நாத3 ஸுதா4 ரஸம்பி3லனு
நராக்ரு2தியாயே மனஸா
அனுபல்லவி
1வேத3 புராணாக3ம
ஸா1ஸ்த்ராது3லகாதா4ரமௌ (நாத3)
சரணம்
ஸ்வரமுலாருன்னொகடி 2க4ண்டலு
வர 3ராக3மு கோத3ண்ட3மு
4து3ர நய தே3ஸ்1யமு 5த்ரி கு3ணமு
நிரத க3தி ஸ1ரமுரா
ஸரஸ 6ஸங்க3தி 7ஸந்த3ர்ப4மு க3ல கி3ரமுலுரா
த4ர ப4ஜன பா4க்3யமுரா
த்யாக3ராஜு ஸேவிஞ்சு (நாத3)
பொருள் - சுருக்கம்
மனமே!
- வேத, புராண, ஆகம, சாத்திரங்கள் ஆகியவற்றிற்கு ஆதாரமான, தியாகராசன் சேவிக்கும், நாதமெனும் அமுதச்சாறு இங்கு (இராமனாக) மனித உருவானதே!
- சுரங்கள் ஆறோடொன்று, மணிகளாக,
- உயர் ராகம், கோதண்டமாக,
- துரம், நயம், தேசியம், (நாணின்) முப்பிரிகளாக,
- நிலையான கதி, அம்புகளடா;
- இனிய சங்கதி, தருணத்திற்கேற்றச் சொற்களடா;
- வில்லேந்துவோனின் பஜனையே பேறாகுமடா.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நாத3/ ஸுதா4/ ரஸம்பு3/-இலனு/
நாதமெனும்/ அமுத/ சாறு/ இங்கு/
நர/-ஆக்ரு2தி/-ஆயே/ மனஸா/
மனித/ உரு/ ஆனதே/ மனமே/
அனுபல்லவி
வேத3/ புராண/-ஆக3ம/
வேத/ புராண/ ஆகம/
ஸா1ஸ்த்ர/-ஆது3லகு/-ஆதா4ரமௌ/ (நாத3)
சாத்திரங்கள்/ ஆகியவற்றிற்கு/ ஆதாரமான/ நாதமெனும்...
சரணம்
ஸ்வரமுலு/-ஆருன்னு/-ஒகடி/ க4ண்டலு/
சுரங்கள்/ ஆறோடு/ ஒன்று/ மணிகளாக/
வர/ ராக3மு/ கோத3ண்ட3மு/
உயர்/ ராகம் கோதண்டமாக/
து3ர/ நய/ தே3ஸ்1யமு/ த்ரி/ கு3ணமு/
துரம்/ நயம்/ தேசியம்/ (நாணின்) மூன்று/ பிரிகளாக/
நிரத/ க3தி/ ஸ1ரமுரா/
நிலையான/ கதி/ அம்புகளடா/
ஸரஸ/ ஸங்க3தி/ ஸந்த3ர்ப4மு க3ல/ கி3ரமுலுரா/
இனிய/ சங்கதி/ தருணத்திற்கேற்ற/ சொற்களடா/
த4ர/ ப4ஜன/ பா4க்3யமுரா/
வில்லேந்துவோனின்/ பஜனையே/ பேறாகுமடா/
த்யாக3ராஜு/ ஸேவிஞ்சு/ (நாத3)
தியாகராசன்/ சேவிக்கும்/ நாதமெனும்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - வேத3 புராணாக3ம ஸா1ஸ்த்ராது3லகாதா4ரமௌ - வேத, புராண, ஆகம, சாத்திரங்கள் ஆகியவற்றிற்கு ஆதாரமான - 'ஸ்போ2ட' எனப்படும் நாதத்தினைப் பற்றிய விளக்கம் நோக்கவும்.
2 - க4ண்டலு - மணிகள் - வில்லினில் கட்டப்பட்டவை - தியாகராஜரின் 'ஸ்வர ராக3 ஸுதா4' என்னும் கீர்த்தனையில், 'நாதம்', மூலாதாரத்தினின்று உதிப்பதாகக்கூறி, ஏழு சுரங்களுக்கும், உடலில் ஏழு இருப்பிடங்களுண்டு என்றும் குறிப்பிடுகின்றார்.
'ஏழு சுரங்களும், உடலின் ஏழு ஆதாரத்தானங்களும் (சக்கரங்கள்)' (download).
Top
3 - ராக3மு கோத3ண்ட3மு - ராவணன் தன்னுடை வில் நாணில், தனது அம்புகளினால், வீணை வாசிப்பான் என்று வால்மீகி ராமாயணத்தில் கூறப்படுவதாக இந்த website-ல் கூறப்பட்டுள்ளது. (ஆனால் வால்மீகி ராமாயணத்தில் எங்கு அம்மாதிரி கூறப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை.)
தியாகராஜர் தனது 'கோடி நது3லு' என்ற கீர்த்தனையில் குண்டலி யோகத்தினைப் பற்றி குறிப்பிடுகின்றார். முதுகுத் தண்டு 'மேரு த3ண்ட3ம்' எனப்படும். தியாகராஜர், தனது 'ஈஸ1 பாஹி மாம்' என்ற கீர்த்தனையில், சிவனை 'ஹேமாசல சாப' (மேருமலையினை வில்லாக உடைய) என்று, மேருதண்டத்தினை, மறைமுகமாகக் கூறுகின்றார்.
4 - து3ர நய தே3ஸ்1யமு - து3ர என்ற சொல்லுக்கு அகராதிகளில், இசைக்கு சம்பந்தப்பட்ட பொருள் ஏதுமில்லை. திரு கோடீஸ்வரய்யர், தனது 'கன நய தேசிக கான ரசிக கந்தா நீயே' என்ற கீர்த்தனையில் 'து3ர' என்ற சொல்லுக்குப் பதிலாக 'க3ன' என்று கூறியிருப்பதாகத் தோன்றுகின்றது. எனவே 'து3ர' மற்றும் 'க3ன' ஆகிய இரண்டு சொற்களுமே ஒன்று எனக் கருதுகின்றேன்.
'க4ன', 'நய', 'தே3ஸ்1ய', 'க3தி', 'சங்க3தி' ஆகிய, இசைக் கலைக்கே உரித்தான, சிறப்புச் சொற்களைக் குறித்து விளக்கங்கள் கீழ்க்கண்ட website-களி்ல் நோக்கவும். இசைச் சொற்கள்-1; இசைச் சொற்கள்-2
Top
5 - த்ரி கு3ணமு - கு3ண என்ற சொல்லுக்கு பிரி, நாண், கயிறு மற்றும் (சத்துவ, ராஜஸ, தாமஸ ஆகிய) முக்குணங்கள் என்றும் பொருளுண்டு. கீதையில் கண்ணன் (14-வது அத்தியாயம், 5-வது செய்யுள்) கூறுவது -
"சத்துவம், ராஜஸம் மற்றும் தாமஸம் என்ற, இயற்கையில் (ப்ரக்ருதி) உதிக்கும், முக்குணங்கள்,
பெரும் வீரனே! அழிவற்ற, இவ்வுடல் எடுத்தோனை, உடலில் கட்டுகின்றன."
(ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
6 - ஸங்க3தி - ஸங்க3தியும் தியாகராஜரும்
7 - ஸந்த3ர்ப4மு க3ல கி3ரமுலுரா - தருணத்திற்கேற்ற சொற்கள் - தியாகராஜர் தனது 'ஏமனி மாடாடி3திவோ' என்ற கீர்த்தனையில், ராமனின் இனிய பேச்சுத்திறனை வியக்கின்றார்.
Top
விளக்கம்
மனித உரு - இராமனாக
சுரங்கள் ஆறோடொன்று - ஏழு சுரங்கள்
கோதண்டம் - இராமனின் வில்
நாண் - வில்லின் நாண்
வில்லேந்துவோன் - இராமன்
Top
Updated on 17 Oct 2009
No comments:
Post a Comment