Saturday, August 22, 2009

தியாகராஜ கிருதி - ப4ஜன பருலகேல - ராகம் ஸுரடி - Bhajana Parulakela - Raga Surati

பல்லவி
4ஜன பருலகேல த3ண்ட3 பாணி
4யமு மனஸா 1ராம (ப4ஜன)

அனுபல்லவி
அஜ ருத்32ஸுரேஸு1லகாயா
ஸ்தா2னமொஸங்கு3
ராம (ப4ஜன)

சரணம்
அண்ட3 கோட்லு நிண்டி3
கோத3ண்ட3 பாணி முக2முனு
ஹ்ரு2த்-புண்ட3ரீகமுன ஜூசி பூஜ ஸல்புசு
நிண்டு3 ப்ரேமதோ கரங்கு3 நிஷ்காமுலகு வர
வேத3ண்ட3 பாலு தா3ஸுடை3
த்யாக3ராஜு ஸேயு 3ராம (ப4ஜன)


பொருள் - சுருக்கம்
மனமே!
  • இராமனின் பஜனையில் ஈடுபட்டோருக்கேன் தண்டபாணியின் அச்சம்?

  • பிரமன், உருத்திரன், வானோர் தலைவன் ஆகியோருக்கு அந்தந்தப் பதவிகளை வழங்கும் இராமனின் பஜனையில் ஈடுபட்டோருக்கேன் தண்டபாணியின் அச்சம்?


    • அண்டங்கள் கோடிகளில் நிறைந்துள்ள கோதண்டபாணியின் முகத்தினை, (தமது) இதயக் கமலத்தினிற் கண்டு, வழிபாடு செய்துகொண்டு, நிறை காதலுடன் உருகும் இச்சைகளற்றோருக்கும்,

    • உயர் வேழத்தினைக் காப்போனின் தொண்டனாகிய தியாகராசன் செய்யும் இராமனின் பஜனையில் ஈடுபட்டோருக்கும்

  • ஏன் தண்டபாணியின் அச்சம்?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
4ஜன/ பருலகு/-ஏல/ த3ண்ட3/ பாணி/
பஜனையில்/ ஈடுபட்டோருக்கு/ ஏன்/ தண்ட/ பாணியின்/

4யமு/ மனஸா/ ராம/ (ப4ஜன)
அச்சம்/ மனமே/ இராமனின்/ பஜனையில்...


அனுபல்லவி
அஜ/ ருத்3ர/ ஸுர/-இஸு1லகு/-ஆயா/
பிரமன்/ உருத்திரன்/ வானோர்/ தலைவன் ஆகியோருக்கு/ அந்தந்த/

ஸ்தா2னமு/-ஒஸங்கு3/ ராம/ (ப4ஜன)
பதவிகளை/ வழங்கும்/ இராமனின்/ பஜனையில்...


சரணம்
அண்ட3/ கோட்லு/ நிண்டி3ன/
அண்டங்கள்/ கோடிகளில்/ நிறைந்துள்ள/

கோத3ண்ட3/ பாணி/ முக2முனு/ ஹ்ரு2த்/-
கோதண்ட/ பாணியின்/ முகத்தினை/ (தமது) இதய/

புண்ட3ரீகமுன/ ஜூசி/ பூஜ/ ஸல்புசு/
கமலத்தினில்/ கண்டு/ வழிபாடு/ செய்துகொண்டு/

நிண்டு3/ ப்ரேமதோ/ கரங்கு3/ நிஷ்காமுலகு/ வர/
நிறை/ காதலுடன்/ உருகும்/ இச்சைகளற்றோருக்கும்/ உயர்/

வேத3ண்ட3/ பாலு/ தா3ஸுடை3ன/
வேழத்தினை/ காப்போனின்/ தொண்டனாகிய/

த்யாக3ராஜு/ ஸேயு/ ராம/ (ப4ஜன)
தியாகராசன்/ செய்யும்/ இராமனின்/ பஜனையில்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராம - இச்சொல் சில புத்தகங்களில் கொடுக்கப்படவில்லை.

2 - ஸுரேஸு1லகாயா ஸ்தா2னமொஸங்கு3 - ஸுரேஸு1லகா ஸ்தா2னமொஸங்கு3.

3 - ராம - நாம.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
தண்டபாணி - இங்கு நமனைக் குறிக்கும்
வானோர் தலைவன் - இந்திரன்
உயர் வேழம் - கஜேந்திரன்

Top


Updated on 23 Aug 2009

No comments: