Thursday, June 11, 2009

தியாகராஜ கிருதி - இதர தெ3ய்வமுல - ராகம் சா2யா தரங்கி3ணி - Itara Daivamula - Raga Chaayaa Tarangini

பல்லவி
இதர தை3வமுல வல்லனிலனு ஸௌக்2யமா ராம

அனுபல்லவி
1மத பே43மு லேக ஸதா3 2மதி3னி மருலு கொன்ன தன(கிதர)

சரணம்
3மனஸு தெலிஸி ப்3ரோசினனு மரசினனு நீவே ராம
தனவாட3ன தருணமிதே3 த்யாக3ராஜ ஸன்னுத (இதர)


பொருள் - சுருக்கம்
இராமா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • மற்ற தெய்வங்களினால் புவியில் சௌக்கியமா?

  • மத வேறுபாடின்றி எவ்வமயமும் உள்ளத்தினில் (உன்னிடம்) காதல் கொண்ட தனக்கு, மற்ற தெய்வங்களினால் புவியில் சௌக்கியமா?

    • (எனது) மனதறிந்து காத்தாலும், மறந்தாலும் நீயே;

    • தன்னவனெனத் தருணமிதுவே.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இதர/ தை3வமுல வல்லனு/-இலனு/ ஸௌக்2யமா/ ராம/
மற்ற/ தெய்வங்களினால்/ புவியில்/ சௌக்கியமா/ இராமா/


அனுபல்லவி
மத/ பே43மு/ லேக/ ஸதா3/ மதி3னி/ மருலு/ கொன்ன/ தனகு/-(இதர)
மத/ வேறுபாடு/ இன்றி/ எவ்வமயமும்/ உள்ளத்தினில்/ (உன்னிடம்) காதல்/ கொண்ட/ தனக்கு/ மற்ற...


சரணம்
மனஸு/ தெலிஸி/ ப்3ரோசினனு/ மரசினனு/ நீவே/ ராம/
(எனது) மனது/ அறிந்து/ காத்தாலும்/ மறந்தாலும்/ நீயே/ இராமா/

தனவாடு3/-அன/ தருணமு/-இதே3/ த்யாக3ராஜ/ ஸன்னுத/ (இதர)
தன்னவன்/ என/ தருணம்/ இதுவே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - மத பே43மு - சிவன், விஷ்ணு, சக்தி, கணபதி, முருகன், சூரியன் ஆகிய ஆறு விதமான உருவ வழிபாட்டு முறைகளைக் குறிக்கும்.

Top

விளக்கம்
1 - மத பே43மு லேக - மத வேறுபாடின்றி - தியாகராஜர், உருவங்களனைத்தினையும் தன்னுள் அடக்கிய, ஆயின், அத்தனை உருவங்களுக்கும் அப்பாற்பட்ட, பரம்பொருளினை, ராமனின் உருவத்தினில் கண்டார். இது குறித்து, தியாகராஜர் தமது கீர்த்தனைகளில் கூறியிருப்பது -

(1) - 'நீ சித்தமு நா பா2க்3யமு' - "மற்ற கடவுளரைக் கண்டவுடன், அவ்வுருவம், எனதுள்ளத்தினில், நீயாகி ஒளிர்ந்தது."

(2) - 'பரமாத்முடு3 வெலிகே3' - "பரம்பொருள், இங்கு விஷ்ணு, சிவன், தேவர்கள், மனிதர்கள், கோடிக்கணக்கான அண்டங்கள் யாவற்றினுள்ளும் திகழும் நேர்த்தியினை ஐயமறத் தெரிந்துகொள்வாய்."

இது குறித்து கீதையில் (அத்தியாயம் 7, செய்யுள் 11) கண்ணன் கூறுவது -

"எந்நெறியில் மனிதர்கள் என்னை வழிபட்டாலும், அந்நெறியிலேயே அவர்களுக்கு அருள்கின்றேன். மனிதர்கள் கடைப்பிடிக்கும் அத்தனை நெறிகளும் எனது நெறியே." (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

Top

2 - மதி3னி மருலு கொன்ன - உள்ளத்தினில் காதல் கொண்ட - இது குறித்து 'நாரத ப4க்தி சூத்திர'த்தினில் (செய்யுள் 2) கூறப்படுவது -

"அந்த பக்தி பரம்பொருளிடம் கொள்ளப்படும் காதலின் தன்மையதாகும்."

தமிழ்க் கவி பாரதியார், தனது 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா' என்னும் கவிதையினில், காதல் என்றும், அன்பு என்றும், பாசம் என்றும், கனிவு என்றும் பற்பல விதமாக மனிதர்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சியினை, இறைவனிடத்தில் அத்தனை முறைகளிலும் வெளிப்படுத்தி மகிழ்கின்றார். நம்முள் எழும் காதல் என்னும் உணர்வுக்கு நாம் கொடுக்கும் பல பெயர்கள் நமது அறிவீனத்தினாலேயே.

3 - மனஸு தெலிஸி - மனதறிந்து - இச்சொல் தியாகராஜரைக் குறிப்பதாகவோ, அல்லது இறைவனைக் குறிப்பதாகவோ, பொருள் கொள்ளலாம். ஆனால், இவ்விடத்தில், தியாகராஜரைக் குறிப்பதாகவே பொருள் கொள்வது, பாடலின் கருத்துக்கு உகந்ததாகும்.

Top


Updated on 11 Jun 2009

No comments: