Sunday, October 18, 2009

தியாகராஜ கிருதி - நா மொரலனு - ராகம் ஆரபி4 - Naa Moralanu - Raga Arabhi

பல்லவி
நா மொரலனு வினி ஏமரவலெனா
பாமர மனுஜுலலோ ஓ ராம

அனுபல்லவி
தோமர நாராசமுலை மனஸுகு
தோசெனா ப4க்த பாப விமோசன (நா)

சரணம்
சரணம் 1
இப4 ராஜேந்த்3ருடு3 எக்குவைன
லஞ்சமிச்சினதே3மிரா
ஸப4லோ மானமு போவு ஸமயம்பு3
ஸதியேமிச்செனுரா ஓ ராம (நா)


சரணம் 2
பா43வதாக்3ரேஸர ரஸிகாவன
ஜாக3ரூகுட3னி பேரே
ராக3 ஸ்வர யுத 1ப்ரேம4க்த ஜன
ரக்ஷக த்யாக3ராஜ வந்தி3த (நா)


பொருள் - சுருக்கம்
ஓ இராமா! தொண்டர்களின் பாவங்களைக் களைவோனே! பாகவதர்களில் தலைசிறந்தோரையும், இரசிகர்களையும் காப்போனே! ராகம், சுரதத்துடன் கூடிய காதலுடைத்த தொண்டர்களைக் காப்போனே! தியாகராசனால் தொழப்பெற்றோனே!
  • எனது முறையீடுகளைக் கேட்டும் கவனியாதிருக்கவேணுமோ, தீய மனிதர்களிடையே?

  • ஈட்டி, அம்புகளாக (எனது சொற்கள்) மனதுக்குத் தோன்றியதோ?

    • கரியரசன் மிக்கு இலஞ்சம் கொடுத்ததென்னவய்யா?

    • அவையில் மானம் போகும்வேளை அணங்கு என்ன கொடுத்தாளய்யா?

  • விழிப்புடையவனெனப் பெயர் மட்டுமே(யுனக்கு).



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நா/ மொரலனு/ வினி/ ஏமரவலெனா/
எனது/ முறையீடுகளை/ கேட்டும்/ கவனியாதிருக்கவேணுமோ/

பாமர/ மனுஜுலலோ/ ஓ ராம/
தீய/ மனிதர்களிடையே/ ஓ இராமா/


அனுபல்லவி
தோமர/ நாராசமுலை/ மனஸுகு/
ஈட்டி/ அம்புகளாக/ (எனது சொற்கள்) மனதுக்கு/

தோசெனா/ ப4க்த/ பாப/ விமோசன/ (நா)
தோன்றியதோ/ தொண்டர்களின்/ பாவங்களை/ களைவோனே/


சரணம்
சரணம் 1
இப4/ ராஜ-இந்த்3ருடு3/ எக்குவைன/
கரி/ அரசன் (பேரரசன்)/ மிக்கு/

லஞ்சமு/-இச்சினதி3/-ஏமிரா/
இலஞ்சம்/ கொடுத்தது/ என்னவய்யா/

ஸப4லோ/ மானமு/ போவு/ ஸமயம்பு3ன/
அவையில்/ மானம்/ போகும்/ வேளை/

ஸதி/-ஏமி/-இச்செனுரா/ ஓ ராம/ (நா)
அணங்கு/ என்ன/ கொடுத்தாளய்யா/ ஓ இராமா/


சரணம் 2
பா43வத/-அக்3ரேஸர/ ரஸிக/-அவன/
பாகவதர்களில்/ தலைசிறந்தோரையும்/ இரசிகர்களையும்/ காப்போனே/

ஜாக3ரூகுடு3/-அனி/ பேரே/
விழிப்புடையவன்/ என/ பெயர் மட்டுமே(யுனக்கு)/

ராக3/ ஸ்வர/ யுத/ ப்ரேம/ ப4க்த ஜன/
ராகம்/ சுரதத்துடன்/ கூடிய/ காதலுடைத்த/ தொண்டர்களை/

ரக்ஷக/ த்யாக3ராஜ/ வந்தி3த/ (நா)
காப்போனே/ தியாகராசனால்/ தொழப்பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - ப்ரேம - காதல் - நாரத பக்தி சூத்திரங்களில் கூறப்பட்ட 'அனுராகம்' எனப்படும் இறைவனிடம் கொள்ளும் இச்சைகளற்ற காதல் - நாரத பக்தி சூத்திரங்கள்

Top

விளக்கம்
இலஞ்சம் - கைக்கூலி
அணங்கு - துரோபதை

Top


Updated on 18 Oct 2009

4 comments:

Govindaswamy said...

அன்புள்ள கோவிந்தன் அவர்களே
ஏமரவலெனா என்பதற்கு ‘கவனியாதிருக்கவேணுமோ’ என்று பொருள் கொடுத்திருக்கிறீர். பேச்சுவழக்கில் ஏமாரவலெனா/ஏமார்ச்சவலெனா என்பவை உள்ளன. இவற்றிற்கு ஏமாறவேண்டுமா/ஏமாற்றவேண்டுமா என்று பொருள். பாட்டில் இரண்டாவது பொருள் பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
அகராதிகளில் இந்த வார்த்தைக்குப் பொருள் கிடைக்கவில்லை.
வணக்கம்
கோவிந்தஸ்வாமி

V Govindan said...

திரு கோவிந்தஸ்வாமி அவர்களே,
தெலுங்கு 'ஏமரு' என்ற சொல்லும், தமிழ் 'ஏமாற்று' என்ற சொல்லும் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும், அவற்றின் பொருள் வேறு வேறாகும். தெலுங்கு 'ஏமரு' என்ற சொல்லின் பொருள் நோக்கவும் -
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=Emaru&table=brown

வணக்கம்.
கோவிந்தன்

Govindaswamy said...

அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
நன்றி. கொடுக்கப்பட்டுள்ள முன்று பொருள்கள்
To be off one's guard. To blunder, be deceived. To fall into a trap, or overlook a fact.
நீங்கள் கடைசி பொருளை எடுத்துக் கொண்டுள்ளீர்.
ஏமரவலெனாவிற்குப் பதில் மரவவலெனா என்று இருக்குமா?
பாமர மனுஜுலலோ என்பதற்கு என்ன சம்பந்தம்?
வணக்கம்
கோவிந்தஸ்வாமி

V Govindan said...

திரு கோவிந்தஸ்வாமி அவர்களே,
'மரவவலெனா' என்ற வேறுபாடு எந்த புத்தகத்திலும் கொடுக்கப்படவில்லை. அதனால் அப்படியிருக்குமா என்று என்னால் பதில் சொல்ல இயலவில்லை.
வணக்கம்,
கோவிந்தன்