Friday, July 17, 2009

தியாகராஜ கிருதி - மாகேலரா விசாரமு - ராகம் ரவி சந்த்3ரிக - Maakelaraa Vichaaramu - Raga Ravi Chandrika

பல்லவி
மாகேலரா விசாரமு
மருகன்ன ஸ்ரீ ராம சந்த்3

அனுபல்லவி
ஸாகேத ராஜ குமார
ஸத்3-ப4க்த மந்தா3ர ஸ்ரீ-கர (மா)

சரணம்
1ஜத கூர்சி 2நாடக ஸூத்ரமுனு
ஜக3மெல்ல மெச்சக3 கரமுனனிடி3
3தி தப்பக 3ஆடி3ஞ்செத3வு ஸுமீ
நத த்யாக3ராஜ கி3ரீஸ1 வினுத (மா)


பொருள் - சுருக்கம்
மாரனின் தந்தை இராம சந்திரா! சாகேத இளவரசே! நற்றொண்டரின் மந்தாரமே! செழிப்பருள்வோனே! தியாகராசனால் வணங்கப் பெற்றோனே! மலையீசனால் போற்றப் பெற்றோனே!
  • எமக்கேனய்யா கவலை?

    • சோடுகட்டி,

    • நாடகக் கயிற்றினை, உலகெல்லாம் மெச்ச, கரத்தினில் பற்றி,

    • கதி தப்பாது, ஆட்டுவிக்கின்றாயன்றோ!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மாகு/-ஏலரா/ விசாரமு/
எமக்கு/ ஏனய்யா/ கவலை/

மருகு/-அன்ன/ ஸ்ரீ ராம சந்த்3ர/
மாரனின்/ தந்தை/ ஸ்ரீ ராம சந்திரா/


அனுபல்லவி
ஸாகேத/ ராஜ குமார/
சாகேத/ இளவரசே/

ஸத்3-ப4க்த/ மந்தா3ர/ ஸ்ரீ/-கர/ (மா)
நற்றொண்டரின்/ மந்தாரமே/ செழிப்பு/ அருள்வோனே/


சரணம்
ஜத/ கூர்சி/ நாடக/ ஸூத்ரமுனு/
சோடு/ கட்டி/ நாடக/ கயிற்றினை/

ஜக3மு/-எல்ல/ மெச்சக3/ கரமுனனு/-இடி3/
உலகு/ எல்லாம்/ மெச்ச/ கரத்தினில்/ பற்றி/

3தி/ தப்பக/ ஆடி3ஞ்செத3வு/ ஸுமீ/
கதி/ தப்பாது/ ஆட்டுவிக்கின்றாய்/ அன்றோ/

நத/ த்யாக3ராஜ/ கி3ரி/-ஈஸ1/ வினுத/ (மா)
வணங்கப் பெற்றோனே/ தியாகராசனால்/ மலை/ ஈசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - ஆடி3ஞ்செத3வு - ஆடி3ஞ்சேவு

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ஜத கூர்சி - சோடுகட்டி - நாடகத்தின் அங்கங்கள் யாவற்றினையும் ஒருங்கிணைத்து.

2 - நாடக ஸூத்ரமுனு - இறைவனுக்கு 'ஸூத்ரதா4ரி' - அதாவது 'பாவைக்கூத்தன்' - என்றோர் பெயருண்டு. தியாகராஜர், 'உபசாரமுலு சேகொனவய்யா' என்ற கீர்த்தனையில், இறைவனை, 'கபட நாடக ஸூத்ரதா4ரி' (வஞ்சக நாடகப் பாவைக்கூத்தன்) என்கிறார்.

மந்தாரம் - விரும்பியதை யருளும் வானோர் தரு

கதி - நடை

ஆட்டுவிக்கின்றாய் - நாமெல்லாம் பாவைகளாக, இறைவன் பாவைக்கூத்தனாக

மலையீசன் - சிவன்

Top


Updated on 17 Jul 2009

4 comments:

Govindaswamy said...

அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
மருகன்ன- பெரும்பாலானவர்கள் ‘மருக3ன்ன’ என்று தான் பாடுகிறார்கள். திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வாவிள்ள ராமஸ்வாமி ஸாஸ்த்ருலு & ஸன்ஸ் வெளியீடுகளிலும் இவ்வாறு தான் உள்ளது. மருகு3 என்பது ஒதுங்கும் இடம் அல்லவா?

மரு என்பதை மாரன் என்று எடுத்துக் கொண்டால் மரு + கன்ன (மாரனை ஈன்ற) என்று பதம் பிரிக்கலாமா? அன்ன என்பது அண்ணனைக் குறித்தாலும் சில பகுதிகளில் இது தந்தையையும் குறிக்கும்.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

'அன்ன' என்பது தமழ்நாட்டில், தெலுங்கு பிராமணர்கள், தந்தையையும், அண்ணனையும் குறிக்கப் பயன்படுத்துகின்றனர். முக்கியமாக, தஞ்சாவூரில் பகுதியில், பெரும்பாலான குடும்பங்களில், இச்சொல்லே தந்தையைக் குறிக்கும். நானும், எனது தந்தையை 'அன்ன' என்றுதான் அழைத்தேன்.

'மரு+கன்ன' என்று பிரித்தல் சரியல்ல என்று நான் கருதுகின்றேன். 'மருனி கன்ன' என்றிருந்தால்தான் சரி. 'மருனி கன்ன' என்ற சொல்லை தியாகராஜர் சில கீர்த்தனைகளில் பயன்படுத்தியுள்ளார்.

வணக்கம்
கோவிந்தன்

V Govindan said...

Comment by Raghu posted erroneously in another blog -

திரு கோவிந்தன் அவர்களுக்கு

'மரு+கன்ன' என்று பிரித்தல் சரியல்ல என்று தாங்கள் கூறியது எனக்கு ஏற்புடைத்து. மருகு+அன்ன= மருகன்ன என்பது சரி. ஒரு மொழியின் ஈற்றிலுள்ள உகரத்தோடு வருமொழியின் முதலிலுள்ள அகரம் சேரும் போது உகரம் கெடும். (உ.ம்) நிந்நு+அனவலஸினதே3மி = நிந்நனவலஸினதே3மி.
என்னுடைய ஐயம் மருகன்ன அல்லது மருக3ன்ன எனும் இவற்றுள் எது சரி என்பது தான். மருகு3 அன்ன என்று எடுத்துக் கொண்டால் ’புகலிடம் எனும்’ இராமா என்ற பொருள் தரும். மருகு3 தான்சரியென்று நான் கருதுகிறேன். மருகு என்றால் மறைவிடம், புகலிடம், பாதுகாப்பான இடம் என்று தானே பொருள்.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

தெலுங்கில் 'மருடு3' அல்லது 'மாருடு3' என்பது மன்மதனைக் குறிக்கும். எனக்குத் தெரிந்தவரை, தியாகராஜர், 'டு' விகுதியினை பயன்படுத்தாது, 'மரு' என்ற சொல்லுக்கு 'கு' விகுதி சேர்த்துள்ளார் என்று கருதுகின்றேன். 'மருனிகி அன்ன' என்பதற்குப் பதிலாக 'மருகு அன்ன' என்று பயன்படுத்தியுள்ளதாக நான் நம்புகின்றேன். 'மருகன்ன' என்பதுதான் சரியாகுமே தவிர 'மருக3ன்ன' என்பது தவறு என்று நான் கருதுகின்றேன். தெலுங்கு மொழியில், சந்தியிலும் மற்ற இடங்களிலும் hard consonant-களை soft consonant-ஆக்கும் விதி மிக்கு தளர்த்தப்பட்டுள்ளதனால் இவ்வளவு தொல்லைகள் என்றும் நான் கருதுகின்றேன். இதுவே தெலுங்கு மொழியினை பாடலாசிரியர்கள் தங்களிஷ்டப்படி பயன்படுத்த ஒரு ஏதுவாகின்றது.

வணக்கம்
கோவிந்தன்