுபமமௌ/ ஸு1ப்4ருடா3யெ/
சிவன்/ ஒப்பற்ற/ தூயோனாகினன்/

மினுகு/ ஸொம்முல/ சேல/ காந்துல/
மின்னும்/ நகைகளையும்/ ஆடையின்/ ஒளியினையும்/

மெருபுலு/ கனி/ நிமிஷமு/ நிலுவதா3யெ/
மின்னல்கள்/ கண்டு/ நிமிடமும்/ நில்லாதாயின/

கனக/-அங்கி3/ நீ/ ஸ்வரமுனு/ வினி/ வாணி/
பொன்/ அங்கத்தினளே/ உனது/ குரலை/ செவி மடுத்து/ வாணி/

மக3னி/ ஜிஹ்வனு/ தா/ பூனிகாயெ/ த்ரிபுர/ (ஸு)
கணவனின்/ நாவினில்/ தான்/ புகலாயிற்று/ திரிபுர/ சுந்தரி...


சரணம் 3
பாவனமு ஜேயு/ பி3ருது3னி/ கனி/ ப4க்த/
புனிதப்படுத்தும்/ விருதினை/ கண்டு/ தொண்டர்களின்/

பாபமு/ பாரி போனாயெ/
பாவங்கள்/ ஓடலாயின/

ஏ வேள/ நீ/ த3ய சேத/ ஸத்கவுலு/-எல்ல/
எவ்வமயமும்/ உனது/ தயையினால்/ நற்கவிகள்/ அனைத்து/

காவ்யமுலனு/ ஸேயனாயெ/
காவியங்களையும்/ இயற்றலாயினர்/

மா/ வருனிகி/ செல்லலு/-அனி/ ஸந்தோஷமுன/
மா/ மணாளனின்/ தங்கை/ என/ மகிழ்ச்சியுடன்/

தே3வி/ பெத்33லு/ பல்கனாயெ/
தேவி/ சான்றோர்/ பகரலாயினர்/

பா4விஞ்சி/ நீ/ பாத3முன/ த்யாக3ராஜு/
உள்ளத்தினில் உணர்ந்து/ உனது/ திருவடியினில்/ தியாகராசன்/

பா4வுகமு/-அனுகொனனாயெ/ த்ரிபுர/ (ஸு)
பேறு என/ கொள்ளலாயினன்/ திரிபுர/ சுந்தரி...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பு4விகி - பூ4மிகி.

2 - நிலுவரமகு3 - நிலவரமகு3 : இரண்டுமே சரியானவை.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
திரிபுரசுந்தரி - திருவொற்றியூர் அம்மை
அல்லியரசன் - மதி
காதல் மன்னன் - காமன்
பொன் மலை - மேரு
தூயோனாகினன் - 'வெண்ணிறத்தோனாகினன்' என்றும் கொள்ளலாம்.

Top


Updated on 05 Nov 2009

2 comments:

Govindaswamy said...

அன்புள்ள கோவிந்தன் அவர்களே
பற்களுடைத்தவளே (பற்கள்+ உடைத்தவளே) என்பதற்குப் பதிலாக பற்களுடையவளே என்பது தெளிவாக இருக்கும் என்பது என் கருத்து.
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
தாங்கள் கூறியபடியே திருத்தியுள்ளேன்.
வணக்கம்
கோவிந்தன்.