Wednesday, November 18, 2009

தியாகராஜ கிருதி - செடே3 பு3த்3தி4 - ராகம் அடா2ணா - Chede Buddhi - Raga Athana

பல்லவி
செடே3 பு3த்3தி4 மானுரா

அனுபல்லவி
இடே3 1பாத்ரமெவரோ ஜூட3ரா (செ)

சரணம்
பூ4 வாஸிகி தகு32லமு கல்கு3னனி
பு3து4லு பல்க வின லேதா3 மனஸா
2ஸ்ரீ வாஸுதே3வஸ்ஸர்வமனுசுனு
சிந்திஞ்சரா த்யாக3ராஜ வினுதுனி (செ)


பொருள் - சுருக்கம்
மனமே!
  • கெட்டுப்போகும் புத்தியினைக் கைவிடடா;

  • இங்கு பாத்திரமெவரோ காணடா;

  • புவி வாசிக்கு தகுந்த பயனுண்டாகுமென, அறிஞர்கள் சொல்லக் கேட்டிலையோ?

  • வாசுதேவனே அனைத்துமென சிந்திப்பாயடா, தியாகராசனால் போற்றப் பெற்றோனை.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
செடே3/ பு3த்3தி4/ மானுரா/
கெட்டுப்போகும்/ புத்தியினை/ கைவிடடா/


அனுபல்லவி
இடே3/ பாத்ரமு/-எவரோ/ ஜூட3ரா/ (செ)
இங்கு/ பாத்திரம்/ எவரோ/ காணடா/


சரணம்
பூ4/ வாஸிகி/ தகு3/ ப2லமு/ கல்கு3னு/-அனி/
புவி/ வாசிக்கு/ தகுந்த/ பயன்/ உண்டாகும்/ என/

பு3து4லு/ பல்க/ வின லேதா3/ மனஸா/
அறிஞர்கள்/ சொல்ல/ கேட்டிலையோ/ மனமே/

ஸ்ரீ வாஸுதே3வ/-ஸர்வமு/-அனுசுனு/
ஸ்ரீ வாசுதேவனே/ அனைத்தும்/ என/

சிந்திஞ்சரா/ த்யாக3ராஜ/ வினுதுனி/ (செ)
சிந்திப்பாயடா/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனை/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - வாஸுதே3 - வாசுதேவன் - உள்ளியங்கும் (உள்ளியக்கும்) இறைவன் - விஷ்ணு ஸஹஸ்ரநாமம் (332) - 'வாசுதேவன்' என்ற பெயருக்கு விளக்கம் நோக்கவும்.

2 - ஸ்ரீ வாஸுதே3வஸ்ஸர்வமனுசுனு - இச்சொற்கள், கீதையில் (7-வது அத்தியாயம், 19-வது செய்யுள்), கண்ணன் உரைத்தபடியே தரப்பட்டுள்ளன.

"பல பிறவிகளுக்குப் பின்னர், மெய்யறிவுடைத்தவன், இவை அனைத்தும் 'வாசுதேவன்' (உள்ளுறை ஆன்மா) என்றுணர்ந்து, என்னை சரண் அடைகின்றான். மிக்கு அரிதாகும் அத்தகைய ஆன்மா." (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)

Top

விளக்கம்
1 - பாத்ரமெவரோ - பாத்திரம் - உள்ளியக்கும் தலைவன். புத்தகங்களில் இதற்கு 'பாத்திரமறிந்து பிச்சையிடு' என்ற வழக்கில் உள்ள 'பாத்திரம்' என்ற சொல்லுக்குடைய பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அதாவது 'தகுந்தவனா என்றறிந்து பிச்சையிடு' என. ஆனால், இவ்விடத்தில் இச்சொல்லிற்கு முன் வரும், 'இடே3' (இங்கு) என்ற சொல்லினால், 'பாத்ர' என்ற சொல் 'உள்ளுறை இறைவனை' (வாசுதேவனை) குறிக்கும் என்று நான் கருதுகின்றேன். இது சரணத்தில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

இங்கு - இவ்வுடலினில்

Top


Updated on 18 Nov 2009

No comments: