நா மொரலனு வினி ஏமரவலெனா
பாமர மனுஜுலலோ ஓ ராம
அனுபல்லவி
தோமர நாராசமுலை மனஸுகு
தோசெனா ப4க்த பாப விமோசன (நா)
சரணம்
சரணம் 1
இப4 ராஜேந்த்3ருடு3 எக்குவைன
லஞ்சமிச்சினதே3மிரா
ஸப4லோ மானமு போவு ஸமயம்பு3ன
ஸதியேமிச்செனுரா ஓ ராம (நா)
சரணம் 2
பா4க3வதாக்3ரேஸர ரஸிகாவன
ஜாக3ரூகுட3னி பேரே
ராக3 ஸ்வர யுத 1ப்ரேம ப4க்த ஜன
ரக்ஷக த்யாக3ராஜ வந்தி3த (நா)
பொருள் - சுருக்கம்
ஓ இராமா! தொண்டர்களின் பாவங்களைக் களைவோனே! பாகவதர்களில் தலைசிறந்தோரையும், இரசிகர்களையும் காப்போனே! ராகம், சுரதத்துடன் கூடிய காதலுடைத்த தொண்டர்களைக் காப்போனே! தியாகராசனால் தொழப்பெற்றோனே!
- எனது முறையீடுகளைக் கேட்டும் கவனியாதிருக்கவேணுமோ, தீய மனிதர்களிடையே?
- ஈட்டி, அம்புகளாக (எனது சொற்கள்) மனதுக்குத் தோன்றியதோ?
- கரியரசன் மிக்கு இலஞ்சம் கொடுத்ததென்னவய்யா?
- அவையில் மானம் போகும்வேளை அணங்கு என்ன கொடுத்தாளய்யா?
- விழிப்புடையவனெனப் பெயர் மட்டுமே(யுனக்கு).
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நா/ மொரலனு/ வினி/ ஏமரவலெனா/
எனது/ முறையீடுகளை/ கேட்டும்/ கவனியாதிருக்கவேணுமோ/
பாமர/ மனுஜுலலோ/ ஓ ராம/
தீய/ மனிதர்களிடையே/ ஓ இராமா/
அனுபல்லவி
தோமர/ நாராசமுலை/ மனஸுகு/
ஈட்டி/ அம்புகளாக/ (எனது சொற்கள்) மனதுக்கு/
தோசெனா/ ப4க்த/ பாப/ விமோசன/ (நா)
தோன்றியதோ/ தொண்டர்களின்/ பாவங்களை/ களைவோனே/
சரணம்
சரணம் 1
இப4/ ராஜ-இந்த்3ருடு3/ எக்குவைன/
கரி/ அரசன் (பேரரசன்)/ மிக்கு/
லஞ்சமு/-இச்சினதி3/-ஏமிரா/
இலஞ்சம்/ கொடுத்தது/ என்னவய்யா/
ஸப4லோ/ மானமு/ போவு/ ஸமயம்பு3ன/
அவையில்/ மானம்/ போகும்/ வேளை/
ஸதி/-ஏமி/-இச்செனுரா/ ஓ ராம/ (நா)
அணங்கு/ என்ன/ கொடுத்தாளய்யா/ ஓ இராமா/
சரணம் 2
பா4க3வத/-அக்3ரேஸர/ ரஸிக/-அவன/
பாகவதர்களில்/ தலைசிறந்தோரையும்/ இரசிகர்களையும்/ காப்போனே/
ஜாக3ரூகுடு3/-அனி/ பேரே/
விழிப்புடையவன்/ என/ பெயர் மட்டுமே(யுனக்கு)/
ராக3/ ஸ்வர/ யுத/ ப்ரேம/ ப4க்த ஜன/
ராகம்/ சுரதத்துடன்/ கூடிய/ காதலுடைத்த/ தொண்டர்களை/
ரக்ஷக/ த்யாக3ராஜ/ வந்தி3த/ (நா)
காப்போனே/ தியாகராசனால்/ தொழப்பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - ப்ரேம - காதல் - நாரத பக்தி சூத்திரங்களில் கூறப்பட்ட 'அனுராகம்' எனப்படும் இறைவனிடம் கொள்ளும் இச்சைகளற்ற காதல் - நாரத பக்தி சூத்திரங்கள்
Top
விளக்கம்
இலஞ்சம் - கைக்கூலி
அணங்கு - துரோபதை
Top
Updated on 18 Oct 2009
4 comments:
அன்புள்ள கோவிந்தன் அவர்களே
ஏமரவலெனா என்பதற்கு ‘கவனியாதிருக்கவேணுமோ’ என்று பொருள் கொடுத்திருக்கிறீர். பேச்சுவழக்கில் ஏமாரவலெனா/ஏமார்ச்சவலெனா என்பவை உள்ளன. இவற்றிற்கு ஏமாறவேண்டுமா/ஏமாற்றவேண்டுமா என்று பொருள். பாட்டில் இரண்டாவது பொருள் பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
அகராதிகளில் இந்த வார்த்தைக்குப் பொருள் கிடைக்கவில்லை.
வணக்கம்
கோவிந்தஸ்வாமி
திரு கோவிந்தஸ்வாமி அவர்களே,
தெலுங்கு 'ஏமரு' என்ற சொல்லும், தமிழ் 'ஏமாற்று' என்ற சொல்லும் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும், அவற்றின் பொருள் வேறு வேறாகும். தெலுங்கு 'ஏமரு' என்ற சொல்லின் பொருள் நோக்கவும் -
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=Emaru&table=brown
வணக்கம்.
கோவிந்தன்
அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
நன்றி. கொடுக்கப்பட்டுள்ள முன்று பொருள்கள்
To be off one's guard. To blunder, be deceived. To fall into a trap, or overlook a fact.
நீங்கள் கடைசி பொருளை எடுத்துக் கொண்டுள்ளீர்.
ஏமரவலெனாவிற்குப் பதில் மரவவலெனா என்று இருக்குமா?
பாமர மனுஜுலலோ என்பதற்கு என்ன சம்பந்தம்?
வணக்கம்
கோவிந்தஸ்வாமி
திரு கோவிந்தஸ்வாமி அவர்களே,
'மரவவலெனா' என்ற வேறுபாடு எந்த புத்தகத்திலும் கொடுக்கப்படவில்லை. அதனால் அப்படியிருக்குமா என்று என்னால் பதில் சொல்ல இயலவில்லை.
வணக்கம்,
கோவிந்தன்
Post a Comment