1கட்டு ஜேஸினாவு 2ராம ப3ந்து3
அனுபல்லவி
மட்டு மிதமு லேனட்டி 3தே3வதா
மதமுலலோ 4ஜொரப3டு3தா3மண்டே (க)
சரணம்
மா 5மதமுலனு லலாடமுன
பிதாமஹுடு3 வ்ராய லேத3னுசுனு மரி மரி
6காம மத3முலகு ஹிதவனுசு
7நிஷ்காம த்யாக3ராஜுகு 8தோசே (க)
பொருள் - சுருக்கம்
இராமா!
- (என்னைக்) கட்டியுள்ளாய், 'இராமனின் அடிமை' யென.
- எண்ணிறந்தது போலும், கடவுளரின் மதங்களில் நுழைவோமென்றால், (என்னைக்) கட்டியுள்ளாய், 'இராமனின் அடிமை' யென.
- எமது மதத்தினை நெற்றியில் தாதை எழுதவில்லையாதலால், (மற்ற மதங்கள்) ஆசை, செருக்கு ஆகியவற்றிற்கு உகந்தவையென, பற்றற்ற, தியாகராசனுக்கு, திரும்பத்திரும்பத் தோன்றுகின்றது, (என்னைக்) கட்டியுள்ளாய் 'இராமனின் அடிமை' யென.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கட்டு ஜேஸினாவு/ ராம/ ப3ந்து3/
(என்னைக்) கட்டியுள்ளாய்/ 'இராமனின்/ அடிமை'/ யென
அனுபல்லவி
மட்டு மிதமு லேனி/-அட்டி/ தே3வதா/
எண்ணிறந்தது/ போலும்/ கடவுளரின்/
மதமுலலோ/ ஜொரப3டு3தா3மு/-அண்டே/ (க)
மதங்களில்/ நுழைவோம்/ என்றால்/ (என்னைக்) கட்டியுள்ளாய்...
சரணம்
மா/ மதமுலனு/ லலாடமுன/
எமது/ மதத்தினை/ நெற்றியில்/
பிதாமஹுடு3/ வ்ராய லேது3/-அனுசுனு/ மரி மரி/
தாதை/ எழுதவில்லை/ ஆதலால்/ திரும்பத்திரும்ப/
காம/ மத3முலகு/ ஹிதவு/-அனுசு/
(மற்ற மதங்கள்) ஆசை/ செருக்கு (ஆகியவற்றிற்கு)/ உகந்தவை/ யென/
நிஷ்காம/ த்யாக3ராஜுகு/ தோசே/ (க)
பற்றற்ற/ தியாகராசனுக்கு/ தோன்றுகின்றது/ (என்னைக்) கட்டியுள்ளாய்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - ஜொரப3டு3தா3மண்டே - ஜொரப3டு3தா3மன்ன.
8 - தோசே - தோசு.
Top
மேற்கோள்கள்
6 - காம மத3முலகு - இச்சை, சினம், பேராசை, மயக்கம், செருக்கு, வெறுப்பு ஆகி உட்பகைகள் ஆறு.
Top
விளக்கம்
1 - கட்டு ஜேஸினாவு - கட்டியுள்ளாய் - சில புத்தகங்களில், 'கட்டு' என்ற சொல்லுக்கு 'வசியக்கட்டு' (magic spell) என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.
2 - ராம ப3ந்து3 : 'ப3ந்து3' என்ற சொல்லுக்கு 'கைதி' என்றும் பொருள் கொள்ளலாம். முன்னாளினில், கடனுக்காக, பரம்பரையாக அடிமைகளாக உழைத்தோரை, 'Bonded Labour' என்பர். இத்தகைய அடிமைத்தனத்தைத் தான் தியாகராஜர் குறிப்பிடுவதாக நான் எண்ணுகின்றேன். Bonded Labour ஒழிப்புச் சட்டம் நோக்கவும். எனவே 'அடிமை' என்ற பொருள் ஏற்கப்பட்டது.
3 - தே3வதா மதமுலலோ - சைவம், வைணவம் ஆகிய ஆறு மதங்கள்.
5 - மதமுலனு லலாடமுன பிதாமஹுடு3 வ்ராய லேது3 - மதத்தினை, நெற்றியில், தாதை எழுதவில்லை. மதங்கள், மக்களை இணைப்பதற்குப் பதிலாக, பிளவுண்டாக்கப் பயன்படுத்தப்படும் இன்றைய சமுதாயச் சூழ்நிலையில், இச்சொல் நினைவுகூறத் தக்கது.
Top
6 - காம மத3முலகு ஹிதவு - மற்ற மதங்கள் ஆசை, செருக்கு ஆகியவற்றிற்கு உகந்தவை. தியாகராஜர், ஆறுவகை மதங்களிடையே வேறுபாடு செய்வோரை, பல கீர்த்தனைகளில் நிந்திக்கின்றார். சைவம், வைணவம் ஆகிய ஆறு மதங்களுக்குமே, 'பக்தி நெறி' பொதுவாகும். எனவே இங்கு, அவர், வைணவத்தைத் தவிர, மற்ற மதங்களைக் குறை கூறுவதாகக் கொள்ளலாகாது. அவர் குறை கூறுவது, 'இச்சைகளுக்காக வேள்விகள் இயற்றும் கரும மார்க்கம்' மற்றும் வினோதமான கோட்பாடுகளுடைய 'கௌல மார்க்கம்' ஆகியவற்றினை எனக்கொளலே பொருந்தும்.
கண்ணன் கீதையில் (3-வது அத்தியாயம், 9-வது செய்யுள்) கூறவது -
"வேள்விக்கென்றே அல்லாது, மற்ற நோக்கங்களுடன் இயற்றப்படும் காரியங்களால், இவ்வுலகம் கட்டுப்பட்டதாகின்றது. அதனால், குந்தி மகனே, பற்றினைத் துறந்து, பணிகளைச் செய்வாய்." (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.
7 - நிஷ்காம - பற்றற்ற - இச்சொல், இறைவனைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஆனால், புத்தகங்களில் கூறியபடி, பரம்பரையாக, இச்சொல் தியாகராஜரைக் குறிப்பதாகக் கொள்ளப்பட்டுள்ளது. அங்ஙனமே இங்கும் பொருள் கொள்ளப்பட்டது.
தாதை - பிரமன்
Top
Updated on 15 Nov 2009
No comments:
Post a Comment