Tuesday, August 25, 2009

தியாகராஜ கிருதி - ராம தை3வமா - ராகம் ஸுரடி - Rama Daivamaa - Raga Surati

பல்லவி
ராம தை3வமா 1ராக ராக லோப4மா

அனுபல்லவி
மோமு ஜூபுமா ஜக3ன்-மோஹன-கரமா (ராம)

சரணம்
சரணம் 1
தொ3ங்க3 ஜாட3லேல இல்லு ப3ங்கா3ராயெனா
2ரங்க3டா3 விபீ4ஷணுனிகி 3பங்க3 நாமமிடி3 ரீதி (ராம)


சரணம் 2
வென்ன தா பு4ஜிஞ்சி 4கோ3ப கன்ய முக2முன
தின்னக3னலந்தி3னட்டு தீ3ன ரக்ஷகா ஸீதா (ராம)


சரணம் 3
நேர்பு ஜூபுமா அங்க3லார்பு பா3புமா
ஓர்பு க3ல்கு3 த்யாக3ராஜு ஒக பாரி ஸ1ரணண்டே (ராம)


பொருள் - சுருக்கம்
இராம தெய்வமா! பல்லுலகையும் மயக்குவோனே! எளியோரைக்காப்போனே! சீதாராம தெய்வமா!
  • வர வர கஞ்சத்தனமா?

  • கள்ளச் சைகைகளேனோ? இல்லம் பொன்னாகியதோ?

    • அரங்கன் அவ்விபீடணனுக்குப் பட்டை நாமமிட்டது போன்றும்,

    • வெண்ணை, தான் தின்று, இடைச்சியரின் முகத்தினில் நன்கு பூசியது போன்றும்,

  • வர வர கஞ்சத்தனமா?


  • முகத்தினைக் காட்டுவாய்.

  • திறமையைக் காட்டுவாய்.

  • துயரத்தைப் போக்குவாய்.


  • பொறுமையுடைத் தியாகராசன் ஒரு முறைப் புகலெனினும் வர வர கஞ்சத்தனமா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ தை3வமா/ ராக/ ராக/ லோப4மா/
இராம/ தெய்வமா/ வர/ வர/ கஞ்சத்தனமா/


அனுபல்லவி
மோமு/ ஜூபுமா/ ஜக3ன்/-மோஹன-கரமா/ (ராம)
முகத்தினை/ காட்டுவாய்/ பல்லுலகையும்/ மயக்குவோனே/


சரணம்
சரணம் 1
தொ3ங்க3/ ஜாட3லு/-ஏல/ இல்லு/ ப3ங்கா3ரு/-ஆயெனா/
கள்ள/ சைகைகள்/ ஏனோ/ இல்லம்/ பொன்/ ஆகியதோ/

ரங்க3டு3/-ஆ/ விபீ4ஷணுனிகி/ பங்க3/ நாமமு/-இடி3ன/ ரீதி/ (ராம)
அரங்கன்/ அந்த/ விபீடணனுக்கு/ பட்டை/ நாமம்/ இட்டது/ போன்று/ இராம...


சரணம் 2
வென்ன/ தா/ பு4ஜிஞ்சி/ கோ3ப கன்ய/ முக2முன/
வெண்ணை/ தான்/ தின்று/ இடைச்சியரின்/ முகத்தினில்/

தின்னக3னு/-அலந்தி3ன/-அட்டு/ தீ3ன/ ரக்ஷகா/ ஸீதா/ (ராம)
நன்கு/ பூசியது/ போன்று/ எளியோரை/ காப்போனே/ சீதா/ ராம...


சரணம் 3
நேர்பு/ ஜூபுமா/ அங்க3லார்பு/ பா3புமா/
திறமையை/ காட்டுவாய்/ துயரத்தை/ போக்குவாய்/

ஓர்பு/ க3ல்கு3/ த்யாக3ராஜு/ ஒக/ பாரி/ ஸ1ரணு/-அண்டே/ (ராம)
பொறுமை/ உடைய/ தியாகராசன்/ ஒரு/ முறை/ புகல்/ எனினும்/ இராம...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராக ராக லோப4மா - எல்லா புத்தகங்களிலும், இதற்கு, 'வர வர (of late, gradually) கஞ்சத்தனமா' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'வர வர' என்பதற்கு, தெலுங்கில், 'ரானு ரானு' என்று கூறுவர். மேலும், எல்லா புத்தகங்களிலும், 'ராக3 ராக3' என்றுதான் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் தவறாகும். புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள பொருள் பாரம்பரியமாக வருகின்றதெனக் கருதி, அதனையே ஏற்றக்கொள்ளப்பட்டது. ஆயின், 'ராக3 ராக3' என்பதிற்கு பதிலாக 'ராக ராக' என்று மாற்றப்பட்டுள்ளது.

4 - கோ3ப கன்ய - கோ3பி கன்ய.

Top

மேற்கோள்கள்
2 - ரங்க3டு3 விபீ4ஷணுனிகி - அரங்கன் விபீடணனுக்கு - இராமனின் முடி சூட்டு விழாவுக்கு வந்திருந்த வீபீடணனுக்கு, இராமன், தன் குலத்தோர் வழிபடும் ரங்க விமானத்தினைப் பரிசாக அளித்தான். விமானத்தினை இலங்கைக்குக் கொண்டுசெல்கையில், மதியக் கடன்களுக்காக காவேரிக் கரையில் விபீடணன் கீழே வைத்துவிட்டான். அதனால் அரங்கன் அங்கேயே நிலைபெற்றான். இது குறித்து, திருவரங்கத் தல புராணம் நோக்கவும். இதனைத் தான், தியாகராஜர், 'விபீடணனை ஏமாற்றியது போன்று' என்று கேலி செய்கின்றார்.

Top

விளக்கம்
3 - பங்க3 நாமமிடி3 - பட்டை நாமமிட்ட - 'பட்டை நாமம்' என்பது வைணவர்கள் இடும் திருமண் சின்னத்தினைக் குறிக்கும். ஆனால், இச்சொல் 'ஏமாற்றுதலை'க் குறிப்பதாகச் சொல்வழக்கில் பயன்படுத்தப்படுகின்றது.

Top


Updated on 25 Aug 2009

No comments: