1பராமுக2மேலரா ராமய்ய
அனுபல்லவி
2நிராத3ரண கலதா3 3நீயெட3ல
நித்யானந்த3 கல்யாண கு3ண (பரா)
சரணம்
இப4 ராஜு 4நீகேமைனனிச்செனா தெலுபு
5ஸு1ப4 ப்ரது3டு3 நீவேயனுசு
ஸுந்த3ர 6த்யாக3ராஜ நுத (பரா)
பொருள் - சுருக்கம்
- இராமய்யா!
- அழிவற்ற ஆனந்தனே! கலியாண குணங்களோனே!
- நலனருள்வோன் நீயே யென தியாகராசனால் போற்றப் பெற்ற அழகா!
- பராமுகம் ஏனய்யா?
- புறக்கணிப்பு உளதோ உன்னிடம்?
- கரியரசன் உனக்கேதும் தந்தானோ, தெரிவிப்பாய்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பராமுக2மு/-ஏலரா/ ராமய்ய/
பராமுகம்/ ஏனய்யா/ இராமய்யா/
அனுபல்லவி
நிராத3ரண/ கலதா3/ நீயெட3ல/
புறக்கணிப்பு/ உளதோ/ உன்னிடம்/
நித்ய/-ஆனந்த3/ கல்யாண/ கு3ண/ (பரா)
அழிவற்ற/ ஆனந்தனே/ கலியாண/ குணங்களோனே/
சரணம்
இப4/ ராஜு/ நீகு/-ஏமைனனு/-இச்செனா/ தெலுபு/
கரி/ யரசன்/ உனக்கு/ ஏதும்/ தந்தானோ/ தெரிவிப்பாய்/
ஸு1ப4/ ப்ரது3டு3/ நீவே/-அனுசு/
நலன்/ அருள்வோன்/ நீயே/ யென/
ஸுந்த3ர/ த்யாக3ராஜ/ நுத/ (பரா)
அழகா/ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - நிராத3ரண - நிராத3ரவு : இவ்விடத்தில் 'நிராத3ரண' பொருந்தும்.
6 - த்யாக3ராஜ நுத - ஸ்ரீ த்யாக3ராஜ நுத.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - பராமுக2 - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் இச்சொல்லுக்கு 'அசட்டை' என்று பொருளாகும். ஆனால், அதற்கான தெலுங்கு சொல் 'பராங்முக2' அல்லது 'பாரப்3முக2' ஆவன. 'பராமுகம்' என்பது வடமொழியிலிருந்து திரிந்த தமிழ்ச் சொல்லாகும்.
3 - நீயெட3ல - உன்னிடத்தில் - தெலுங்கு மொழியில் இங்ஙனம் திரிபு உளதா எனத் தெரியவில்லை.
4 - ஏமைனனிச்செனா - 'இலஞ்சம் கொடுத்தானா' எனப் பொருளாகும்.
5 - ஸு1ப4 ப்ரது3டு3 நீவேயனுசு - நலன் அருள்வோன் நீயென - இச்சொற்களினால் வாக்கியம் நிறைவு பெறுவதாகத் தோன்றவில்லை. எனவே, இவற்றினை 'தியாகராஜனால் போற்றப் பெற்ற' என்ற சொற்களுடன் இணைத்து பொருள் கொள்ளப்பட்டுள்ளது.
அழிவற்ற ஆனந்தனே! கலியாண குணங்களோனே - 'உனது கலியாண குணங்களை தியானிப்போருக்கு அழிவற்ற ஆனந்தமருள்வோனே' என்றும் கொள்ளலாம்.
திரு TK கோவிந்த ராவ் அவர்களின் 'Compositions of Tyagaraja' என்ற புத்தகத்தில், இந்த கிருதி, தியாகராஜரால் இயற்றப்பெற்றதா என்று ஐயமிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
Top
Updated on 22 Aug 2009
No comments:
Post a Comment