அதி3 காது3 ப4ஜன மனஸா
அனுபல்லவி
எத3லோனெஞ்சுடொகடி
1பய்யெத3 கல்கி3னசோனொகடி (அதி3)
சரணம்
கொ3ப்ப தனமுகையாஸ
குத்ஸித விஷய பிபாஸ
மெப்புலகை ப3ஹு வேஸமிடி3
2உப்3ப3தில்லெத3ரு த்யாக3ராஜ வினுத (அதி3)
பொருள் - சுருக்கம்
- தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
- மனமே!
- அஃதன்று பஜனை;
- உள்ளத்தினில் நினைப்பதொன்று, வெளியில் நடப்பதோ மற்றொன்று; அஃதன்று பஜனை;
- பெரியதனத்திற்கு ஆசை; இழிந்த விடயங்களின் வேட்கை; பெயருக்கென பல வேடங்களிட்டு பெருமிதமுறுவர்; அஃதன்று பஜனை.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அதி3/ காது3/ ப4ஜன/ மனஸா/
அஃது/ அன்று/ பஜனை/ மனமே/
அனுபல்லவி
எத3லோன/-எஞ்சுட/-ஒகடி/
உள்ளத்தினில்/ நினைப்பது/ ஒன்று/
பய்யெத3/ கல்கி3னசோ/-ஒகடி/ (அதி3)
வெளியில்/ நடப்பதோ/ மற்றொன்று/
சரணம்
கொ3ப்ப/ தனமுகை/-ஆஸ/
பெரிய/ தனத்திற்கு/ ஆசை/
குத்ஸித/ விஷய/ பிபாஸ/
இழிந்த/ விடயங்களின்/ வேட்கை/
மெப்புலகை/ ப3ஹு/ வேஸமு/-இடி3/
பெயருக்கென/ பல/ வேடங்கள்/ இட்டு/
உப்3ப3தில்லெத3ரு/ த்யாக3ராஜ/ வினுத/ (அதி3)
பெருமிதமுறுவர்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - உப்3ப3தில்லெத3ரு - எல்லா புத்தகங்களிலும் 'உப்பதில்லெத3ரு' என்று கொடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கில், 'உப்3ப3தில்லு' (பெருமிதமுறுதல்) மற்றும் 'உப்பதிலு' (உண்டாக்கு) என்று இரண்டு தனி சொற்களுள்ளன. இவ்விடத்தில் 'உப்3ப3தில்லு' தான் பொருந்தும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - பய்யெத3 - இச்சொல்லுக்கு 'பெண்களின் தாவணி' அல்லது 'சேலைத் தலைப்பு' எனப் பொருள்.
அனுபல்லவியில் கூறப்பட்ட 'உள் - வெளி முரண்பாடுகள்' சரணத்தினில் விவரிக்கப்பட்டுள்ளன. நினைப்பு - சொல் - செயல் ஆகிய மூன்றும் ஒருமித்து இருந்தாலே எக்காரியமும் சரிவர நிறைவேறும். இதளை 'திரி-கரண-சுத்தி' என்பர். காஞ்சி மாமுனிவரின் 'அத்வைத சாதனை' (download) நோக்கவும்.
விடயங்கள் - புலன்களினால் அறியப்படுபவை
Top
Updated on 19 Jul 2009
No comments:
Post a Comment